வெள்ளி, டிசம்பர் 08, 2006

2005-06 Reminiscences

சென்ற வருட இறுதியில் விக்கி (தண்டோரா - இது கண்டதை சொல்லும்) வாக்குறுதி கொடுத்திருப்பது போல், 2005 நினைவுகளை அசை போட்டேன்.

அந்தப் பதிவுகள்:


  1. தமிழ் சினிமா - 2005

  2. டாப்டென் - 2005 :: நத்திங் சீரியஸ், ஒன்லி ·ப்ரிவலஸ்

  3. புத்தகங்கள் - 2005

  4. திரைப்பாடல்கள் - 2005

  5. பிரச்சினைகள் - 2005

  6. பட்டியல்கள் - 2005

  7. திரைப்படங்கள் - 2005

  8. வலைப்பதிவுகள் - 2005



2006 :: வலைப்பதிவுகளில், தமிழ்ச்சூழலில், வலையகங்களில், 2006-இல் என்ன நடக்கலாம்? என்ற என் கணிப்புகள் (நடந்த நிகழ்வுகளுடன் மீள்பதிவு):


  1. விகடன் கவர்-ஸ்டோரியாக வலைப்பதிவாளர் ஆகலாம். குறைந்தபட்சம், பதிவுகளில் வருபவைகளில் சிலதாவது பத்திரிகை column-ஆக மறுபதிப்பாகலாம்.

    குங்குமத்தில் செந்தழல் ரவி, மதுமிதா, லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற வலைப்பதிவர்கள் இடம்பிடித்தார்கள்.


  2. பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாகும் காலம் இது. மறுமொழிகளை சேகரித்து தருவதற்கென்றே தமிழ்மணம், தேன்கூடு, கூகிள் ரீடர் போல் ஒரு திரட்டி உருவாகலாம்.

    ஆங்கிலத்தில் இது போன்று பல வெப் 2.0க்கள் உருவாகி இருந்தாலும், தமிழுக்கென்று தனியாக எதுவும் வரவில்லை.


  3. கிரிக்கெட்டைத் தொடர்ந்து தமிழ் சினிமா, செய்தி, கிண்டல் போன்றவற்றுக்கு கூட்டு வலைப்பதிவு வரலாம்.

    சென்னைக் கச்சேரி: தமிழ் பதிவுலகம் 2006 - நம்ம வியூ பாயிண்ட் என்று இந்த வருடம் உருவான குழுப்பதிவுகளைத் தொகுத்துள்ளார். விக்கிப்பசங்க இன்னும் புதுக்கருக்கு அழியாதவர்கள். அவர்கள் தவிர்த்து பார்த்தால், சென்னபட்டிணம் தவிர எதுவுமே கவரவில்லை.


  4. கூகிள் விளம்பரங்களை விட, விற்பனையாளர்களே வலைப்பதிவர்களை நேரடியாக அணுகுவார்கள். விமர்சனங்களும், அறிமுகங்களும் product positioning செய்யப்படும்.

    ஊசி aka pin சொல்வதைப் பார்த்தால் பொய்த்து விட்டது. தற்போதைக்கு புதிய இசையை வெளியிடுபவர்கள், புத்தகங்களை பிரசுரிப்பவர்கள் போன்றோருக்கு வலைப்பதிவுகளின் மூலம் இலகுவான மையமான கேந்திரம் எதுவும் இல்லை.


  5. விகடனைப் போல் குமுதமும் சந்தா கட்டி படிக்கும் தளமானாலும், வெற்றிகரமாக வாசகர்களைத் தக்கவைத்து கொள்ளும்.

    குமுதம் இன்றளவும் இலவசமாகவேத் தொடர்கிறது. துக்ளக் வலையகத்தைத் தொடங்கியவுடன் சந்தாவைக் கோரியது. (சைட் பார்: ஜூலை '06 தொடங்கிய Tamil Newsக்கு எதையாவது தேடித் தடுக்கி வந்து பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மாதத்தில் 70,000-ஐ தொடப் போகிறது. இதில் எத்தனை பேர் ரிப்பீட்டு, எத்தனை பேர் அப்பீட்டு என்பது தெரியவில்லை).


  6. வலைப்பதிவர்களின் குறிப்புகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டு அச்சேறலாம்.

    பூங்கா, கில்லி, Snap Judgement என்றுதான் மீள்குறிக்கப்பட்டதேத் தவிர, அச்சில் வரக் காணோம்.


  7. வலைப்பதிவுகளில் ஏற்கனவே எழுதிவிட்டதாகவோ அல்லது திருடி விட்டதாகவோ, ஏதாவதொரு பிரபலமான எழுத்தாளருக்கு தர்ம அடி கொடுக்கப்படும்.

    நாடு கட்டிய நாயகன் :: எம்.கே.குமார் | பத்ரி | ஓகை நடராஜன் |


  8. அனுமதியின்றி வலையேற்றியதாகவோ, தரக்குறைவாக எழுதியதாகவோ பதிவர் மீது வழக்குத் தொடரப் படலாம்.

    பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், வழக்கம் போல் புறக்கணித்து கவனியாமல் தவிர்ப்பதே நிரந்தரமாகத் தொடரப்பட்டது.


  9. தமிழ்மணம், தேன்கூடு, போன்ற தமிழ் வலைதிரட்டிகளில் இணைத்துக் கொள்ளாமல் தனிபட்ட சுற்றில் வலைப்பதிபவர்கள் அதிகம் ஆவார்கள்.

    தானாக விருப்பப்பட்டு ஒதுங்கி நின்று, பதிவையும் தொடர்பவர்கள் எண்ணிக்கை: 1


  10. தேர்தலுக்கு பின் 'ஏன் ஜெயித்தார்கள்? எப்படி தோற்றார்கள்' அலசல்களும், 'சிவாஜி' வெளிவந்து ஒரு மண்டலம் முடிந்தவுடன் போஸ்ட மார்ட்டங்களும், உலகக் கோப்பை விமர்சனங்களும், அமெரிக்காவிற்கான வசவுகளும் நிறையும்.

    கால் பந்து உலகக் கோப்பையை விட ஜிதான் நிறைய அடிபட்டார். தமிழ் நாடு தேர்தல் தொடர்கதையாக உள்ளாட்சி இன்றும் முடிந்தபாடில்லை. அமெரிக்கா மேலான தாபங்களும் வடியவில்லை.






| |

11 கருத்துகள்:

வழக்கம்போல் அறிவிப்பு பதிவை எழுதிவிட்டேன். எந்த தலைப்பை எடுத்தாலும் ஜனவரியை விட்டு நகரமாட்டேங்கிறது. போனவருஷமே இப்படி கலக்கியிருக்கிறீர்கள் .. ஹூம்ம்ம் .. பாஸ்டனில் மட்டும் 36 மணிநேர clock ஏதாவது இருக்கிறதா என்று தெரிந்தகொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது ;)

அதுசரி 2006 கணிப்பில் அந்த 2nd point???

You mean, a service like CoComment ??

நன்றி விக்கி

---பாஸ்டனில் மட்டும் 36 மணிநேர clock ஏதாவது இருக்கிறதா---

வருட ஆரம்பத்திலேயே அடுத்த வருடத்துக்கான பட்டியல் தயார் செய்ய ஆரம்பித்து விடலாம் ; )

பிடித்த பாடல்களை ராகா அல்லது ம்யூஸிக் இந்தியா ஆன்லைன்.காமில் சேமிக்கவும்.

பட விமர்சனங்கள், வலைப்பதிவில் சூடாகப் பேசப்பட்டவை என்று பலதையும் அவ்வப்போது எங்காவது புத்தகக்குறியிட்டு விடலாம்.

கடைசியாக, ரீடிஃப் தலை பத்து, சன் டிவி, சுஜாதா கற்றதும் பெற்றதும் என்று கொஞ்சம் அக்கம்பக்கம் மேய வேண்டும் ; )


---a service like CoComment ---

அதே! தானியங்கியாக, புதிதாக வரும் அனைத்து பின்னூட்டங்களையும், ஒரே இடத்தில் படிக்கும் வசதி!

//தானாக விருப்பப்பட்டு ஒதுங்கி நின்று, பதிவையும் தொடர்பவர்கள் எண்ணிக்கை: 1//

??

அப்ப இந்த வருஷமும் இந்த மாதிரி லிஸ்ட் போடிவீங்களா???

பாபா,
கலக்கல் அலசல். வலையுலகின் நாஸ்ட்ரடாமஸ் எனும் பட்டத்தை உங்களுக்கு வழங்கலாம்..

:)

எப்டிங்க நீங்க மட்டும் இப்டி..?

அடேங்கப்பா!
அடுத்தப் பட்டியல் எப்போ?

@வி.பி.

---இந்த வருஷமும் இந்த மாதிரி லிஸ்ட்---

நிறைய படம் பார்க்கவில்லை. (அதனால் என்ன... மற்றவர்களின்/படித்தவர்களின் விமர்சனத்தை வைத்து ஒப்பேத்திடலாம் ; )

போட ஆசைதான்! நேரம் ஒதுக்க வேண்டும்.

@சிறில்

---வலையுலகின் நாஸ்ட்ரடாமஸ் எனும் பட்டத்தை---

வருடாவருடம் நடப்பதுதானே சிறில் ; ))

@ஜி

---அடுத்தப் பட்டியல் எப்போ---

விஷ்ணுவர்தனோ பத்மப்ரியாவோ ஆர்யாவோ பூஜாவோ பரத்தோ பதில் சொல்லணும் : P

Copyright Tool Will Scan Web For Violations - WSJ.com: A new online tool developed by startup Attributor seeks to combat copyright violations by combing the entire Web for unauthorized uses.

அரைத் தூக்கத்திலோ அவசரத்திலோ, ஊசியின் (ஊசி aka pin) காமெண்ட் ரிஜெக்ட் செய்து விட்டேன்:

/*அனுமதியின்றி வலையேற்றியதாகவோ, தரக்குறைவாக எழுதியதாகவோ பதிவர் மீது வழக்குத் தொடரப் படலாம்.

பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், வழக்கம் போல் புறக்கணித்து கவனியாமல் தவிர்ப்பதே நிரந்தரமாகத் தொடரப்பட்டது */

Check this out

blogger's use of an agency's paparazzi photos puts the legal spotlight on copyright infringement

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு