This Day That Age - E-Tamil
எல்லாமே ஆறின கஞ்சிதான்; மீள் பதிவு; பழைய கள்ளு - புதிய பதிவு
Libertarian இருந்து Centrists ஆகி இருக்கிறது. தேர்வை நாளைக்கு எடுத்தால், வேறு முடிவு வரலாம்.
அன்று: தேர்வு எழுத வருகிறீர்களா?
நீங்களும் சோதித்துக் கொள்ள: Your Political Philosophy
அன்று: பெரியகுளம் - திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். "விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது" என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது.
நோட் #3: பவித்ராவின் ஆங்கில வலைப்பதிவில், அவருடைய விஷ்-லிஸ்ட் படித்திருக்கிறீர்களா?
1. கடவுளுக்குத் தெரியாதவர்கள் - ஆதவன் தீட்சண்யா
2. நீரோட்டம் - கண்ணன்: "நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் "பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்' என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது."
1999 முதல் தற்போதைய 'யுவா' வரை அமெரிக்காவில் எவ்வளவு சம்பாதித்துள்ளது? வெற்றிகரமான ஆங்கிலப் படங்கள், அமெரிக்காவிலும், மற்ற இடங்களிலும் எவ்வளவு ஈட்டுகிறது? இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், படங்களின் வரும்படி குறைந்துள்ளதா? ஹிந்தி 'அலைபாயுதே', 'ஹே ராம்' அமெரிக்காவில் மட்டுமாவது வெற்றிபெற்றதா? 'கிலாடி 420' போன்ற அமெரிக்க இந்தியர்களிடம் எடுபடாத படங்களுக்கு, எவ்வளவு பணம் வருகிறது?
"இத்தனை வருட சினிமா அனுபவம் தந்த படிப்பினை என்ன?"
"ரொம்பக் கஷ்டப்பட்டு 'செட்டில்' ஆயிட்டோம் என்று நினைத்தால், அது உண்மையில்லைன்னு தெரியுது! 'செட்டில்' ஆவது ஒன்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால், நடக்கிறது என்ன? இந்த வாழ்க்கை கடைசிவரைக்கும் உழைப்பைக் கேட்டுக்கிட்டே இருக்கு. அதுவும் சினிமா... குறைந்தபட்ச தர்மத்தோடு இருக்கிறவங்கதான் நிலைக்க முடியுது. இது நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னு தெரிஞ்சுக்க முடியாத உலகம். ஆனா அந்த ரெண்டு பேருமே கண் முன்னாடி சிநேகமா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுதான் விசேஷம்!"
"விமரிசனங்களை எப்படி எடுத்துப்பீங்க?"
"நல்லாயிருக்குன்னு சொல்லும் போது சந்தோஷப்படறோமே... அதுமாதிரி நெகட்டிவ் விமரிசனம் கேட்கும்போதும் 'லைட்'டாக எடுத்துக்க வேண்டியதுதான். நானே குத்தம் பண்ணியிருக்கலாம். ஆனால், 'பாய்ஸ்' படத்துக்கு விகடன் எழுதின விமரிசனம்... தப்பிருந்தா தலையில் குட்டலாம். ஸ்கேலில் ரெண்டு தட்டு தட்டலாம். முட்டிப்போட வைக்கலாம். கத்தியை எடுத்துச் செருகலாமா? அந்தக் காயம் அதிகமாக வலித்தது. என்னை வளர்த்துவிட்டு, என்னைக் கொண்டாடிவிட்டு, திடீர்னு தோளிலிருந்து தூக்கிப் போட்டால் என்ன செய்வேன், சொல்லுங்க. பரவாயில்லை.. இப்போ அந்தக் காயம் ஆறிவிட்டது!"
Recycle | E-Tamil | தமிழ்ப்பதிவுகள்
என்னமோ போங்க பாலா உங்க வலைல படிக்கவந்தா சுத்தல்ல உட்றதுக்குன்னே ஒரே லிங்கு மயம்
அதப் பாக்கப் போனா திருவிழாவுல தொலைஞ்ச குழந்த மாதிரி ஒங்க வலைக்கு திரும்ப வர பெரும்பாடா இருக்கு நமக்கு மன்க்( ஓல்டு மங்க்) ஒங்களுக்கு லிங்க் போடுங்க போடுங்க
அன்புடன்...
சுத்திவந்ததால் கால் வலிக்கு ரெஸ்ட் எடுக்கும்
குவாட்டர் கோவிந்தன்
சொன்னது… 6/19/2006 12:38:00 PM
---நமக்கு மன்க்( ஓல்டு மங்க்) ஒங்களுக்கு லிங்க் ---
E - T a m i l : ஈ - தமிழ் :: நம்பிக்கை
சொன்னது… 6/19/2006 12:44:00 PM
உங்கள இரண்டாவது தடவையாக தேர்ந்தெடுத்ததுக்கு எங்களுக்கு அதே பழைய கள்ளுதானா?
(ஹி ஹி கோவிந்தன் கஞ்சி குடிக்கறதில்ல)
சொன்னது… 6/19/2006 01:23:00 PM
மீள் பதிவுன்னு மீட்டும்போது ஏன் இன்றுடன் நின்றுவிடுகிறது. நாளை என்பதை ஏன் அறியமுடியவில்லை ?
கணிக்கவில்லை ?
சொன்னது… 6/19/2006 06:35:00 PM
---அதே பழைய கள்ளுதானா---
சட்டி... ஆப்பை ;-)
--நாளை என்பதை ஏன் அறியமுடியவில்லை ---
நம்பிக்கை போட்டியில் கலக்கியதற்கு வாழ்த்துக்கள்!
சொன்னது… 6/19/2006 10:22:00 PM
லிங்கையெல்லம் சொடுக்கிப் படித்து முடிவதற்குள் தாவு தீர்ந்துவிடும் போல் இருக்கிறது!
இருப்ப்பினும் சுவையான தகவல்கள்!
சொன்னது… 6/19/2006 10:25:00 PM
---படித்து முடிவதற்குள் தாவு தீர்ந்துவிடும் போல் ---
:-)
Information overload
சொன்னது… 6/23/2006 08:17:00 AM
கருத்துரையிடுக