திங்கள், ஏப்ரல் 19, 2004

சிந்தனையைக் கவர்பவர்கள்



மக்களை அதிகம் தாக்கம் செய்யும் புகழ் பெற்ற நூறு பேர்களை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அல் க்வெய்தாவின் அல்-ஸர்காவிக்கும் ஒஸாமாவுக்கும் பக்கத்தில் வாஜ்பேயும், புஷ்ஷ¤ம் இருக்கிறார்கள். ரப்பர் ஸ்டாம்புகளான கோ·பி அன்னானை 'வளரும் நாடுகளின் வாய்' என்றும் கொண்டலீசா ரைஸை 'அடுத்த உள்துறை அல்லது பாதுகாப்பு மந்திரி' என்றும் வருணித்துள்ளார்கள்.

ஆஸ்கார் கொடுக்கப்படும் பிரிவுகள் அனைத்திலும் வென்ற இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், ஹாரி பாட்டர் மூலம் சிறிய வயதிலேயே மக்களை ஆக்கிரமிக்கும் ரௌலிங் பாட்டி, அமெரிக்காவின் 'வணக்கம் தமிழகத்தை' நடத்தும் கேடி கௌரிக், கூட நம்ம ஐஷ்வர்யா ராயுக்கும் இடம் உண்டு.

நிஜமாகவே மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்ட பில் கேட்ஸ், போப், வ்ளாடிமிர் பூடின், நியுஸை கொடுக்கும் ரூபர்ட் முர்டாக், சர்ச்சைகளைக் கிளப்பும் அல்-ஜஸீரா, குப்பை கூளத்தைக் கூட கூவி விற்க செய்த ஈ-பே நாயகி மெக் விட்மான், அகியோர் கூட விப்ரோவின் ஆசிம் ப்ரேம்ஜி இருக்கிறார்.

பிரான்ஸ் சைக்கிள் போட்டியை வென்று கொண்டே இருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், பாஸ்டன் பாட்ரியாட்ஸின் கோச் பெலிசிக், ஜீசசின் அதிகாரபூர்வ இயக்குநர் மெல் கிப்ஸன், புத்தகம் முதல் எல்லாவற்றிலும் ரசனையை மேம்படுத்தும் கனிவுள்ள ஓப்ரா, கல்யாணம் நிச்சயித்த பிறகு கோப்பையே வெல்லாவிட்டாலும் டைகர் வுட்ஸ், கலி·போர்னியாவின் ம.கோ.ரா. ஆர்னால்ட், அமெரிக்காவின் நிரந்தர காதல் மன்னன் கிளிண்டன், வருங்கால ஜனாதிபதி ஹில்லாரி, கூட நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, டேவிட் பெக்கம் என்று பட்டியல் நீளுகிறது.

இவர்களில் பில் கேட்ஸ், ஓப்ரா, போப், மண்டேலா ஆகியோர் ஏற்கனவே டைம் பத்திரிகையின் 'வருட நாயகர்' பட்டம் சூட்டப்பட்டவர்கள். ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் பட்டியலில் (டொவால்ட்ஸ் தவிர) என்னால் ஒருவரைக் கூட டக்கென்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாததுதான் மிகப் பெரிய வருத்தம்!

ரால்·ப் நாடெர் போல வேற எந்த முக்கியமானவரை விட்டுவிட்டார்கள் என்று ஒரு பட்டியல் போடலாம்.

முழு விவரங்களுக்கு

சனி, ஏப்ரல் 17, 2004

இறப்பு... கொலை... விபத்து...

தமிழ் சிஃபி.காம்: நடிகை சவுந்தர்யா மரணம்

32 வயதான சௌந்தர்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் நடந்தது. மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த 'துவீபா' என்ற கன்னட படம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்புக்கள் வரவே படிப்பை விட்டுவிட்டு நடிகையானவர் சௌந்தர்யா.


ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியாவைத் தொடர்ந்து இன்னொரு ஹெலிகாப்டர் விபத்து. இந்தியாவில் காட்டப்படும் அலட்சிய மனப்பான்மை மனதில் நிழலாடுகிறது. பலவித கனவுகளுடன் இருக்கும் அனைவரையும் நினைக்கிறது மனம். திடீரென்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பகவத் கீதை தோன்றுகிறது. கொடுத்த வாழ்க்கைக்குக் கடவுளுக்கு நன்றியும்; ரம்பா, ஹேமாமாலினி செல்லும் விமானங்கள் பழுதின்றி பறக்கவும் மனம் வேண்டுகிறது.

Palestinians gather round Rantissi's Subaruஹமாஸ் தலைவர் கொலை: ஹமாஸின் தோற்றுனர் ஷேக் அஹ்மத் ஹாஸினைக் கொன்றது போலவே, அப்தெல் ஆஸிஸ் அல்-ராண்டிஸியும் இறக்கடிக்கப் பட்டார். இஸ்ரேலி ஹெலிகாப்டர்கள் அவரின் காருக்கு ஏவுகணைகள் கொண்டு தாக்கியிருக்கிறது. ஹமாஸின் நம்பர் டூவை வீழ்த்திவிட்டார்கள். ஆனால், மற்ற ஹமாஸின் அடுத்த தலைவர்கள், தொண்டர்களை வெகுவாக சூடேற்றும் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

பிறப்பு: 1947
படிப்பு: குழந்தை நல மருத்துவம்

தகவல்களுக்கும் படங்களும் -- பிபிசி

வெள்ளி, ஏப்ரல் 16, 2004

வாரயிறுதிக்கு ஓ போடு!

உலாக்கு உலா


Pardon my Planet
ரொம்ப நாளாய் உறங்கிய கலீல் கிப்ரான் விழித்துக் கொண்டு விட்டார்.

இட்லி-வடையின் உதவியால் காம்ப்ளெக்ஸ் நம்பர்களின் ஞாபகம் வந்தது. எட்டாவதிலோ ப்ளஸ் ஒன்னிலோ ஆரம்பித்து சுவாரசியமாய் கூடவே வந்து கொண்டிருந்தது. எதற்கு பயன்படுகிறது, எங்கு உபயோகிக்கிறார்கள் என்று யாராவது சொல்ல வேண்டும்.

பெயரிலி கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தது போல் பிகேஎஸ் ஆரம்பித்து உள்ளார். ரமணீயின் பதிவுகள் இன்னும் விளங்கிக் கொண்டேனா என்று சந்தேகத்தோடு படிக்க வைக்கிறது. இவருடையது direct delivery.

டைனோ என்று வலைப்பதிவு ஆரம்பித்து கவிதை டைம் கொடுக்கப் போகிறாரோ!

வலைப்பதிவில் சிறுகுறிப்பாக இட்டதை இன்னும் கொஞ்சம் விவரங்கள் சேர்த்து தமிழோவியத்தில் கட்டுரையாக வந்துள்ளது.

உலகத்தமிழின் 43, 44 பதிப்புகள் வெளிவந்து விட்டது. அதில் வெளிவந்த காலச்சுவடு கண்ணன் கட்டுரைக்கு மெய்யப்பர் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ்-உலகத்தில் வரும் தொடருங்கள் கதைப் போட்டியையும் நடந்த பறிமாடல்களையும் இன்றைய தினமலர் கம்ப்யூட்டர் மலர் விவரிக்கிறது.

பாராவின் காதல் அத்தியாயங்கள் கிறங்கடிக்கும். மெல்லினத்தில் வரும் இளவயதுக் காதல், அலகில்லா விளையாட்டின் கதாநாயகனை உழற்றும் வாத்தியார் மகளுடனான காதல் தோல்வி, தூணிலும் இருப்பான் மீனாட்சி என்று எல்லாவற்றிலும் தொட்டுக் கொள்ள உபயோகித்த காதலை தலைப்பிலே வைத்து 19.75 காதல் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. இந்த சமயமாவது ஹீரோவும் ஹீரோயினும் சேருவாங்களா???

Rudy Park by Darrin Bell and Theron Heir

ராஜா எழுதியது:
1 புதிய வானம் அஃமார்க் மசாலா படம். அது எந்த வகையில் சிறந்தது என்று விளக்கினால் நல்லது.

2 "அடிதடி" இடம் பெற்றிருக்கும் பட்டியலில் "என்னம்மா கண்ணு" இல்லாதது குறையாக தெரிகிறது. என்னம்மா கண்ணு பரவலாக அனைவராலும் பாராட்ட பட்ட வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம்.

கடமை கண்ணியம் கட்டுபாடு, கடலோர கவிதைகள், வேதம் புதிது, பூவிழி வாசலிலே, அண்ணா நகர் முதல் தெரு,நடிகன் ( சிறந்த நகைச்சுவை சித்திரங்கள், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு (சத்யராஜும், ரகுவரனும் சந்திக்கும் காட்சிகள் - மிக யதார்த்தம் ஆகியவை சத்யராஜ் படங்களுள் அமரத்துவம் பெற்றவைகளாக நான் கணிக்கிறேன்.


படங்களைப் பட்டியலிட்டது அவரது வளர்ச்சியை சொல்லவே. எப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன... எங்கே எப்படி மாற்றங்களைக் கொண்டிருக்கிறார்... எவ்வாறு சத்யராஜ் என்னும் பொருள் பரிணாமம் பெற்று மக்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதை சொல்ல, நான் கண்ட அவருடைய ஹிட் படங்களை பட்டியலிட்டேன்.

புதிய வானத்தை மிக சமீபத்தில்தான் பார்த்தேன். (அப்பொழுதெல்லாம் பொறுக்கியெடுத்துதான் படம் பார்ப்போம்... சில படங்கள் மசாலா என்பதால் தள்ளுபடி செய்யப்படும். 'ஜீவா' போன்ற சில காவியங்கள், அமலாவின் நீச்சலுடைக்காக தடா செய்யப்படும்.) சன் டிவியின் ஒரு சனி மதியத்தில் 'புதிய வானம்' காட்டப்பட்டது. அன்று மாலை விஜய் நடித்த படம். புதிய வானத்தின் ஆரம்பத்தில் டாங்கர் ட்ரெய்லர் நிறைந்த சண்டைக் காட்சி. கடைசியில் வீரதீர சண்டைக்குப் பின் குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிறார். அதே டாங்கர் ட்ரெயிலர்+க்ரேன்கள் நிறைந்த வளாகத்தில் ஹீரோயினை மீட்டெடுக்கிறார் விஜய், பத்து வருடத்திற்குப் பிறகு. புதிய வானமுக்கு முன்பே இவ்வகை சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கக் கூடும். ஆனால், ஜனரஞ்சகமான வெற்றிப் படம் என்பதை சொல்ல நினைத்தேன்.

'என்னம்மா கண்ணு' இன்னும் பார்க்கவில்லை. அண்ணா நகர் முதல் தெரு கூட கடைந்தெடுத்த மசாலாப் படம்தான். நல்ல பாடல் (மெதுவா... மெதுவா ஒரு காதல் பாட்டு...), ரெண்டு மூணு டிஷும் டிஷூம், காமெடி சரி விகிதாசாரத்தில் வந்த படம்.

வாரயிறுதிக்கு ஓ போடு!

எனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன் (51-100)

51. திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் - மு.தளையசிங்கத்தின் "கோட்டை"

52. மோகமும் வேகமும் - த.நா.குமாரசாமியின் "சீமைப்பூ"

53. நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் - வ.அ.இராசரத்தினத்தின் "தோணி"

54. இயல்பும் இன்பமும் - மா. அரங்கநாதனின் "சித்தி"

55. பேதம் உணராத குழந்தைமை - அ.முத்துலிங்கத்தின் "அக்கா"

56. கடவுளும் குழந்தையும் - பி.எஸ்.ராமையாவின் "நட்சத்திரக் குழந்தைகள்"

57. அழுக்காறும் ஆவேசமும் - எஸ்.பொன்னுத்துரையின் "அணி"

58. அன்பாலான உலகம் - து.ராமமூர்த்தியின் "அஞ்ஞானம்"

59. உதிர்தலும் உருமாற்றமும் - அ.செ.முருகானந்ததனின் "பழையதும் புதியதும்"

60. எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி - கிருத்திகாவின் "தீராத பிரச்சனை"

61. அதிகாரமும் அடிமைத்தனமும் - துர்கனேவின் "முமூ"

62. ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் - அ.மாதவையரின் "ஏணியேற்ற நிலையம்"

63. கசப்பும் இனிப்பும் - நா.பார்த்தசாரதியின் "வேப்பம்பழம்"

