to be frank with you , நான் ஆ.வி பாத்துட்டு கிளப்புக்குள்ள சேந்ததே ஒரு பார்வையாளனாகத்தான். பங்கேற்பாளனாக இல்லை. . ஹா இது தான் நமக்கான இடம். தடையில்லாம் இனிமே படிக்கலாம்னு நெனைச்சேன். உங்க புஸ்தமெல்லாம் படிச்சது, புடிச்சது இதெல்லாம்
" அப்பா. நலம். ஹாஸ்டலில் மெஸ்ஸுக்கு பணம் கட்டவேண்டும் (பொய்) .உடனே ஐநூறு ரூபாய் தந்தி மணியார்டரில் அனுப்பவும்" அப்படிங்கற மாதிரியான கடிதம் தவிர்த்து, வேற எழுதறது எனக்கு பழக்கமே இல்லை. ஒரு ஆங்கில மாதமிருமுறை பத்திரிக்கையில், கரஸ்பாண்டென்ட்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதால், ஆங்கிலம் மட்டும் சுமாராக வரும். கிளப்புக்குள்ளே சேந்தப்புறந்தான் எனக்கே தெரியும் ஆங்கிலத்த விட தமிழ் நல்லா வருதுன்னு.
எவ்ளோ அசையாக வந்தேன் தெரியுங்களா ? ஒரு நாள் ஓய்வா இருந்தப்போ பழைய மடல்களை யெல்லாம் பாத்தேன் . மனசு ஆத்து ஆத்து போறது சார். எவ்ளோ நல்ல டாபிக், எத்தனை பேரோட பங்களிப்பு, மனசு புண்படாத கால் வாரல்கள், புதுசு புதுசான செய்திகள், எத்தனை எழுத்தாள , நூல் அறிமுகங்கள். அதெல்லாம் எங்க போச்சுன்னே தெரியலையே? சே. அப்பமே நான் சேந்திருக்கணும் .
புச்சு புச்சா இன்னும் எழுதவேண்டியது எவ்ளோ இருக்கு?
Madras Musings s.முத்தையா பத்தி,
'கரைந்த நிழல்கள்' பத்தி,
நகைச்சுவை துளியுமில்லாமல் அங்கதம் எழுதும் இ.பா பத்தி,
ஆர்.சூடாமணியின் கதைகள் பத்தி,
ஜெயகாந்தனின் தற்போதைய சமரசங்கள் பத்தி,
கிருத்திகாவின் 'வாசவேஸ்வரம் பத்தி,
எம்.வி.வி யின் 'பெட்கி' பத்தி,
திசைகள் பத்தி,
சாவி உருவாக்கிய எழுத்தாளர்கள் பத்தி,
சுப்ரமண்ய ராஜு 'கசடதபற வில்' எழுதிய மீராவின் கவிதைதொகுப்பின் விமர்சனம் பத்தி ( மீரா நல்ல கவிஞர். ஆனால் கவிதைகளே எழுதவில்லை - சு.ராஜூ),
ஆத்மாநாம் கவிதைகள் பத்தி, ;
'கால்களின் ஆல்பம்' பத்தி,
சிங்கப்பூர் அரவிந்தன் பத்தி,
வத்சலாவின் கவிதைகள் பத்தி,
சத்தியமாக கண்ணில் நீர் வரச்செய்த 'தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள் ' என்கிற ஈழக்கவிதை பத்தி,
Aldous Huxely பத்தி,
பாதிராஜ்யம் பத்தி,
யே ஜோ ஹை ஜிந்தகி பத்தி,
'different strokes' பத்தி,
நளினி சிங்கின் டெலி ரிபோர்ட்டிங் பத்தி,
M.J. அக்பர் பத்தி,
அல்பாயுசில் போய்விட்ட அற்புதமான ந்யூஸ் ப்ரசென்ட்டர் அப்பன் மேனோன் பத்தி,
வயலார் பாட்டு பத்தி,
சௌந்த்ர்யாவின் த்வீபா பத்தி,
எம்.எஸ்.சத்யு வின் கரம் ஹவா பத்தி,
'பரதனின் 'தகரா' , 'சாவித்திரி ' பத்தி,
ஜென்சி யோட பாடல்கள் பத்தி,
சுதா வின் 'குறையன்றுமில்லை' பத்தி,
phaneesh murthy யின் திருவிளையாடல் பத்தி,
இளையராஜாவின் கன்னட திரைஇசை பத்தி,
புட்டண்ணா கனகாலின் 'நாகரஹாவு' பத்தி,
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் பத்தி,
அகில பாரத நாடக விழாவில் முதல் பரிசு வாங்கிய மாலனின் sci-fi ரேடியோ நாடகம் பத்தி,
ருத்ரையா பத்தி,
ஆற்றூர் ரவிவர்மா பத்தி,
'சங்க சித்திரங்கள்' பத்தி,
அ.ச.ஞா வின் தமிழ் பத்தி,
வாத்யாரின் 'ஆர்யபட்டாவிற்கும்' எஸ்.பாலச்சந்தரின் 'அந்த நாளு'க்கும் உள்ள ஒற்றுமை பத்தி,
டி.ஆர் ராமச்சந்திரன் பத்தி, காளி.என்.ரத்தினம் பத்தி,
ஞானசவுந்தரி பத்தி, மகேந்திரனின் 'மெட்டி' பத்தி, அழியாதகோலங்கள் பத்தி,
பாலுமகேந்திராவின் திண்ணையில் வந்த நேர்காணல் பத்தி,
அற்புதமான நடிகை ஷோபா பத்தி, எஸ்.வி ரங்காராவின் குணச்சித்திர நடிப்பு பற்றி,
உங்கள் கனவுக்கன்னி ஜெயசித்ரா பத்தி,
டில்லி பாரதி பாலு என்கிற 'நகுபோலியன்' பத்தி,
கோவை ஞானி பத்தி,
பெங்களூர் ரவிச்சந்திரன் பத்தி,
எம்.ஜி.வல்லபனின் தைப்பொங்கல் படம் பத்தி,
அக்கிரகாரத்தில் கழுதை இயக்கிய ஜான் பிரகாம் பத்தி,
ரா.கி.ர வின் கிருஷ்ணதேவராயர் பத்தி,
பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாபாட்டி பத்தி ,
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஹாம்பர்கர் பிட்ஸா உண்டு 'கஷ்டத்தில்' ஜீவித்திருக்கும் நம் பரதேச மென்பொருளாளர்கள் பத்தியும் , அவர்களைப் பற்றி எங்கள் சுதேசி மனங்களில் ஏற்பட்டிருக்கும் 'தட்டையான பிம்பம்' பத்தியும் எழுத வேண்டியது எவ்ளோ இருக்கு?
இன்னொரு முக்கியமான இசைத் தடமான country music பற்றி யார் எழுதப் போகிறீர்கள்? ஹாங்க் வில்லியம்ஸ், ஜெண்டில்மேன் ஜிம் ரீவ்ஸ் என்று தொடங்கி நடாலியா இம்ப்ரோக்லியா வரை நீளும் சுவையான வரலாறு இல்லையா அது?
இந்தக் கடிதத்தை யார் எழுதியது என்பதற்கு ராகாகியில் இரா. முருகன் கொடுத்த முன்னுரையில் இருந்து ஒரு பகுதி:
Dear all,
I am reproducing an interesting mail I reced from one of our friends. (u can easily guess who it is from the writing style :-)
What an impressive list of items to cover in RKK! Thanks dear ....
Why can't we start forthwith?
rgds,
era.murukan