64. இயற்கை விடுக்கும் செய்தி - பிரபஞ்சனின் "பிரும்மம்"

65. பழைய முடிவும் புதிய முடிவும் - ஆர்.சூடாமணியின் "ரயில்"

66. உரிமையும் பருவமும் - கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு"

67. உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் - காளிந்திசரண் பாணிக்கிரஹியின் "நாய்தான் என்றாலும்"

68. தயக்கங்களும் தந்திரங்களும் - சி. ஆர்.ரவீந்திரனின் "சராசரிகள்"

69. விலைகொடுத்துக் கற்கும் பாடம் - தூமகேதுவின் 'போஸ்டாபீஸ்'

70. உயிரின் போராட்டம் - தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்"

71. இந்திரா பார்த்தசாரதியின் "நாசகாரக்கும்பல்"

72. அழித்தலும் அஞ்சுதலும் - உமா வரதராஜனின் "எலியம்"

73. தேடியதும் கிடைத்ததும் - கரிச்சான் குஞ்சுவின் "நு£றுகள்"

74. ஆவேசமும் குழந்தைமையும் - வில்லியம் பாக்னரின் "இரு சிப்பாய்கள்"

75. தந்திரங்களும் அவலங்களும் - நாஞ்சில் நாடனின் "ஒரு இந்நாட்டு மன்னர்"

76. அச்சமும் அருவருப்பும் - மலர்மன்னனின் "அற்பஜீவிகள்"

77. அகஅழகும் புறஅழகும் - சரத்சந்திரரின் "ஞானதா"

78. புரிந்துகொள்ள முடியாத புதிர் - ஜெயந்தனின் "அவள்"

79. மனத்தில் படியும் ஞாபகங்கள் - சுரேஷ்குமார் இந்திரஜித்தின் "அலையும் சிறகுகள்"

80. அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் - ஜே.வி.நாதனின் "விருந்து"

81. ஒருகணக் காட்சி - சிவசங்கரியின் "வைராக்கியம்"

82. மனத்தின் மறுபக்கம் - ந.முத்துசாமியின் "இழப்பு"

83. செய்யாத தவறும் தியாகமும் - தி.சா.ராஜூவின் "பட்டாளக்காரன்"

84. மூலதனம் என்னும் அளவுகோல் - விந்தனின் "மாடும் மனிதனும்"

85. ஐயமும் ஆவேசமும் - என்.எஸ்.எம்.ராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து"

86. புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம் - திலீப்குமாரின் "மூங்கில் குருத்து"

87. குகைக்குள் ஒரு பயணம் - ஆர்.ராஜேந்திரசோழனின் "கோணல் வடிவங்கள்"

88. இயற்கையும் எதார்த்தமும் - மாத்தளை சோமுவின் "தேனீக்கள்"

89. சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம் - என்.கே.ரகுநாதனின் "நிலவிலே பேசுவோம்"

90. அகமாற்றத்தின் நிறம் - ஜயதேவனின் "தில்லி"

91. நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள் - என்.எஸ்.எம்.ராமையாவின் "ஒரு கூடைக்கொழுந்து"

92. மனிதர்களை மதிப்பிடும் கலை - கல்கியின் "கேதாரியின் தாயார்"

93. திரும்பிச் செல்லமுடியாத இடம் - கேசவதேவின் "நான்?"

94. தன்னலத்தின் வேஷங்கள் - கே.ஏ.அப்பாஸின் "அதிசயம்"

95. வெறுப்பும் அன்பும் - சாந்தனின் "முளைகள்"

96. பொறாமை என்னும் நெருப்பு - ந.சிதம்பர சுப்ரமணியனின் "சசாங்கனின் ஆவி"

97. ஓங்கியலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல் - எட்கர் ஆலன்போவின் "இதயக்குரல்"

98. அமைதியடைந்த கடல் - சோமுவின் "உதயகுமாரி"

99. நாட்டமும் நடிப்பும் - கி.சந்திரசேகரின் "பச்சைக்கிளி"

100. உயிராசையும் தடுமாற்றமும் - ஐல்ஸ் ஐக்கிங்கரின் "ரகசியக் கடிதம்"

நன்றி: திண்ணை இலக்கியக் கட்டுரைகள்

வியாழன், ஏப்ரல் 15, 2004

சத்யராஜ் எனப்படும் பொரிம்பு

நேசமுடன் - மடல் இதழில் சத்யராஜ் தன்னை ப்ராண்ட் செய்வதை அலசியுள்ளார் சிஃபிராயர். சத்யராஜ் நடித்து மனதில் நின்ற படங்கள்:

நூராவது நாள்
காக்கி சட்டை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
தம்பிக்கு எந்த ஊரு
24 மணி நேரம்
எனக்குள் ஒருவன்
நான் சிகப்பு மனிதன்
பிள்ளை நிலா
பகல் நிலவு
முதல் மரியாதை
ஸ்ரீ ராகவேந்திரர்
மிஸ்டர் பாரத்
விக்ரம்
கடலோரக் கவிதைகள்
வேதம் புதிது
முதல் வசந்தம்
இரவுப் பூக்கள்
விடிஞ்சாக் கல்யாணம்
பாலைவன ரோஜாக்கள்
மந்திரப் புன்னகை
பூவிழி வாசலிலே
மக்கள் என் பக்கம்
இனி ஒரு சுதந்திரம்
அண்ணா நகர் முதல் தெரு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஜீவா
புதிய வானம்
மல்லுவேட்டி மைனர்
நடிகன்
பிரஹ்மா
வால்டர் வெற்றிவேல்
அமைதிப்படை
தாய்மாமன்
மாமன் மகள்
அடிதடி

வெங்கடேஷிடம் ஒரு வேண்டுகோள்: நேசமுடன் இதழை தமிழ் சமாசாரிலோ, சிஃபியிலோ அல்லது உங்கள் வலைப்பதிவிலோ இற்றைப்படுத்த வேண்டும். தேடுதல், சுட்டுதல், கோப்பாக்குதல் எல்லாம் கொஞ்சம் சுளுவாகும்!?!

(படப் பட்டியலுக்கு) நன்றி: தினகரன்

தோன்றிய மட்டும்...

1. ஆறு ரன் எடுப்பது எப்படி?
- ஷேவாகுக்கு ஒரு பந்து
- டிராவிடுக்கு ஒரு ஓவர்
- கங்குலிக்கு இரண்டு ரன் அவுட் பலிகள்
- டெண்டுல்கருக்கு மூன்று நாலு இன்னிங்ஸ்

2. மடல் இதழ் என்றால்?
- சுட்டிகள் கொடுத்து அதன் கீழ் ரெண்டு வரி விரிவுரை மட்டும் கொடுப்பது
- உறவின் ஆதுரத்தோடு நண்பனின் நோக்கில் எழுதப்படும் எதுவும்
- வலைப்பதிவில் இருந்து வித்தியாசமானது; வலையிதழ்களுக்காக எழுதப்படுவது
- ஆர்.எஸ்.எஸ். செய்தியோடை

3. ரஜினியின் அரசியல் அறிக்கையின் முக்கியத்துவம் ஏன்?
- பிகு செய்து கொள்ளும் பெண்தானே ஆணுக்குப் பிடிக்கும்.
- சரித்திர காலத்தில் இருந்து பத்து தலை ராவணனை வெல்லும்
மானுடன் ராமன்தானே நமக்குப் பிடிக்கும்.
- எல்லோரும் பேசுகிறார்கள்... நாமும் பின் தொடர்கிறோம்
- ஜெயலலிதாவுக்குப் பின் தனி மனிதனாக மக்களைக் கவருபவர்

4. தமிழ் இணைய இதழ்கள் என்ன செய்கிறது?
- வலைப்பூக்களுக்கு நல்ல மாற்றாக விளங்குகிறது.
- மடலாடற்குழுக்களுக்களிலும், வலைப்பதிவுகளிலும் வருபனவற்றின் மறுபதிப்பு.
- புதிய சிந்தனைகளுக்கும் ஆக்கங்களுக்கும் சண்டைகளுக்கும் ஊக்கம் தருகிறது.
- விகடன் குமுதம்; மிஞ்சி மிஞ்சிப் போனால் காலச்சுவடு தவிர எதுவும் படிக்க முடிவதில்லை.

5. தமிழில் லீனக்ஸ்...
- வெளிவந்து விட்டது
- என்றாவது யாராவது உபயோகிப்பார்கள்
- பரவலாக பயன்பெற போதுமான அங்காடித்தல் இல்லை
- எழுதியவர்கள் கூட இயக்க முடியாதபடி, நுட்பியல் வல்லுனர்களிடையே ஆங்கிலம் மிகுந்துவிட்டது

தலை நிமிர்ந்த தமிழர்கள் - திருவேங்கிமலை சரவணன்

இளைய தலைமுறைக்கு ஒரு இண்ட்ரோ

1. தமிழ்த் தென்றல் திரு.வி.க
2. கணித மேதை ராமானுஜம்
3. சி.பா. ஆதித்தனார்
4. கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி
5. பாவேந்தர் பாரதிதாசன்
6. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
7. மூதறிஞர் ராஜாஜி
8. நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை
9. காயிதே மில்லத்
10. டாக்டர் ராஜா சர். அண்ணாமலை செட்டியார்
11. எம்ஜிஆர் 1 2 3
12. ஜி.டி. நாயுடு 1 2
13. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
14. திருமுருக கிருபானந்த வாரியார்
15. காம்ரேட் ஜீவா
16. கே.பி. சுந்தராம்பாள்
17. காமராஜர் 1 2
18. என்.எஸ். கிருஷ்ணன்
19. அறிஞர் அண்ணா
20. எஸ்.எஸ். வாசன்
21. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
22. உ.வே.சாமிநத ஐயர்
23. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
24. புதுமைபித்தன்
25. மறைமலை அடிகள்
26. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்
27. ஆர்க்காடு இரட்டையர்கள் - டாக்டர் சர்.ஏ.ராமசாமி _ லட்சுமணசாமி
28. தளபதி மார்ஷல் நேசமணி

முதல் இரண்டு வாரம் யாருக்கு அறிமுகம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் கலைஞர் கருணாநிதியாக இருக்கலாம். இன்னொருவர் யாராக இருப்பார்? டாக்டர் அம்மா புரட்சி தலைவி??

புதன், ஏப்ரல் 14, 2004

நாம் இருப்பது சுதந்திர நாடுதானா?

தேர்தல் விளம்பரம் அனைத்திற்கும் முன் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தனியார் தொலைகாட்சிகள் பெறுகிவிட்ட இந்தக் காலத்தில் இது எவ்விதம் சாத்தியம் என்று தெரியவில்லை. தமிழன் டிவியில் விளம்பரங்களுக்கு நடுவே நிகழ்ச்சிகள் வருகிறது. ஜெயாவில் எது விளம்பரம், எது செய்திகள் என்றே தெரியவில்லை. இவற்றுக்கு முன்மாதிரியான சன் தொலைக்காட்சியும் சோனியா பிரசாரம் செய்வதையும், கருணாநிதியின் அறிக்கைகளையும் படிக்கிறது. ராஜ் டிவியின் நிறுவனரில் ஒருவர் பிஜேபியில் சேர்ந்துவிட்டார். அங்கு செய்தி வாசிக்க சன் டிவியில் இருந்து மாற்றலாகி வந்துள்ள நிர்மலா பெரியசாமிக்கும் திமுக சீட் கொடுக்காத வருத்தம் உண்டு. 'ஸ்டார்' விஜய் நடுநிலைமை என்றால் வழவழா கொழகொழா என்பது போல் ஒரு நிகழ்ச்சியை, 'சலனம்' தொடரின் க்யூட்டான மந்த்ரா பேடி போன்ற ஹீரோயினைக் கொண்டு நடத்துகிறது.

விளம்பரம் வெளிவருவதற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு முன்பே 'தேர்தல் கமிஷனி'டம் விளம்பரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் ஒரு நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்களிலோ தங்களின் முத்திரையை பச்சை விளக்காகவோ சிவப்பாகவோ சொல்வார்கள். அதன்பின் டிவியில் அந்த விளம்பரங்கள் வெளிவரலாம். இப்போதைக்குத் தொலைக்காட்சிக்கு மட்டும்தான் இந்தத் தடைக்கற்கள்.

தனிமனிதத் தாக்குதல் விளம்பரங்கள் எங்கும் பரவலாகப் பின்பற்றப்படுவதுதான். ஜான் கெர்ரி புஷ்ஷையும், புஷ் கெர்ரியையும் பரஸ்பரம் 'கையாலகாதவர்கள்', 'ஈராக்கை சமாளிக்கத் தெரியாதவர்', 'பெரு நிறுவனங்களின் ப்ராக்ஸி', 'பண முதலையாக இருந்து கொண்டு பணக்காரர்களைத் தாக்குபவர்' என்று லாரி-யடி தண்ணீர் சண்டை போடுபவர்கள். கருக்கலைப்பு அமைப்புகளும், வேட்டைக்காரர்கள் சங்கங்களும், துப்பாக்கி தூக்குவோர் கழகங்களும் ஜனாதிபதிக்காக விளம்பரங்களை ஒளிபரப்புவார்கள். ஆனால், விளம்பரத்தில் எங்காவது ஒரு மூலையிலாவது வேட்பாளர் தோன்றி 'நான் ஜான் கெர்ரி (அல்லது ஜார்ஜ் டபிள்யூ. புஷ்). நான் இந்த விளம்பரத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறேன்' என்று முழங்க வேண்டும்.

ஆனால், இவ்வாறு சேற்றை வாரித் தூற்றினால் முக்கிய வேட்பாளர்கள் இருவருமே பன்றிகள் என்று மக்கள் கருதிவிடுவார்கள். அதற்காக இவ்வகை விளம்பரங்களை அடக்கி வாசிக்குமாறு ஊடகங்கள் (டைம்ஸ் இன்ன பிற பத்திரிகைகள் மற்றும் ஏபிசி போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள்) வலியுறுத்தும். எனினும், போருக்கு செல்லாமலே 'உள்ளேன் ஐயா' போட்டவர், கென்னடியின் ஊதுகுழலுக்கு ஏற்ப ஆடுபவர் என்றும் தொடர்ந்து எஸ்.எஸ். சந்திரன் போன்ற இரண்டாம் கட்ட பேச்சாளர்கள் மூலம் திட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.

இதன்மூலம் ஷங்கர் படத்துக்கு ஓட்டா என்றும் ஹே ராம் வெறியருக்கு வேட்டா என்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம். செய்தித்தாள் படிப்பவர்கள்தான் ஓட்டளிக்க வரமாட்டார்களே?!

பாலாஜிக்கு ஹரே ராம் - ஞானக்கூத்தன் (1996)

கேள்விப்பட்டேன் அவளைப் பற்றி
ஒருமுறை கூடப் பார்த்ததில்லை ஆனால்,
ரவிக்கை மட்டுமாம் மேலே, தாவணி
எதுவும் இராதாம். இடுப்பில்
முடிச்சுப் போட்ட ஈரிழைத்துண்டாம்.
நழுவாது. ஆனால் காற்றில் பறக்குமாம்.

வீட்டுக் கூடத்தில் ஏதோ வேலையாய்
இருந்தவன் வாசலில் நிழலாடத்
திரும்பி பார்த்தேன். இருந்தாள்.
பாலாஜிக்கு ஹரேராம் என்று
பெயரிடப்பட்ட பிச்சைக்காரி,
முன்னே சொன்ன வர்ணனைக்கேற்ப

உடம்பு கோதுமை வர்ணம். பிச்சை
அரிசியில் கிடந்த வாயிலிட்டுப்
பல்லால் கொறித்தாள். அவளைக் காற்று
சோதனை போட வெட்கித் திரும்பினேன்.
பழைய சேலை ஒன்றைத் தந்தேன்.
உடுத்தவில்லை. மடித்துக் கொண்டாள்.

மறுநாள் கேள்விப்பட்டேன். உள்ளூர்க்
குதிரை வண்டிக்காரன், மண்டபத்தில்
அவளிடம் அயோக்யனானான் என்று,
மனதைக் கொஞ்சம் அரித்தது. நான் தந்த
சேலையில் இருந்தாளா அவள் அப்போது?

செவ்வாய், ஏப்ரல் 13, 2004

நினைவூட்டல்கள்

1. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் - சிறுகதைப் போட்டி

2. ஆண்டு விழா மலர் - அமீரகத் தமிழிணைய நண்பர்கள் அமைப்பு

புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு