செவ்வாய், மே 31, 2005

அரைகுறைப் படமும்

Click on the Image to Enlargeஅந்தக்கால ஆனந்த விகடனில் 'அரைகுறைப் படமும் அவசர பிச்சு'வும் வரும். மறுபதிப்புகளிலும், சில அசல்களையும் பார்த்து அசந்திருக்கிறேன்.

'காது காதுன்னா வேது வேது' என்று புரிந்து கொண்ட கதையை எங்களவர்களும் தப்பும் தவறுமாய் தேவைகளை எழுதி வைப்பார்கள். ஜாதகத்தை பலப்படுத்துவதற்காக, நாங்களும் சந்தைக்கு இன்னும் வராத பீட்டா, ஜாவா, ஷார்ப் எல்லாம் பயன்படுத்தி எழுதிவிடுவோம். கண்ணால் காணாததை கண்டதாகச் சொல்லும் போலி சாமியார் போல் சிலர் அதை உபன்யாசித்து விற்று வைப்பார்கள்.

இந்த கேலிச் சித்திரத்தை பத்து வருடம் முன்பு பார்த்து 'நம்முடையது இவ்வாறு இருக்காது' என்று சிரித்துச் சென்றிருக்கிறேன். வேலையில் அமர்ந்த சில காலத்திலேயே செய்முறை விளக்கம் கிடைத்தது. மறக்க முடியாத புகைப்படம்.



போன படத்துக்கும் இதற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை.



(c)Danzinger - Click on Image to Enlargeஅமெரிக்காவில் (இங்கிலாந்திலும்?) மே மாதக் கடைசி திங்கள்கிழமை விடுமுறை. நண்பர்களை சந்தித்துப் பேச முடிந்தது. 'நீ... என்னப்பா! ஓரமாக உட்கார்ந்து கொண்டு கதைக்குதவாததை வைத்து ப்ளாக் நடத்துகிறாய்' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.

நானும் ரொம்ப சேரியமாய் 'முன்பெல்லாம் பேசுவோம்; பகிர்ந்து கொள்வோம். சிலர் அவற்றை எழுத்திலும் சேமித்து வைக்கிறார்கள். விவாதத்துக்குள்ளாக்கிறார்கள்.' என்றெல்லாம் விளக்க முயன்றேன்.

எனினும் பெரும்பாலானவர்களின் மனத்தில் இருக்கும் படிமம் இதுதான்:

வியாழன், மே 26, 2005

கல்லூரி தரப் பட்டியல்

சில மாணவர்களுக்கு எந்தக் கல்லூரியில் சேரலாம் என்று குழம்பும் அளவு மதிப்பெண் எடுத்து விடுவார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கான கருத்துக் கணிப்பையும் தரப்பட்டியலையும் டேட்டாக்வெஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

வழக்கம் போல் ஐஐடி கான்பூர், சென்னை, மும்பை, காசி, எல்லாம் இடம் பிடித்திருக்கிறது.

தலை பத்தை விட்டு பிட்ஸ், பிலானி இறங்கியிருப்பது வருந்தத்தக்கது. திருச்சி, வாராங்கல், சூரத்கல் ஆகியவற்றை விட பிலானி பின்தங்கியுள்ளதாக சொல்வது இன்னும் வருத்தம். ஜாதவ்பூர் போன்ற பெருமைவவாய்ந்த கல்லூரிகளை விட கிருஷ்ணா போன்ற புதியவர்கள் மதிப்பைப் பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.

நுழைவுத் தேர்வுகளை குறித்து விவாதிக்கும் இந்த நேரத்தில், நுழைவுத் தேர்வை உதாசீனப்படுத்தும் பிட்ஸ், பிலானியின் சரிவை கருத்தில் வைத்துக் கொள்வது முக்கியம்.

என்னுடைய முந்தைய பதிவு: நுழைவுத் தேர்வுகளைத் தவிர்ப்போம்

தொடர்புள்ள செய்தி: CIOL : News : IIT Kanpur voted best tech school: Survey

Anniyan Trailer

அன்னியனின் திரை முன்னோட்டம் இங்கே கிடைக்கிறது. (தகவல்)

விண்டோஸ் மீடியா ப்ளேயரில் ஒலி மட்டுமே கேட்டது. ஒளியுடன் பார்க்க எனக்கு டிவெக்ஸ் தேவைப்பட்டது. உங்களுக்குப் பொருத்தமானதை இறக்கிக் கொண்டுவிடுங்கள்.

ட்ரெயிலர் பார்த்தவுடன் தோன்றிய சில:

  • நவநவீன ஆடைகளிலும் சதா அழகாய்த்தான் இருக்கிறார். (கண்ணும் கண்ணும் நோக்கியா).

  • I Know What you did last Summer-இல் ஆரம்பித்து மேட்ரிக்ஸ் வரை 'எப்படம் யார் யார் எடுத்தாலும், அப்படம் தமிழ்ப்படம் ஆக்குவது அறிவு' என்று கூட்டுப்பதிவு முதல் காலச்சுவடு வரை இடிபடப்போவது உறுதி.

  • 'எகிறி குதித்தேன்' பாடலின் ஆரம்பத்தில் வீணடிக்கப்பட்ட freeze-frames, jump-cuts, flashbacks, color shifts, and handheld camerawork, ஆக்கபூர்வமான முறையில் உபயோகிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்.

  • ஜீன்ஸில் வந்த 'அன்பே அன்பே', அய்யங்காரு வீட்டு அழகாகவும், இந்தியனின் நிழல்கள் ரவி கொலையும், இன்னும் பல ஷங்கரின் மறக்கமுடியாத காட்சிகள் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டிருக்கும்!?

  • பிரும்மாண்டத்திற்கு பெயர் பெற்றவர் என்றாலும், பத்தாயிரத்து முன்னூற்றி ஏழு (10,307) கராத்தே வீரர்களை க்ளைமாக்சுக்கு அடித்து நொறுக்குவதாக காட்டுவதெல்லாம் திருப்பாச்சிக்கிரமம்.

  • விவேக், சிரிக்கும் லாரிகள், சைபர் குற்றம் (?), பிரகாஷ்ராஜ், சில் த்ரில்லர்கள், கல்கி அவதாரம் என்று ஜனரஞ்சகமாக இருக்கிறது.

    சந்திரமுகியை விரட்ட அன்னியன் தயார் போலத்தான் தெரிகிறது.

  • கலைமகள் - மே 05

    sify.com ::

    * தாம்பிரவருணி பதில்கள்
    தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதே அளவுத் தொகை (12%) தொழில் அதிபர்கள் பங்களிப்பாக ஊழியர்களின் சேமநலநிதிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

    * சிரி(ற)ப்பு அண்ணா கி.வா.ஜ
    அடுத்த கூட்டத்திற்கு யாரை அழைக்கலாம்?' என்று நாங்கள் கூடிப் பேசியபோது, "வாகீச கலாநிதி' கி.வா.ஜ.வை அழைக்கலாம் என்று முடிவெடுத்தோம்.

    * சமையல் போட்டி திருவிழா
    சமையல் கலை இன்று நவீனமாக அவதாரம் எடுத்துள்ளது. ஒரு சமையல் அறையை பெரிய ஹோட்டல்களில் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்?

    * ஊருக்கு உழைத்திடல் யோகம்!
    அதிகாலை ஆறு மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலடி வைத்தபோது என் மனதுக்குள்ளே ஒரு குறுகுறுப்பு. அதிலும் திருப்பதி ஸப்தகிரி விரைவு வண்டியில் ஏறி அமர்ந்தபிறகு, என் மனம் எங்கெல்லாமோ சிறகடித்துப் பறந்தது.

    * நூல் அரங்கம்
    தண்ணீர் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் விபரீதங் களை இந்நூலில் ஆசிரியர் கூறியுள்ளார். உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்து மிகுந்த அனுபவ அறிவு பெற்றவர் ஆசிரியர் பால்பாஸ்கர்.

    * நிறம் மாறிய வானவில்
    உஷாவுக்கு அன்றைக்கு வேலைக்குப் போகப் பிடிக்கவில்லை. லீவ் போட்டு விட்டாள். நல்ல மழை பெய்து குளுமையாக இருந்தது. சுடச்சுட பஞூஜி சாப்பிட்டுக் கொண்டே கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் திட்டத்தில் இருந்தாள்

    * ஓவியன்
    நகரத்தின் எல்லைக்கு வெளியே. நெடுஞ்சாலைப் பாலத்துக்குக் கீழ்புறம் பள்ளத்து மேட்டில் நாலைந்து குடிசைகள் அநாதைப் பிள்ளைகள் போல இருந்தன.

    * நாடி சொல்லும் கதைகள்
    அகஸ்தியரின் நாடியை நம்புகிறோம். ஆனால் இப்படியொரு தெய்வீக சந்திப்பைப் பற்றி நம்பும்படி இல்லை. ஜீரணிக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது'' என்று நேரிடையாகவே நிறைய பேர் சொன்னதும் உண்டு.

    * மலேசியா பயணக்கட்டுரை
    சாதாரணமாக வெளிச்சத்திற்காக நாம் மெழுகுவர்த்திகளை உபயோகிப் போம். ஆனால் வித்தியாசமாக ஒரு மெழுகுவர்த்தியைக் காண நேர்ந்தது. இதுபல மருத்துவ குணங்களைக் கொண்டது. இதை இயர்கேண்டில் என்கிறார்கள்.

    * மதுரவல்லி
    மாலைத் தென்றலின் சுகமான காற்றையும், பூக்களின் நறுமணங்களையும் இரசித்தபடி பாண்டிய அரண்மனையின் நந்த வனத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், தென்னவனும், மதுரவல்லியும்.

    * பொழுதும் போதும்
    தமிழர், காலத்தைச் சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். அவற்றுள் சிறு பொழுது ஆறு; பெரும்பொழுது ஆறு. சிறுபொழுது ஐந் தென்பது ஒரு சாரார் கொள்கை. வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்னும் ஆறும் சிறுபொழுகளாம். இவற்றில் ஒவ்வொன்றும் பப்பத்து நாழிகைகளை உடையது. பெரும்பொழுதை இருதுவென்று கூறுவர் வட நூலார்

    * அழகு மயில் ஆட...
    சில முகங்கள் பார்த்தவுடனேயே "பச்' சென்று பதிந்து விடும். இன்னும் சில முகங்கள் வயசு வித்தியாசம் இல்லாமல் சினேகிக்கத் தோன்றும்.

    * 220 கோடி குழந்தைகள்
    உலகின் குழந்தைகளில் 18 வயதுக்குக் கீழுள்ள 220 கோடி குழந்தைகள்.

    * பாலாஜிக்கு டான்ஸ் ஆடத் தெரியும்!
    இந்திய கிரிக்கெட் பவுலர் பாலாஜி ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்.

    * அருணா ஓர் ஆச்சர்யம்
    பணம் மட்டும் இருந்தால் என்ன வெல்லாம் செய்யலாம். அபஸ்வரமாகப் பாடினால்கூட "சங்கீத பாரதி' விருது பெறலாம். சுமாராக ஆடினால் கூட "பரத மயூரி' பட்டம் வாங்கலாம். யார் யாரோ நெற்றி வியர்வை சிந்த உழைத்ததை எல்லாம், தானே சுயமாய் வடிவமைத்ததாகச் சொல்லி பெயர் வாங்கிக் கொண்டு போகலாம். பத்து பேரை சுற்றி வைத்துக் கொண்டு ஆஹா ஓஹோ என துதி பாடச் செய்யலாம்.

    * ஆலோசனை மையம்
    எனக்கு வயது 26. எனக்கு முகத்தில் பருக்கள் கொத்து கொத்தாக இருக்கிறது. எனது தங்கை, வயது 18 அவளுக்கும் இருக்கு. ஆனால் ஒன்றிரண்டு மட்டும். ஏன் எனக்கு இப்படி.... இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்

    புதன், மே 25, 2005

    தினகரன் - மெடிமிக்ஸ் விருதுகள்

    விருது என்றவுடனே ஆஸ்கார் நினைவுக்கு வந்தது. ஆங்கிலப் படங்கள், பாடல்கள் விருது எல்லாமே வார்ப்புருவில் செய்யப்பட்டது போல் இருக்கும்.

  • விளம்பரதாரர் மேடையில் தோன்றி விருதுகளைத் தரமாட்டார்.

  • திடீரென்று ஏடாகூடமான கேள்வி எல்லாம் கேட்டு விருது பெறுபவரை 'ஏண்டா சாமீ... விருது வழங்கினே!' என்று விசனப்பட வைக்க மாட்டார்கள்.

  • விருதுப் பெறப் போகும் வழியில் முத்தங்கள் கிடைக்கும்; கை கூப்பி, காலில் விழுந்து, கையை அசைத்து 'கவனிக்க' வேண்டாம்.

  • விருது கொடுப்பவர் தயாராக மேடையில் இருக்க, அதன் பின்புதான் - பெறப் போகிறவர் மேடையில் தோன்றுவார்.

  • ஒவ்வொரு விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டவர்களின் பட்டியல் சொல்லப்பட்டு, விருது வாங்குபவர் யாரென்பது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

  • வாழ்நாள் விருது பெறுபவருக்கு வருகை புரிந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மகிழ்வார்கள்.

  • பதக்கம் மாட்ட மாட்டார்கள்.


    இவை எல்லாம் தினகரன் விழாவில் வித்தியாசப்பட்டாலும், மற்ற இடங்களில் ஆஸ்கார் விருதுகளுக்கு நிகராகவே இருந்தது.

  • அங்கே ஜெனிஃபர் லோபஸ் அரைகுறையாய் ஆடுவார்; இங்கே ரகஸியா, ரம்பா, தேஜாஸ்ரீ, மதுமிதா, சொர்ணமால்யா.

  • அங்கே 'Good Will Hunting' பென் அஃப்லெக்; இங்கே 'மன்மதன்' சிம்பு போல ஒரு சிலர் அதிகமாய் அலட்டிக் கொள்வார்கள்.

  • சிறந்த நடிகர் விருதைப் பெறுபவர் அமைதியாய், விக்ரம் போன்றோரின் இருப்பை உணர்ந்து, விஜய் போல் அடக்கமாய் இருப்பார்.

  • ஸ்ரீமானும் பெயர் மறந்துபோன சின்னத்திரை நாயகியும் நன்கு தொகுத்து வழங்கினார்கள்.

  • சாதனையாளர் விருது பெறுபவர் எதையாவது தாக்குவது வழக்கம்: நாகேஷுக்கு பத்மஸ்ரீ வழங்காததை எண்ணி வருந்திக் கொண்டார்.

  • நாகேஷுக்குப் தேவையான பதிலை முன்கூட்டியே வாலி சொல்லியிருந்தார்: 'பக்கபலமோ போஷகரோ இல்லாத திறமை வீண்'.

  • கிடைத்ததை யாருக்காவது காணிக்கையாக்குவது சர்வ சாதாரணம்; அனேகர் நன்றி மட்டும் நவின்றாலும், ஜோதிகா மட்டும் சூர்யாவுக்கு அர்ப்பணித்தார்.

  • விருது எதுவும் கிடைக்காவிட்டாலும் வைரமுத்து வந்திருந்து, வாலி விருது பெறுவதற்காக சண்டை எல்லாம் போடாமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

  • உருப்படியான சிலருக்கும் பொதுமக்கள் வாக்களிப்பார்கள்: 'அழகிய தீயே' ராதாமோகன், 'காமராஜ்' திரைப்படம், 'ஆட்டோகிராஃப்', இசைக்கு '7ஜி ரெயின்போ காலனி', வில்லனுக்கு பிரகாஷ்ராஜ்.

  • சம்பந்தமே இல்லாமல் க்ளோசப் கொடுத்தாலும் மிடுக்கு குறையாமல் அரங்கத்தை கவனித்துக் கொண்டிருந்த சிறந்த 'நடிகை' ஜோதிகா.

    சன் டிவி போட்டிருப்பதை எண்ணி சந்தோஷப்பட வைத்த பதிவு.

    2004 வருட விருதுகள் குறித்த பதிவு | Dinakaran Awards

  • ராமகிருஷ்ணா

    'காதல் கோட்டை' கூட்டணியில் இன்னொரு படம் என்று சொல்லி விளம்பரம் செய்து வந்தார்கள். அகத்தியனும் சிவசக்தி மூவி மேக்கர்ஸும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

    பணக்கார முதலாளி ஜெய் ஆகாஷ். தகப்பன் பெயர் தெரியாமல் அயல்நாட்டில் வளர்த்த அம்மா சரண்யாவிடம் ஓவர் பாசமாய் பொழிகிறார். அம்மா தவறி விழுந்ததால் தவறிப்போனபின், அவரின் கட்டளைப்படி கிராமத்திற்கு செல்கிறார். அப்பா விஜயகுமாரை கண்டுபிடிக்கிறார். ஸ்ரீதேவிகாவுடன் காதல். ஆட்டக்காரியாக இன்னொரு நாயகி வாணி வந்து போகிறார்.

    ஹீரோயின் ஸ்ரீதேவிகா விகல்பமில்லாத பாசங்காட்டுகிறார். ஜெய் ஆகாஷும் இயல்பாக நடித்திருக்கிறார். இளமையான அலட்டல் இல்லாத நாயகன்.

    முத்துக்காளையும் சார்லியும் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளை ஏற்கனவே சன் டிவியில் ரசித்திருந்ததால், மீண்டும் பாராட்ட முடியவில்லை. படத்தின் நகைச்சுவை தவிர நயமிக்கதாக இரண்டு இடம் இருக்கிறது.

    * கிராமத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு மனனம் செய்வதற்குப் பயன்படும் வித்தைகளை சொல்லி, காதல் பாடலுக்கு அழைத்துச் செல்லும் இடம்.

    கொக்குச்சி கொக்கு
    ரெட்டசிலாக்கு
    மூக்கு சிலந்தி
    நாகுவா வர்ணம்
    ஐயப்பஞ்சோறு
    ஆறுமுகத் தாளம்
    ஏழுக்குக் கூழு
    எட்டுக்கு முட்டி

    பாடலை கேட்கப் போனால், பாடியவர்கள் கார்த்திக் ராஜாவும் சாதனா சர்கமும்! சாதனா சர்கம்தான் தெளிவாக கிராமத்துத் தமிழில் உச்சரித்திருக்கிறாரா அல்லது ஒக்கச்சி எல்லாம் கொக்கச்சி ஆகிப் போனதா என்று அறியமுடியாத ஆனால் வித்தியாசமான பாடல்.

    * தட்டான் தாழப் பறந்தால் மழை வரும், இன்னும் ஏதோ ஒன்று காணப்பட்டால் அடை மழை, எப்பொழுது சிதறல், எப்பொழுது புயல் என்று சராமாரியாய் அடுக்கும் வசனங்களும் வானிலை ஆய்வாளர்களை விட துல்லிதமாக கணிக்கும் வித்தையை சொல்லியது.


    சில புகைப்படங்கள்

    செவ்வாய், மே 24, 2005

    ஊடகச் செல்லம்

    ஃப்ரென்ச் ஓபன் முதல் சுற்றிலேயே சானியா மிர்ஸா தோற்றிருக்கிறார்.

    வழக்கம் போல் ஜெயித்தவரின் புகழ் பட்டியலோடுதான் செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள். முன்பாவது 'கிட்டத்தட்ட #1' வில்லியம்ஸிடம்தான் தோற்றுப் போனார் என்று சமாதானப்பட்டுக் கொண்டோம். இப்பொழுது முப்பதாம் இடத்தில் இருந்தாலும் 'சிறந்தவர்... வல்லவர்...' என்று மோதிரக் கையால் குட்டுப்பட்டதாய் ரிப்போர்ட் கொடுக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவிடமோ தெற்கு ஆப்பிரிக்காவிடமோ (கிரிக்கெட்டில்) தோற்றால் பரவாயில்லை. ஒலிம்பிக்ஸில் ஒக வெண்கலம் கிடைத்தால் போதும். ஹாக்கியில் கால்-இறுதிக்கு தகுதிப் பெற்றாலே போதும். கை நிறைய சம்பளம் கிடைத்தால் போதும் என்னும் நடுத்தர வர்க்கம் (இன்னும் இப்படி ஒன்று இருக்கிறதா?) சித்தாந்தம் இப்பொழுது விளையாட்டில் மேலோங்கி நிற்கிறது.

    அழகாக இருக்கிறார். விகடனில் எழுதியிருந்தது போல் 'வாளிப்பான தக்காளி' என்று மனசுக்குள் சப்புக் கொட்ட நிறையவர்கள் உண்டு. அவர்களுக்கான குட்டிகுரா முகப்பூச்சுகளும், குளிர் சாதன விளம்பரங்களிலும் தோன்றிக் கொண்டே இருக்கலாம்.

    லியாண்டர் பேயஸின் வழக்கம் போல் இரட்டையர் ஆட்டத்தில் இறுதிச் சுற்று வரை தத்தித் தடுமாறி வந்து கொண்டேயிருந்தால் டப்புக்குக் குறைச்சல் இருக்காது. இப்படியே செட்டில் ஆகிவிடலாம் என்னும் எண்ணத்தை ஊக்கப் படுத்தாவிட்டால் நல்லது.

    அட்லாண்டா ஒலிம்பிக்ஸ் சமயத்தில் சர்ச்சையை கிளப்பிய 'நைகி' விளம்பரம்:

    வெள்ளியை வெல்வது என்பது தங்கத்தைத் தட்டிச் செல்லாததற்கான சப்பைக்கட்டு.

    ("You don't win silver, you lose gold" and
    "If you are not here to win a medal, you are a tourist"?)

    திங்கள், மே 23, 2005

    இந்திய அணிக்கு புதிய கேப்டன்

    tamiloviam.com::

    சமீபத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக கிரெக் சாப்பெல் சேர்க்கப்பட்டுள்ளார். ஜான் ரைட்டுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அணியில் சில மாற்றங்கள் வர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியமும் சேப்பலும் விரும்பினார்கள். இந்த எண்ணத்தை செய்ல்படுத்தும் முதல் படியாக பிரையன் லாரா (Brian Lara) இந்தியாவுக்கு வரவழைக்கப் படுகிறார். அமர்நாத்தைப் போலவே டெண்டுல்கரும் லாராவின் வருகையை வரவேற்றுள்ளார்.

    சமீப காலமாகவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு, லாராவின் இருப்பு தர்மசங்கடத்தைக் கொடுத்து வந்தது. லாரா இருந்தால் மோசமாகவும்; அணியில் லாரா ஆடாவிட்டால், மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக் கனிகளையும் பறித்து வந்து கொண்டிருந்தது.

    தெற்கு ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஜார்ஜ்டவுன் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 543 ஓட்டங்களை மேற்கிந்திய அணிவீரர்கள் குவித்தார்கள். இந்தப் பந்தயத்தில் லாரா ஆடவில்லை. மேற்கிந்திய ஆட்டக்காரர்களில் இருவர் இரட்டை சதம் அடித்து அபாரமாக ஆடியிருந்தார்கள். இதைத் தொடர்ந்த இரு ஆட்டங்களிலும் லாரா இருந்தார். ஆனால், மொத்தத்தில் மூன்று வீரர்கள் மட்டுமே ஐம்பதைத் தொட்டிருந்தார்கள். ரிட்லி ஜேகப்ஸ் போன்ற சக வீரர்களும் லாராவைக் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

    கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கிந்திய அணி தோற்றுப்போன் ஆட்டங்களை கணக்குப் போட்டு பார்த்தால் -- லாரா ஆடிய ஐந்து ஆட்டங்களில் மூன்று போட்டிகளில் அவரின் அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. அதே சமயம் லாரா அணியில் இல்லாவிட்டால், நான்கு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே புறமுதுகிட்டிருக்கிறார்கள்.

    'இது போன்ற தோல்வியை அதிகம் ஈட்டித் தரும் அம்சம் முக்கியமானதாக இந்திய நிர்வாகம் கருதியிருக்கலாம். மேலும், வெளிநாட்டு வீரரை அணியில் சேர்ப்பதனால், சொந்த நாட்டில் சரக்கிலாததை பறை சாற்றலாம். கோச் மட்டும் இறக்குமதியல்ல, அணியே அன்னியம்தான் என்னும் கொள்கையை நிலை நிறுத்த லாரா உதவுவார்.' என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

    செய்தியை கேட்ட முன்னாள் உலக அழகி லாரா தத்தா, பிரையனை நேரில் சென்று பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 'என்னுடைய பெயர் கொண்ட ஒருவர் இந்தியாவில் இல்லாதது வருத்தமாக இருந்தது. இப்பொழுது இந்திய அணியிலேயே இடம்பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது. அவருடன் கூடிய சீக்கிரமே சினிமாவில் நடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது செல்பேசி விளம்பரத்திலாவது தோன்ற வேண்டும்.' என்றார்.

    கங்குலியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். 'என்னை விட மோசமான அணித் தலைவரை இதை விட எளிதாகக் கண்டிபிடிக்க முடியாது. என்னுடைய கேப்டன்சி மீண்டும் தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்க இது வழிவகுக்கலாம்' என்று நெருங்கிய நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.

    தொடர்ந்து இந்திய அணி தேர்வாளர்கள் அடுத்த வாரம் பெங்களூரில் சந்திக்கப் போகிறார்கள். அப்பொழுது பாகிஸ்தானின் அப்துல் ரஸ்ஸாக், மேட்ச் பிக்ஸிங்கிலும் முன் அனுபவமுள்ள தெற்கு ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் போன்றோரை பரிசீலிக்கப் போவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    - பாஸ்டன் பாலாஜி

    வெள்ளி, மே 20, 2005

    நமது நம்பிக்கை - மே 05

    நமது நம்பிக்கை::

    * வென்றவர் வாழ்க்கை நாச்சிமுத்து கவுண்டர்
    இன்று அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் என்று அழைக்கப்படும் தொழிலதிபர், 50 ஆண்டுகளுக்கு முன் அஆப மகாலிங்கம் என்றுதான் அறியப்பட்டார். அஆப என்பது ஆனைமலை பஸ் ட்ரான்ஸ்போர்ட்

    * களஞ்சியம் சின்னப்பிள்ளையின் வாழ்க்கைத் தொடர்
    ஒருவருக்கு நாலணா என்று தொடங்கிய சந்தா, சிறிது சிறிதாக வளர்ந்து மாதம் ஒன்றுக்கு ரூபாய் இருபது என வளர்ந்துவிட்டது. பலர் இப்போது சின்னாவைப் பார்த்துப் பேச, அறிவுரை கேட்க வர ஆரம்பித்து விட்டார்கள். கடைக்குப் புறப்பட்டுப் போனபோது எதிர்த்தாற்போல் சோணை வந்தான்.

    * ஆளப்பிறந்தவன் நீ
    நீங்கள் விரும்பிய வண்ணம் செயலாற்றுங்கள்.அலுவலகம், தொழிற்சாலை, வணிக மையம் என பல்வேறு களங்களில் நம் அன்றாடப் பணிகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம். எல்லா இடங்களிலும் நாம் செயலாற்றுகிறோம்

    * மலைக்க வைக்கும் மனித சக்தி
    வேர்த்திடு முடலில் வெள்ளம் திரட்டி
    விளைச்சலை உழுதவன் மனிதன்!
    ஆர்த்திடு மாயிரம் இயந்திரம் ஓட்டி
    ஆலைகள் கண்டவன் மனிதன்!

    * ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!
    தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம்.

    * சந்தைப் படுத்துவோம் சாதனை குவிப்போம்
    பப்ளிசிட்டி அன்ட் புரமோஷன் என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களும் அடிக்கடி நாம் பயன்படுத்தும் சொற்கள்

    * பாலகுமாரன் நேர்காணல்
    எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் சமூகம், ஆன்மீகம், காதல் என்று, பல்வேறு பரிமாணங்களில் வாழ்க்கையின் உன்னதங்களைத் தனது படைப்புகளில் பதிவு செய்து வருபவர். இவரை, பல்லாயிரக்கணக்கான வாசகர்கள், தங்கள் வழிகாட்டியாக வரித்துக்கொண்டிருக்கின்றனர். நமது நம்பிக்கை வாசகர்களுடன் ஒரு விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார் திரு. பாலகுமாரன்.

    * புதுக்கணக்கு
    மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு
    மனிதா தொடங்கு புதுக்கணக்கு;
    விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும்
    வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு;

    * காப்பீட்டு முகவர்களே கவனியுங்கள்
    காலத்தை அதன் போக்கிலேயே விட்டுவிடாமல் படைப்பாற்றல் திறனால் காலத்தையே தமது போக்கிற்கு மாற்றியமைத்து வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு

    * சுட்டிக் காட்டினால் சுடுகிறதா?
    நம்மில் பலருக்கு இந்த குணமிருக்கும். அல்லது, நம் நண்பர்களுக்காவது இருக்கும். மற்றவர்கள் நம்மை விமர்சிக்க வேண்டுமென்று கேட்போம். அவர்கள் தயங்குவார்கள்.

    * பொதுவாச் சொல்றேன்
    ஒரு விஷயம் கண்ணுக்குத் தெளிவாத் தெரியாத போது, பார்வையிலே இருக்கிறகுறைபாட்டுக்கு ஏற்றமாதிரி மூக்குக் கண்ணாடி போட்டக்கறோம். ரொம்ப ரொம்பச் சின்ன விஷயங்களை, பூதக்கண்ணாடி வைச்சுப் பார்க்கறோம்

    * எது உள்ளுணர்வு? எது சந்தேகம்?
    எந்த ஒரு சிந்தனையாளரைக் கேளுங்கள் உங்கள் உள்ளுணர்வின் குரலுக்கு மதிப்புக் கொடுங்கள்++ என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கலாமா வேண்டாமா என்று உள்ளுணர்வு உணர்த்துவது சரியாக இருக்கும் என்பார்கள்

    * புதிய பயணத்தின் பெருமை மிக்கஆரம்பம்
    நமது நம்பிக்கை மாத இதழ் மற்றும் பி.எஸ்.ஆர். சாரீஸ் இணைந்து நடத்தும் வெற்றிப்பாதை தொடர் பயிலரங்குகளின் தொடக்க விழா கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.

    * உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    சோர்வு என்பது பெரிய விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறோம். அதில் ஒரே எழுத்து மாறினால் போதும், தீர்வு பிறந்து விடும்

    * மாணவ மனசு! கோடை விடுமுறை
    ஒரு காலத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் இருவருமே ஏங்கித் தவிக்கிற விஷயமாக, எப்போது வரும் என காத்திருக்கும் ஒன்றாக, பலமாத காலங்களுக்கு முன்பே திட்டமிடுகிற விஷயமாக, குடும்பத்தின் அனைவருமே கொண்டாடி மகிழுகிற தருணமாக இருந்து வந்தது

    காலச்சுவடு - மே 2005

    Kalachuvadu ::

    * சிறுகதை: சாயம் போன வானம்
    உருக்காண்டிதான் தகவல் சொன்னான். நம் தோட்டத்தில் யார் செத்தாலும் அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியவரும். உங்களைப் பற்றிச் சொல்லும்போது ஒன்றும் உணர்ச்சி இல்லை. ஏதோ பத்திரிகைச் செய்தி மாதிரி சொல்லிவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டான். வேறு யாராவது செத்திருந்தால் உச்சுக் கொட்டி வருத்தப்படுவான்.

    * முரண்படும் மொழிபெயர்ப்புகள்
    தவறான, முரண்பட்ட மொழிபெயர்ப்புகள் மூலநூல் படைப்பாளியின் படைப்புத் திறனை அங்கஹீ(கீ)னப்படுத்தி அவரைப் பற்றிக் குறைத்து மதிப்பிடும் விமரிசன சூழல் தோன்றுவதற்கு வழிவகை செய்துவிடும் அபாயம் உள்ளது.

    * ஹாலிவுட் திரைப்படங்கள் சொல்லாத அரசியல்
    வழமையாகவே ஹாலிவுட்டின் பெரும் தயாரிப்புகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு இணக்கமாகவும் அமெரிக்க விசுவாசத்தை ஊறவைப்பதாகவும் அமெரிக்காவின் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவதாகவுமே அமைந்துவருகின்றன.

    * வாசகர் முற்றம்: படைப்பாளிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்

    * குமுதம் தீராநதியின் இதழியல் திருட்டு
    தனது பணியாளர் ஒருவர், காலச்சுவடுக்கு எதிரான, தனிப்பட்ட, வெறுப்பு சார்ந்த இலக்கிய அரசியல் நடத்துவதற்காக குமுதம் குழும இதழ்களைப் பயன்படுத்திக்கொள்வதை அனுமதித்துவரும் குமுதம் நிர்வாகத்தின் இயலாமை பல முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.

    * கருத்தரங்கு: புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
    'கடவு' இலக்கிய அமைப்பும் 'காலச்சுவடு அறக்கட்டளை'யும் இணைந்து மதுரையில் 'புது யுகத்தில் தமிழ் நாவல்கள்' என்ற கருத்தரங்கை நடத்தின. ஒரு வசதி கருதிக் கடந்த ஐந்தாண்டுகளில் (2000ஆம் முதல் 2004 முடிய) ஒருவர் எழுதிய ஒரு நாவல் மட்டும் என்கிற வரையறையுடன் நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    * அற்றைத் திங்கள்: கி. ராஜநாராயணன்
    'அற்றைத் திங்கள்' என்னும் இத்தொடர் நிகழ்வுகளின் கால அவசியம் குறித்தும் அதன் மூலம் விரிவடையப்போகும் வாசகர் - படைப்பாளி உறவு பற்றியும் காலச்சுவடு ஆசிரியர் கண்ணனின் சுருக்கமான உரைக்குப் பின் கி.ரா. பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் சாரம் இது.

    * கேரளமும் கண்ணகியும்
    சிலப்பதிகாரம் கொண்டாடும் கண்ணகி வழிபாடு கேரளத்தில் இன்றும் விளங்கிவருகிறது. பல நாட்டுக் கதைப் பாடல்களும் மரபுகளும் வழங்கிவருகின்றன. கோயில்கள் போக மலைப் பகுதிகளில் பழங்குடிகளிடமும் அது தொடர்பான வழிபாடுகளும் காணப்படுகின்ற செய்தி ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

    * இலங்கையின் கலைச் சூழல் குறித்த தீவிர வாசிப்பு
    இலங்கையின் கலை, அதன் வரலாறு, கலைஞர்கள், நிகழ்வுகள் முதலியவற்றை ஆழமான, தீவிரமான பார்வையுடன் அலசும் முயற்சியாக வெளிவருகிறது அழ்ற்ப்ஹக்ஷ என்னும் ஆறுமாத இதழ்.

    * விவாதம்: வகாபியிசம்: சில விளக்கங்கள்

    * திறந்த வெளி: ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் கதை

    * அஞ்சலி: சால் பெல்லோ (1915 - 2005)
    அமெரிக்க யூத எழுத்தாளர்களில் ஐசாக் பாஷெவிஸ் சிங்கருக்கு நிகரான இடத்தைப் பெற்றது மட்டுமல்லாது நோபல் பரிசையும் பெற்றுச் சிறப்படைந்தவர் சால் பெல்லோ.

    * அஞ்சலி: ஆலன் டண்டிஸ் (1934-2005)
    கடந்த 30 ஆண்டுகளாக அனைத்துலக நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தில் தலைசிறந்த ஆய்வாளர் அவர் என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வர். உண்மையில் அவர் தனித்தன்மை வாய்ந்த ஆய்வாளர்; கல்வியாளர்; மனிதாபிமானி; ஒரு மறுமலர்ச்சியாளர்.

    * அஞ்சலி: சி.டி. நரசிம்மையா (1920-2005)
    தெலுங்கரான சி.டி. நரசிம்மையா மைசூரிலிருந்து உலகெங்கும் உள்ள அனைத்து இந்திய எழுத்தாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கினார்.

    * அஞ்சலி: ஜெமினி கணேசன் (1920 - 2005)
    சிவாஜிக்கு முக்கியத்துவம் தரும் 13 படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் ஜெமினி. எம்.ஜி.ஆர். இதைக் குறிப்பிட்டு, ஜெமினி தன் தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே என்று வருத்தப்பட்டார்.

    * அஞ்சலி: ஓ.வி. விஜயன் (1930-2005)
    மலையாள நாவலின் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றில் மிக முக்கியமான இரண்டோ மூன்றோ எழுத்தாளர்களில் ஒருவர் ஓ.வி. விஜயன். 'கஸôக்கின் இதிகாசம்', 'தர்மபுராணம்' ஆகியவை உள்பட விஜயனின் படைப்புகள் மலையாளத்தில் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் போக்கையே மாற்றின.

    * அஞ்சலி: ஆதி. குமணன் (1950 - 2005)
    ஆதி. குமணன் உண்மை, நேர்மை, நியாயம் என்ற கொள்கைகளில் மிகப் பிடிவாதமாக இருந்தவர் என்பதால் பத்திரிகைப் பணியில் சிறந்தார் என்பதைவிட அவரிடம் இருந்த மனிதாபிமானமே அவரை எப்போதும் உயர்த்திக்காட்டியது.

    * எழில்வரதன்: குலைவுகளின் சித்திரங்கள்
    எந்த இதழிலும் பிரசுரம் காணாத பதினைந்து சிறுகதைகள் கொண்ட 'ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு' என்னும் முதல் தொகுப்பின் மூலம் வாசகர்களின் கவனத்தில் உடனடியாகப் பதிந்த புதிய இளந்தலைமுறைப் படைப்பாளி எழில்வரதன்.

    * பிள்ளை கெடுத்தாள் விளையும் சந்தேகங்களைக் கொண்டாடும் எழுத்து முறையும்
    கதைக்குள் ஓடும் காலம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு. அந்த நூற்றாண்டைச் சரியாக வாசித்தவர்கள் இந்தப் பிரதி கிறித்தவ மதத்திற்கு மாறிய அன்றைய தாழ்ந்த சாதியான ஒரு நாடார் பெண்ணின் கதை என்பதை எளிதாகப் புரிந்துகொள்வர்.

    * பசித்த மானிடம்: நினைவுக் கிடங்கிலிருந்து வெளிச்சத்திற்கு
    வாழ்க்கை யதார்த்தங்களை கரிச்சான் குஞ்சுவின் கலைப் பார்வை அணுகும் விதமே இந்நாவலை வேறுபடுத்திக் காட்டுகிறது. யதார்த்தத்தை ஒப்பனைகளற்ற அடையாளங்களுடன் முன்வைப்பதே அவருக்கு உவப்பானதாக இருக்கிறது.

    * கவிதைகள்

    * தேவதச்சன் கவிதைகள்: காணுலகும் வியனுலகும்
    சொற்களுக்கு நாம் பொதுவில் புனைந்துகொண்டுள்ள அர்த்தங்களைக் கடந்து செல்கிறபோது நாம் நுழைந்துவிடக்கூடிய நமக்குப் பரிச்சயமில்லாத அர்த்தப் பரப்பில் இந்தக் கவிதைகள் புழங்குகின்றன. எனவே அநேகக் கவிதைகளும் நூறு சதவிகித வாசக கவனத்தைக் கோருபவை.

    * நேர்காணல்: அமினாட்டா ஃபோர்னா
    நாவல் எழுதும்போது அதன் அடிவானம் தெரிவதில்லை. அது எங்கே போகிறதோ அதன் பின்னால் போய் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். சிறுகதை அப்படி இல்லை. எங்கே போய் முடிய வேண்டும் என்று ஓர் ஊகம் இருக்கும். ஆகவே எது மிகச் சுருக்கமான பாதையோ அதைப் பிடித்துப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்.

    * இரண்டாவது அம்மா

    * தலையங்கம்: இளகும் எல்லைகள்
    இந்திய - பாகிஸ்தான் உறவில் நம்பிக்கை தரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. கிரிக்கெட் தோல்வியை மறக்கடிக்கச் செய்வதாக இருந்தது மன்மோகன் சிங் - முஷரஃப் சந்திப்பு. வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள ஸ்ரீநகர் - முசாபராபாத் பேருந்துப் போக்குவரத்து இரு நாடுகளின் அரசியல் உறுதியை எடுத்துக்காட்டியது.

    * தாழ்த்தப்பட்டோரும் மொழிப் போரும்
    சாதி முகத்தை மறைத்துக்கொள்வதற்கான முகமூடியாகத் 'தமிழன்' என்ற அடையாளம் ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுவந்துள்ளது. மறுபுறம் சாதியைக் கடப்பதற்கான வழிமுறையாகத் 'தமிழன்' என்ற அடையாளம் இன்னொரு தரப்பினரால் கைக்கொள்ளப்பட்டுள்ளது.

    அமுதசுரபி - மே 05

    Amudhasurabi::

    * மைய-மாநில உறவு
    இந்த மைய-மாநில உறவு என்பதை அரசியல் விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நமது அரசியல் சட்டத்தில் மைய அரசுக்கு என்ன உரிமைகள், கடமைகள் என்று உள்ளனவோ, அம்மாதிரியே மாநில அரசுக்கும் என்ன உரிமைகள் கடமைகள் உள்ளன என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

    * வையவன் கதைகள்
    வையவனின் கதைகள் மனிதப் பிறவியின் மகத்துவத்தை அழகுற வெளிக்காட்டுகின்றன. அன்றாடம் நிகழும் சில சாதாரண நிகழ்ச்சி களின் வாயிலாக வாழ்க்கையில் சில சிக்கலான பிரச்சினைகளையும், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் விளக்கித் தெளிவாக்குகின்றன. ஆசிரியரின் விரிந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கும் இக்கதைகள். உயிர்களுக் கிடையே அமைந்த உன்னதமான உறவுகளை யும், உணர்வுகளையும் நல்ல முறையிலே வெளிப்படுத்துகின்றன.

    * படிக்கக் கிடைத்தவை - 2
    சாதி வெறி எங்கு யாரிடம் இருக்கிறது என்பதை அரசியல் வாதிகள் கண்டு கொள்வதில்லை. அதைப் பிரச்சினையாக்கிவிட்டால், வாக்குகள் பறிபோகும். அதைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக்கி, கண்டுக்காமல் இருப்பதுதான் சரி என்பது எல்லாக் கட்சிகளின் சொல்லப்படாத மெüன உடன்படிக்கை. ஆனால் தலித் எழுத்துகள், இப்படித் தப்புவதில்லை. அவர்கள்தான் தாம் வாழும் அனுபவத்தை கொள்கைப் பூச்சில்லாமல் எழுதுகிறார்கள்.

    * கவிதாயினி சுகந்தி சுப்ரமணியன்
    மரணம், வலி, துயரம், ஏக்கம், இயலாமை, வருத்தம், அதிர்ச்சி, விரக்தி, சோர்வு, அச்சம், கவலை, போதாமை, வறுமை, தோல்வி, சங்கடம், ஆயாசம்.... என அகராதியில் இன்னும் மிச்சமிருப்பவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தின் தாக்கத்தையும் ஒரே இடத்தில் பெறவேண்டுமா? சுகந்தியின் கவிதை வெளிக்குள் நுழையுங்கள்.

    * மூன்று கோடிப் பேர் தேவை - எல் அண்டு டி
    உண்மையில் சிறியதோ, பெரியதோ எந்தக் கட்டுமானப் பணி நடக்கும்போது தலைமைப் பொறியாளர்களும் மேற்பார்வையிடும் அதிகாரிகளும் மட்டும் வல்லுநர்களாக இருந்தால் போதாது. களப் பணியாளர்களான கொத்தனார், கம்பி கட்டுபவர், மின்சாரப் பணியாளர்கள் இப்படி எல்லோருமே தாம் செய்யும் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்ல முறையில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால்தான் பணி செவ்வனே நடைபெற்று நீண்ட காலம் பயனுறும் வகையில் அமையும்.

    * கவிதை வெளி
    முகுந்த் நாகராஜன், சுஜாதா விஜயராகவன், வைகைச் செல்வி, ச. பிரியா, ஆனைமலை, அண்ணாகண்ணன், நரன், வெண்ணிலாப்ரியன்

    * வாசனை எண்ணெய்க்கு வளமான எதிர்காலம்
    இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் "வெட்டிவேர்' தைலம் வடிக்கப்படுகிறது. மல்லி, மருதாணி, சந்தன மரம், சிட்ரோ நெல்லா, பச்சோலி போன்றவற்றிலிருந்தும் தைலம் வடிக் கின்றனர். சுமார் 200 வகை வாசனைத் தைலங்கள் பெருமளவிலும் ஏறக்குறைய 800 வகை ஓரளவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    * மரத்தூள் ஓவியங்கள் - செய்முறைக் கட்டுரை
    எல்லா மரத்தூளையும் சாக் பவுடருடன் சேர்த்து, பெவிகாலுடன் குழைத்தால் இந்தக் கலவை உறுதியாகும். சற்றே சொரசொரப்பான எந்தப் பொருள்கள் மேலும் ஒட்டி, டிசைன் செய்ய அருமையாக வரும். எளிய முறை கொண்ட இரட்டைக் கிளிகளைச் செய்ய தேவைப்படும் பொருள்களை எழுதி, வழிமுறைகளையும் குறிப்பிடுகிறேன். இதே தொழில்நுட்பம் மீதிப் படங்களுக்கும் பொருந்தும்.

    * தெய்வீக உடல் :- 2
    மனித உடலும் புதிய உருமாற்றத்திற்கான ரசவாதத்திற்கு உள்ளாகும். முன்பு விலங்கு நிலையிலிருந்து நிமிர்ந்து நின்று சிந்திக்கும் மனித வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக்கொண்டது போல், மனித உடல் இப்போது புதிய சக்திகளை வளர்த்துக்கொண்டு ஆன்மீக சக்தியையும் அதிமன உணர்வையும் வெளியிடும் தகுதியைப் பெறவேண்டும்.

    * தமிழில் கலப்பு!!???
    பிற மொழிகளின் ஆதிக்கத்தினின்றும் தமிழைப் பாதுகாக்கும் வேட்கை, இன்று நேற்று அல்ல, முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தமிழகத்தில் வலுவாக எழுந்தது. ஆக்கபூர்வ மாக வெளிப்பட்ட அவ்வுணர்வை மறை மலையடிகள் போன்ற தமிழறிஞர்கள் போற்றி வளர்த்தனர். தமிழகமெங்கும் தூய தமிழ்மணம் கமழச் செய்தனர்.

    * நான் என்ன சொல்லட்டும்?
    சமூகத்தில் கிடைக்கும் அந்தஸ்து அவ்வளவு முக்கியமா? ஒரே மணி நேரத்தில், பெரியம்மா, பெரியப்பா முன்னால் பல்லைக் காட்டிக்கொண்டு சேவகம் செய்யும் முகம் அப்படியே மாறிவிட்டதே என்ற ஆச்சரியத்துடன், அப்பா, அம்மாவையே பார்த்தவாறு என்னையறியாமல் தலையை ஆட்டினேன்.

    * நூல் நயம்
    ஆன்மிக வினா விடை : சுவாமி கமலாத்மானந்தர் 3 பாகம்
    ஊரும் திரிபும் இழிவும்!: தொகுநர்- அ.சி. சின்னப்பாத்தமிழர்
    ஜே. ஆர். டி. டாடா - வாழ்க்கை வரலாறு: அறந்தை மணியன்
    மெய்ப்பொருள் ஞானம் : துருவன்

    * பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்
    இந்தப் பாப்பரசர் சென்ற இடங்களிலெல்லாம், நிலத்தில் வீழ்ந்து, அந்நாட்டு மண்ணை முத்தமிட்டு, தன்னை, தனது அன்பைக் காட்டி நின்ற உத்தம மனிதர். மாற்ற முடியாத "பாக்கின்சன்' நோய் வந்த பின், நிலத்தில் வீழ்ந்து, முத்தமிட முடியாத காரணத்தால், தான் போன நாடுகளின் மண்ணை, பிரம்புக் கூடையில் கொண்டு வரச் சொல்லி, அந்த மண்ணை முத்தமிட்டு, அந்த மண்ணின் மீது, தன் ஆசீர்வாதமிட்டு, இந்தப் பூமியின் காலடியில் நாம் அனைவரும் ஒரே குலம் என்று கூறித் தன் அன்பைக் கொடுத்தார். அன்பினால் உலகத்தை ஆளலாம் என்ற நல்ல தத்துவத்தை வாழ்ந்து காட்டியவர் இந்த அற்புத மனிதரே!

    * நிறங்களால் எழுதிய கவிதைகள்
    பச்சை வண்ணத்தின் எல்லாவகைப் பிரிவுகளிலும் அடங்கக்கூடிய கோடுகளால் ஆன பின்னணியில் தலை கவிழ்ந்திருக்கும் நங்கை ஒருத்தியின் சித்திரம், வசீகரமாக உள்ளது. நங்கையும் பச்சை வண்ணத்தில் காட்சியளிக்கிறாள். அவள் கூந்தல் நாலா பக்கமும் பறந்தபடி இருக்கிறது. நாலாபக்கமும் சுழன்று சுழன்று அலைபாயும் கூந்தல் கோடுகள் விரிந்த பின்னணியில் எங்கெங்கும் படர்ந்து நெளிவதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

    * சவாலே சமாளி
    என் பயணச்சீட்டும் அதிலேயே இருந்ததால் சங்கிலியைப் பிடித்திழுத்தும் வண்டி வெகுதூரம் வந்துவிட்டது. பணப்பை எங்குபோய் விழுந்ததோ தெரியாது. ஒரு நிமிடம் தவித்து போய் விட்டேன். பிறகு பயணச் சீட்டுப் பரிசோதகர் சமாதானம் கூறி, கவலைப்படாதீர்கள் என்றார்.

    * தமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா?
    வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியையே தமிழர் பயனுறுத்த வேண்டும் என்ற கொள்கையற்ற சூழ்நிலையில், பிறமொழிகளை வாழ்வுடன் இணைக்காமல் தமிழர் வாழ்வு முழுமை பெறாது என்ற பிறழ்ச்சிச் சிந்தனையாளரின் உள்ளீடுகள் சமூகத்தின் நச்சு வேராகியதால், தமிழைப் பாடமாகப் படித்தோர் தாழ்நிலையினர் என்ற கருத்துருவாக்கம்.

    * வேலை தேடாதீர்கள் வேலை கொடுங்கள்
    1960கள் வரை பட்டதாரிகள் குறைவாக இருந்தனர். எனவே பட்டப் படிப்பு முடித்த உடனேயே அவர்களுக்கு ஏதோ ஒரு வேலை கிடைத்து வந்தது. 1970களில் இது மாறியது. நிறையப் பேர் பட்டப் படிப்புப் படித்தனர். பட்டமேற்படிப்பும் படித்தனர். அப்போது பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாத நிலை. அச்சமயம் மத்திய, மாநில அரசுகளே அதிகபட்சமாக வேலைகளைக் கொடுத்து வந்தனர். மிகக் குறைந்த அளவிலேயே தொழில் துறை வளர்ச்சி இருந்துவந்தது.

    * சிறிய தூண்டில் பெரிய மீன் : 2
    நாம் போடும் திட்டம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அது பலன்களைப் பலமடங்கு அதிகமாகத் தர வேண்டும். ஓட்டப் பந்தய மைதானம். வண்ண வண்ண ஜிகினா கால்சட்டைகள். மேலே முண்டா பனியன். அவையும் வெவ்வேறு நிறங்களில். பல எண்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. ஓடத் தயாராய்க் குனிந்து ஒரு கால் முன் நீட்டிக் கவனமாய் வீரர்கள் இருக்கிறார்கள். போட்டியினை நடத்துபவர், "டுப்' என்று சுடுகிறார். அனைவரும் உடனே ஓடத் தொடங்குகிறார்கள். ஓட்டம், பேய் ஓட்டம். இலக்கு, வெற்றிக் கோட்டை, ரிப்பனை நெஞ்சால் முட்ட வேண்டும்.

    * வெற்றித் திருமகள் : அஞ்சலி அரோரா
    வெற்றிக்கு, உடல் ஊனம் தடையேயில்லை என்று சொல்லும் அஞ்சலி அரோரா, பதினைந்து வயது வரை உலகைச் சாதாரணமாய்த்தான் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள், வைரஸ் காய்ச்சலில் கண் பார்வை பாதிக்கப்பட்டது. தாயும் தமக்கையும் உதவத் தன், குறைகளை ஏற்றுக்கொண்டார், தன் முன்பு வைக்கப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளப் புறப்பட்டார்

    * ஒரு வாக்குமூலம்
    காரணப் பெயர் கொண்டவன் கிருஷ்ணன் என்று ஊரிலே சொல்வதைக் கேட்டிருக்கிறான். அவன் பெற்றோர் இருவரும் சிறைச்சாலையில் இருந்தபோது பிறந்தவன் என்பதால், கிருஷ்ணன் என்பது, பொருத்தமான பெயர். சிறைச்சாலை சென்றது விடுதலை போராட்டத்தில் அல்ல. திருவிழா நடைபெற்ற ஊரில் ஒரு குழந்தையின் கழுத்துச் சங்கிலி சம்பந்தப் பட்ட தண்டனைதான்.

    * மார்க்கெட்டிங் துறையில் பெருகும் வேலை வாய்ப்புகள்
    இன்று சந்தையாக்கம் குறித்த பல்வேறு தகவல்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் மட்டுமே ஒரு நிறுவனம் இயங்கிய காலம் மாறி, தேசிய அளவிலும் உலகளாவிய அளவிலும் நிறுவனத்தின் இயக்கங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஒவ்வோர் இடத்திற்கும் தகுந்தவாறு தனது நடவடிக்கைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் விலை அடிப்படையில் மட்டும் பொருட்கள் தமக்குள் போட்டியிட்ட நிலையும் மாறி, பொருளின் இதர தன்மைகளை வாடிக்கை யாளர்கள் நோக்கத் தொடங்கியுள்ளனர்.

    * பாடகி : வாமன கதை
    இவளின் மனச் சோர்வைப் பார்த்து எனக்கு வியப்பாய் இருந்தது. கர்னாடக சங்கீதத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவள், வசுதா. சின்ன வயதில் கற்றுக் கொண்டும் இருக்கிறாள். பிறகு படிப்பு, வேலை என்று வழக்கமான காரணங்களால் தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால் சங்கீதம் கேட்காமல் அவளால் இயங்க முடியாது

    * கலையுலகில் பொன்விழாவை நோக்கி மூன்றெழுத்து மன்னர்கள்
    தமிழ் நாடக வரலாற்றில் மூன்றெழுத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக அண்மையில் பொன்விழா தாண்டி, மூன்று ஆண்டுகள் முடித்த ம.அ.அ. (யுனைட்டட் அமேச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்)யின் முத்திரை, தமிழ் நாட்டு ரசிகர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்த ஒன்று. இதன் நிறுவனர் ஒய்.ஜி.பி. (மூன்றெழுத்து)யின் குடும்பம், ஒரு மாபெரும் கலைக்குடும்பம்; இலக்கியக் குடும்பம்; கல்வி வளர்ச்சிக் குடும்பம். மூன்றெழுத்து மன்னர்களில் இன்னொருவர், ஏ.ஆர்.எஸ். என்று அறியப்படும் ஏ.ஆர். சீனிவாசன். பணிநிமித்தமாக அமால்க மேஷன்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியான நல்ங்ங்க் - ஹ - ழ்ஹஹ் நிறுவனத்தின் மேலாளராக இவர், பல ஆண்டுகளாக உழைத்தாலும் நாடக, திரையுலக, சின்னத் திரையுலகங்களில் ஏ.ஆர்.எஸ். என்று சொன்னாலே எழுந்து நிற்கும் அளவுக்கு மதிப்பு ஈட்டியவர்.

    * வேண்டும், சமுதாய அக்கறை
    சரி. படிப்பு, பயிற்சி, பட்டறிவு... ஆகியவற்றைப் பெற்று விட்டீர்கள். சுயதொழில் புரிய முடிவு எடுத்துவிட்டீர்கள். தொடக்கத்தில் நட்டத்தை ஏற்கும் மனப்பக்குவம், விடா முயற்சி, தன்னம்பிக்கை, நாணயம் ஆகிய பண்புகளையும் கொண்டுள்ளீர்கள். வாருங்கள். நீங்கள் எந்தத் தொழிலிலும் கால்பதிக்கலாம். ஆனால், சற்றே சிந்தியுங்கள்.

    வியாழன், மே 19, 2005

    ஃபையரிங் ஸ்பாட்

    கே. தெய்வசிகாமணி

    சமீபத்தில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் 'உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்' என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினார், டாக்டர் ஆர். ஸ்ரீதரன்.

    எழுத்தாளர் சுஜாதா, கார்ட்டூனிஸ்ட் மதன், டைரக்டர் ரா. பார்த்திபன் ஆகியோர் வந்திருந்தனர்; வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

    'மனிதமே புனிதம்' என்ற தலைப்பில் உரையாற்ற வந்த பார்த்திபன், ஜோக்ஸ் என்ற பெயரில் பேசியதில் அநாகரிகம் மேலோங்கி இருந்தது.

    இதோ சாம்பிளுக்கு ஒன்று...

    "த்ரிஷா ஒரு டாக்டரிடம் சென்று கேட்டாராம் - 'டாக்டர், டாக்டர், என் மேனி அழகுக்கு சோப்புப் போட்டுக் குளிப்பதா, ஷாம்பூ போட்டுக் குளிப்பதா?' என்று. அதற்கு டாக்டர் சொன்னாராம், 'முதல்ல நீ தாழ்ப்பாள் போட்டுக் குளி.' "

    இது சினிமா சம்பந்தப்பட்ட விழா அல்ல. ஆஸ்துமா பற்றிய நிகழ்ச்சியில், சம்பந்தமே இல்லாத த்ரிஷாவைப் பற்றி, அவர் இல்லாத இடத்தில், தரக்குறைவாக ஜோக் அடிப்பதைத் தவிர, பார்த்திபனுக்கு கிரியேட்டிவ் ஐடியாவே கிடைக்கவில்லையா?

    மதன் கூட இதே நிகழ்ச்சியில் மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். ஆனாலும் யார் மனமும் புண்படும்படி பேசவில்லை, தன்னைத்தானே கிண்டலடித்துக் கொண்டு பேசினார். அதில் கண்ணியமும், நாகரிகமும் மிளிர்ந்தன. ஆனால் பார்த்திபன் பேச்சு? மனித நேய மன்றம் நடத்திவரும் பார்த்திபனா இப்படி?

    நன்றி: Kumudam Reporter

    வாசகர் டிஷ்யூம்

    பதில் சொல்லுங்கள் பாரதிராஜா - ரவிபாபு

    Vairamuthu, Bharathiraja, Ilaiyaraja - Tamil Thirai TV Opening Celebrationsஇயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாக்காரர்கள் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை கடுமையாகச் சாடியிருந்தார். தமிழ் மீது அவருக்கிருக்கும் பற்றை நினைத்தால் சந்தோஷமாக இருந்தது. ஆனால், அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்த்திரை சேனலைப் பார்க்கும்போது, 'படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்' என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

    தமிழ்த்திரை சேனலில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளின் பெயர்களைப் பார்ப்போமா... 'ரெடி ஜூட், செட் தோசை, மைக்செட், ஸிக் ஸாக் ஸூம், நான்ஸ்டாப் நான்சென்ஸ், டாப் டக்கர்' இப்படிப் போகிறது பட்டியல்.

    Thamizh Thirai TV Channelபாரதிராஜா சார்... இதெல்லாம் தமிழ் பெயர்களா... இல்லை, உங்கள் கோபமெல்லாம் சினிமாவில் ஆங்கிலப் பெயர் வைப்பதில் மட்டும்தானா?




    குத்திக் கிழிக்காதீர்கள் - ஏ.எம்.ஆனந்தன்

    மைக் கிடைத்தால் போதும்... எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். கடந்த வாரம் ரேடியோ மிர்ச்சி எஃப்.எம் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி. நேயர்களிடம் லூசுத்தனமான கேள்வி கேட்பதும் அதற்கு நேயர்கள் மொக்கையான பதிலைச் சொல்வதும் தான் அந்த நிகழ்ச்சியின் ஸ்டைல்.

    அன்று நிகழ்ச்சி துவங்கியதும் Radio Jockeyயான சுசித்ரா கேட்ட கேள்வி, 'இன்ஜினீயரிங் படிச்சிட்டு சில வருஷமா வேலை இல்லாம இருக்குற இளைஞர்களுக்கு எதனால வேலை கிடைக்கலை? அதுக்கு அவங்க என்ன பண்ணலாம்?' என்பதுதான். நானும் ஒரு இன்ஜினீயர் என்பதாலும் எனக்கும் இன்னும் ஸ்திரமான வேலை கிடைக்கவில்லை என்பதாலும் ஆர்வமாக நிகழ்ச்சிக்குக் காது கொடுத்தேன்.

    ஆனால், அந்த நிகழ்ச்சியில் சுசித்ரா அடித்த கமென்ட்களும் நிகழ்ச்சியில் பேசிய நேயர்கள் பேசிய பேச்சுக்களும் என்னை நோகடித்து விட்டன.

    தனியார் கலைக் கல்லூரியில் படிப்பதாகச் சொன்ன ஓர் இளம்பெண், 'வேலை இல்லாத இன்ஜினீயரிங் பட்டதாரிகள் படிக்கும்போது பலான படம் பார்த்து வெட்டியாக பொழுது போக்குவார்கள்' என்று சொன்னதோடு, 'வேலை கிடைக்கலைன்னா அவங்க மெரீனாவில் சுண்டல் விற்கலாம், வீடு வீடாக பேப்பர் போடலாம்' என்றெல்லாம் யோசனை சொன்னார்.

    உடனே சுசித்ராவும், 'அடடே... அருமையான யோசனை!' என்று பாராட்டினார். எனக்கு வந்த கோபத்தில் ரேடியோவைத் தூக்கிப் போட்டு உடைக்கலாம் போல இருந்தது. ஆனால் என் காசுதானே வீணாகப் போகும். ரேடியோவை அணைத்து விட்டு உருப்படியான வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

    ரேடியோ, டி.வி. ஆசாமிகளே... முடிந்தால் இளைஞர்களை ஊக்கப்படுத்துங்கள். இல்லையா... நீங்கள் எப்போதும்போல, 'சாப்டாச்சா... என்ன படம் பாத்தீங்க... இட்லிக்கு தொட்டுக்க காரச்சட்னி சிறந்ததா... எண்ணெய் பொடி சிறந்ததா'னு பட்டிமன்றம் நடத்துங்க. எங்களை மாதிரி ஆளுகளைக் குத்திக் கிழிச்சு சந்தோஷப்படாதீங்க!

    நன்றி: Junior vikatan

    புதன், மே 18, 2005

    கல்கி

    kalkiweekly.com:: கலை விமரிசனத்தில் நான் கையாளும் முறையைப் பற்றி இங்கு சிறிது சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகத்தையோ, நாடகத்தையோ, சங்கீதக் கச்சேரியையோ பற்றி எழுத விரும்புகிறவன், இரண்டு முறையில் அவற்றைப் பார்க்க வேண்டும். ஒரு பூந்தோட்டத்துக்கு நாம் போகிறோமென்று வைத்துக்கொள்ளலாம். அதை எப்படிப் பார்க்கிறோம்? முதலிலே சற்று தூர இருந்து தோட்டம் முழுவதையும் ஒருங்கே பார்த்து அனுபவிக்கிறோம். பிறகு தோட்டத்திற்குள் புகுந்து ஒவ்வொரு செடியாக, ஒவ்வொரு பூவாகப் பார்த்து இன்புறுகிறோம்.

    புத்தக விமர்சனங்கள், நாடக விமர்சனங்களைக் கையாள வேண்டிய முறையும் இதுதான். முதலில் முழுமையாகப் பார்த்து, "மொத்தத்தில் இது நன்றாயிருக்கிறதா? இலக்கிய வளர்ச்சிக்கோ, கலை வளர்ச்சிக்கோ உதவி செய்யக் கூடியதா?" என்று தீர்மானிக்க வேண்டும். முழுமையாகப் பார்க்கையில் நன்றாயிருந்தால், அதனுடைய உள் விவரங்களில் உள்ள குறைகளைப் பிரமாதப்படுத்த வேண்டியதில்லை; குறைகளை நிவர்த்திக்கும் நோக்கத்துடன் அவற்றை எடுத்துக் காட்டினால் போதும்.

    முமுமையாகப் பார்க்கும்போது, "பயனற்றது" "கலை வளர்ச்சிக்குத் தீங்கு பயப்பது" என்று தோன்றினால், அதைப் பற்றி எழுதும் முறையே வேறு. அசோக வனத்தை அழிப்பதில் அனுமார் கையாண்ட முறைதான் அதற்குச் சரி. "இங்கே ஒரு செடி நன்றாயிருக்கிறதே" 'அங்கே ஒரு பூ நன்றாயிருக்கிறதே!" என்று யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

    இந்த 'முழுமை நோக்கம்' எவ்வளவு அவசியம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். மிகச் சிறந்த புத்தகம் ஒன்றை நீங்கள் படிக்கிறீர்கள். அதனுடைய இலக்கியச் சுவையை நினைத்து நினைத்து மகிழ்கிறீர்கள். உங்களுடைய நண்பர் ஒருவருக்கு அதைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறீர்கள். அவர் படித்து விட்டு வருகிறார். "புத்தகம் எப்படியிருந்தது?" என்று கேட்கிறீர்கள். "முப்பத்தேழாம் பக்கம் இருபத்து நாலாவது வரியில் ஓர் அச்சுப்பிழை இருந்ததே... அதைக் கவனித்தீர்களா?" என்று கேட்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? "பகவானே, இவ்வளவு அற்புதமான புத்தகத்தில் இவருக்கு ஓர் அச்சுப் பிழையைத்தானா அனுபவிக்கத் தெரிந்தது" என்று நினைத்து அனுதாபப்படுவீர்கள் அல்லவா?

    அதற்குப் பதிலாக அவர், "புத்தகம் மிக நன்றாயிருக்கிறது; எத்தனை தடவை வாசித்தாலும் அலுக்காது. ஆனால் அச்சுப் பிழை ரொம்ப இருக்கிறது. நல்ல பதிப்பு ஒன்றை யாராவது வெளியிடக்கூடாதா?" என்றால், நீங்களும் சேர்ந்து 'ஆமாம்' போடுவீர்கள்.

    இன்னொரு உதாரணம் : 'மாலி' ஒரு சித்திரம் வரைகிறார். அதில் வரும் மனிதர்களின் மனநிலைமையை அற்புதமாய் முகபாவத்தில் சித்திரித்துக் காட்டியிருக்கிறார். அவர்களைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வருகிறது. எல்லாம் எங்கேயோ பார்த்த முகங்களாகத் தோன்றுகின்றன. நண்பரிடம் காட்டுகிறீர்கள். அவர் உற்றுப் பார்த்துவிட்டு, "ஆமாம்! இந்த 'மாலி' நாற்காலியே பார்த்ததில்லையோ?' பின் சட்டம் இல்லாமல் நாற்காலி போட்டிருக்கிறாரே! நாற்காலி எப்படி நிற்கும்?" என்கிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்?

    ஆகவே, இலக்கியம், நாடகம் ஆகியவைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்லுமுன், அவற்றை முழுமையாகப் பார்த்துச் சிந்தித்து முடிவு செய்தல் இன்றியமையாதது.

    செவ்வாய், மே 17, 2005

    ரண்டக்க ரண்டக்க

    நெட்டில் கிடைத்த கேள்வி. கீழ்க்காணும் வார்த்தைகளுக்குள் என்ன ஒற்றுமை சொல்லுங்க பார்க்கலாம்...

    back & draw
    club & moor
    diet & cite
    even & edit
    life & emit
    memo & lair
    nigh & pact
    with & ward

    கூகிள் போங்கடிக்காமல், ஆழமா யோசிச்சு விடையைக் கண்டுபிடித்துத் தர வேண்டுகிறேன்.

    விடை அறிந்தவர்களுக்கு:
    இதே மாதிரி பொருத்தமான வார்த்தை வினாவைத் தமிழில் கொடுக்க முடியுமா என்று முயற்சியுங்களேன்.

    திங்கள், மே 16, 2005

    அது ஒரு கனாக் காலம்

    இசை: இளையராஜா
    இயக்குநர்: பாலு மகேந்திரா

    'நீங்கள் கேட்டவை' போன்ற படங்கள் பாடல்களுக்காகவே ஓடியது அந்தக் காலம். இந்தப் படத்தில் நடிகர்களையும் தன்னையும் மட்டுமே நம்பி பாலு மகேந்திரா களமிறங்கியிருக்கிறார் போல் தெரிகிறது.

    அந்த நாள் ஞாபகம் :: விஜய் யேசுதாஸ், ஷ்ரேயா கோஸல் - 1.5 / 4
    முதல்முறையாக ஷ்ரேயா கோஸலுக்கு பதிலாக வேறு யாரையாவது பாட விட்டிருக்கலாமோ என்று தோன்ற வைக்கும் பாடல். சாதனா சர்கம் மாதிரி தேவையில்லாத இடங்களில் இழுத்து விடுகிறார்.

    என்னடா நெனச்சே :: ரஞ்சித், விஜய் யேசுதாஸ் - 1 / 4
    அச்சச்சோ... கொஞ்ச நாள் கழித்து ராஜாவின் டப்பாங்குத்து. தனுஷின் ஆராதனைப் பாடல். பாடகரை மாற்றியிருந்தால் சோபித்திருக்கலாம்.

    காட்டு வழி கால்நடையா :: இளையராஜா - 2 / 4
    ராஜாவின் கோட்டையான தத்துவ தனிப்பாடல். பாடலாசிரியர் வலு சேர்க்காதது முதல் வருத்தம். இன்னும் எத்தனை நாள்தான் இப்படி சோகமாகப் பாட வேண்டுமோ என்பது போன்ற அலுப்பு தெரிவது இரண்டாவது வருத்தம். முடிவில் ஓரணா மிட்டாய் போல ஒரு அசட்டு தித்திப்பு.

    கிளி தட்டு கிளி :: பவதாரிணி, ஜோதி - 3 / 4
    பவதாரிணி க்ராஜுவேட் ஆகியிருக்கிறார். இரண்டு தடவைக் கேட்டதில் படத்தில் மிகவும் பிடித்த பாடலாகத் தோன்றுகிறது. ராஜாவின் முத்திரை இசையோடு மெல்லிய வரிகளில் அசத்துகிறார்கள்.

    உன்னாலே தூக்கம் :: ரஞ்சித், மாலதி - 2 / 4
    தனுஷ் ப்ரியாமணியுடன் மங்கலான விளக்கொலியில் கசமுசா செய்யும் பாடல். மாலதி நிறையவே அசத்தி வாசித்திருக்கிறார்.

    ராஜா அரசோச்சியது எண்பதுகளில். பாலு மகேந்திராவும் இளையராஜாவும் என்றாலே எதிர்பார்ப்புகள் இறக்கை கட்டி பறக்கும். அதுவெல்லாம் ஒரு கனாக் காலம்.

    விகடனின் நேரடிப் பதிவு

    பா.ராஜநாராயணன் & இரா.முத்துநாகு

    "எங்க கிட்ட கூலி வேலை பாக்கிறவங்க எங்களையே ஆள முடியுமா? ஆனா பாவம், அவங்களையும் சொல்லிக் குத்தமில்லே. எங்க நிலத்துல பாடுபட்டு, நாலு காசு சம்பாதிச்சிட்டிருந்த பாவப் பட்ட சனங்க பொழப்புல அரசாங்கம் மண்ணை அள்ளிப் போட்டுருச்சு. அதான் உண்மை!"
    - ராஜாக்கிளித் தேவர், கீரிப்பட்டி

    இந்த தேர்தல்ல, ‘அழகுமல! நீதாம்ப்பு தலைவரு. என்ன, புரியுதுல்ல? இந்தா!’னு ஒரு மூடை அரிசி குடுத்தாங்க எசமானருங்க. கூடவே ஆயிரம் ரூவா குடுத்து, ‘நல்ல துணிமணி வாங்கிக்கப்பா’ன் னாங்க. அவங்க சொன்னபடி தேர்தல்ல நின்னேன். செயிக்கவெச்சாங்க. அப்புறம் ஊர்வலமா போய் ராசினாமா செஞ்சு புட்டேன். இதுல நான் வேற என்னத்தச் சொல்ல?"
    - கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று, உடனே ராஜினாமா செய்த அழகுமலை

    "அன்னிக்கு மதிய நேரம்... தேவர் ஐயா வூட்டு மாடியில நெல்லு காயப் போட்டுக்கிட்டு இருந்தேன். திடீர்னு மழை வந்துச்சு. மழை வருதேனு யோசிக்கிற நேரத்துல, தடால்னு ஒரு இடி என் தலையிலேயே விழுந்துச்சு. மயங்கி விழுந்துட்டேன். தேவர் ஐயாதான் ஓடிவந்து காப்பாத்துனாரு. பஞ்சாயத் துத் தலைவரா நான் ஆனதுல உள்ள குத்தம்தான் இதுனு புரிஞ்சுபோச்சு! 'பொழைச் சதே பெரிசு'னு மறுநாளே ராசினாமா செஞ்சுட்டேன்!"
    - தனிக்கொடி (பாப்பாப்பட்டி)

    "இதாங்க இங்க நடக்குது. இவன் தலையில இடி விழுந் துச்சா... சரினு அடுத்த தேர்த லுக்கு ஆளைத் தேடினோம். ஒரு பய சிக்கலே. கடைசியா, அழகர்னு ஒருத்தனைப் பிடிச்சு, அவனுக்குக் காசு பணமெல்லாம் கொடுத்து, துணிமணி கொடுத்து, நிக்கச் சொல்லி, செயிக்கவும் வெச்சோம். ஆனா, அவன் தலைவரான பத்தாவது நாள் ஜுரம் வந்து செத்துப் போனான். இவங்கள்ல யாரும் தலைவராகுறது அந்த ஒச்சாண் டம்மனுக்கே புடிக்கலீங்க. நான் வேற என்னத்தச் சொல்ல?"
    - செல்லக்கண்ணுத் தேவர்

    "ஊரைவிட்டு விலக்கி இருந்தாங்களே, அந்தப் பதினஞ்சு குடும்பங்கள் யார், யார்?" என்று விசாரித்தால், "வேணாம்யா! நீங்க இங்கே நிக்கிற நேரம்கூட எங்களுக்கு ஆபத்துதான். நீங்க போன பொறவு, 'பத்திரிகைக்காரங்க கிட்ட என்ன சொன்னே?'னு ஆளாளுக்கு வந்து கேப்பாங்க. இந்தப் பஞ்சாயத்தை ஆளணும்னு எங்க யாருக்கும் ஆசையில்லே. எங்களை நிம்மதியா வாழ விட்டாப் போதும்!" என்று ஒட்டு மொத்தமாகக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

    வானத்தை வில்லாக வளைப்பவர்கள்

    ஜூனியர் விகடன்:: "உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த நடிகர்கள், ‘எங்களிடத்தில் பணம் இல்லை. அதனால் சொன்னபடி நிதி வழங்கமுடியவில்லை’ என பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு பாதிக்கப்பட்ட பெற்றோரின் சார்பில் உதவித் தொகை வழங்கி நோகடிப்போம்"

    - ‘அக்னிப் பூக்கள்’ அறக்கட்டளை (கும்பகோண பள்ளிக்கூட தீ விபத்துத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் அமைப்பு)



    வாய்ச்சொல் வீரர்:

    வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
    வயிறுபசிக்கிறவன் விடமாட்டான்

    வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
    வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்

    - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    குமுதம்.காம்

    விஜயகாந்த்

    நா.கதிர்வேலன் :: சிலபேர் நீங்க அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்னன்னு கேட்கிறாங்க. இதைத்தான் ஆறேழு வருஷமாக நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். மனசுக்குள்ளே போராட்டம். இப்போ இந்த நடிகர் சங்கத்தலைவர் வாய்ப்பு வருதுன்னா அதுல நம்மால என்ன பண்ணமுடியும்னு யோசிப்பேன். சங்கத்துக்கு நிறைய கடன் இருந்துச்சு, அடைச்சோம். இன்னும் சில முக்கியமான விஷயங்கள் முடிக்கப்படாமல் இருக்கு. ஒவ்வொண்ணா சரிபண்ணணும். இப்படித்தான் ஜனங்கள் எங்கே போனாலும் தருகிற ஆதரவையும், அன்பையும் ஏத்துக்கிட்டு என்ன செய்யறது! அவர்களுக்கு நாம் திருப்பிச் செலுத்தவேண்டியது என்ன? ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணணும். ஜனங்களுக்கு நல்லது செய்யலை என்றாலும் கெடுதல் பண்ணிடவே கூடாது. கொஞ்ச நாளைக்கு முன்னால் மவுண்ட்ரோட்டில் பெரிய அளவில் மறியல் நடந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சின்ன வார்டு தேர்தல். ஏழெட்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விட்டது. மக்களுக்கு எவ்வளவு துயரம்! கேள்வி கேட்க யாரும் இல்லை. ஸ்கூலுக்குப் போறவங்க, இண்டர்வியூ போக அவசரப்படுகிறவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. அரசியல்கட்சிக்கு அது முக்கியமே இல்லை. வெட்கங்கெட்டுப்போய் நாமும் எந்தக்கேள்வியும் கேட்காமல் விடுகிறோம்.

    நமக்கு கஷ்டங்களைத் தாங்கிப் பழகிவிட்டது. ஏழெட்டு மணிநேரம் பொதுமக்கள் துயரப்படவேண்டியதின் அவசியம் என்ன? எனக்கு ஜனங்கள் பெரிசா வசதி வாய்ப்போடு வாழந்து செழிக்கணும் என்ற விருப்பமெல்லாம் அதிகம் இல்லை. அவங்க பாதுகாப்பாக இருக்கணும், சவுகரியமாக இருக்கணும், நிம்மதியாக இருக்கணும் இதுதான் என் விரும்பம்னு சொல்லத் தோணுது. சேவை செய்யணும் என்ற எண்ணம் ஒரு நடிகனுக்கு வரக்கூடாதா?

    நன்றி: குமுதம்



    பிரமோத் மகாஜன்

    சோலை :: ‘‘டெல்லியில் தி.மு.க. அமைச்சர் ஒருவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் வந்தார். அவரது இல்லத் திருமண அழைப்பிதழை எனக்குத் தந்தார். தி.மு.க. அமைச்சருக்கு அவர் தரவில்லை. ஏன் என்று கேட்டேன்.

    ‘தி.மு.க. அமைச்சரும் நானும் உயிருக்கு உயிரான நண்பர்கள்தான். அவருக்குப் பத்திரிகை கொடுத்து அந்தத் தகவல் எமது கழகத்தலைமைக்குத் தெரிந்தால் எம்.பி. பதவியே பறிபோய் விடும்’ என்றார்.

    அதிர்ச்சியால் உறைந்து போனேன்.

    அமிர்தசரசிலிருந்து லாகூருக்கு பஸ் விடலாம். ரெயில் விடலாம். ஆனால் போயஸ் தோட்டத்திலிருந்து கோபாலபுரத்திற்கோ அங்கிருந்து போயஸ் தோட்டத்திற்கோ சைக்கிள் ரிக்ஷாகூட விடமுடியாது. இந்தக் கலாசாரத்திலிருந்து பி.ஜே.பி. விடுபட வேண்டும்’’ என்றார் பிரமோத் மகாஜன்.
    ----
    இஞ்சி எப்படி இருக்கும் என்று ஒருவன் கேட்டானாம். இது தெரியாதா? எலுமிச்சம்பழம் போல் தித்திப்பாக இருக்கும் என்றானாம் இன்னொருவன். இப்படித்தான் பி.ஜே.பி.யை கிராமத்து மக்கள் புரிந்திருக்கிறார்கள்.

    நன்றி: ரிப்போர்ட்டர்

    பாவண்ணன் - திண்ணை

    நேர்த்தியான கதைகளும் நேர்மையான கேள்விகளும்
    வளவ.துரையன்: பாவண்ணனின் "நூறுசுற்றுக் கோட்டை" - நூல் அறிமுகம்

    இந்நூல் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "வண்ணமும் வாழ்வும்" என்னும் முதல் பகுதியில் கன்னடமொழியல் நவீனத்துவம் படர்ந்தபிறகு எழுதப்பட்ட கதைகளில் நவீனத்துவத்தின் நிறம் சரியாகப் புலப்படும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கதைகள் உள்ளன. மூன்று தலைமுறைக்கு முந்தைய மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் சிறுகதை முதல் இருபத்தைந்து வயது இளைஞனுடைய சிறுகதைவரை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. "ஆறுகளின் தடங்கள்" என்னும் இரண்டாம் பகுதியில் மூத்த கன்னடப் படைப்பாளிகளின் சுயசரிதையிலிருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்துக்கொடுக்கப்பட்டுள்ளன. "அணையாத சுடர்கள்" என்னும் மூன்றாம் பகுதியில் மறைந்துபோன முக்கிய கன்னடப் படைப்பாளிகள்பற்றி பாவண்ணனே தனிப்பட்ட வகையில் எழுதிய அஞ்சலிக் குறிப்புகள் அடங்கியுள்ளன.

    புராணப்பின்னணியில்ஆமைந்த மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் "குசேலரின் கொள்ளுப்பேரன்" மனிதமன ஆழத்தை அறிய முயலும் கதை. குசேலர் வறுமையில் வாடியவர். கிருஷ்ணனுடைய உதவியால் வறுமை அகன்ற வாழ்வை அடைந்தவர். குசேலருக்கு அச்செல்வத்தில் நாட்டமில்லை. குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி வாழ்ந்து மறைந்துவிடுகிறார். அடுத்தடுத்த தலைமுறைகள் அச்செல்வத்தில் திளைக்கிறார்கள். இப்போது புதிதாக முளைத்த மூன்றாம் தலைமுறைக்கு தன் பழமை வறுமை சார்ந்து மதிப்பிடப்படுவதில் விருப்பமில்லை. புதிய புனைவொன்றை உருவாக்குகிறது. புனைவினால் பழமைக்கு வேறு நிறம் கொடுக்கப்படுகிறது. மனத்தின் விசித்திரம் இது. கதையை வாசித்து முடித்ததும் நம் கண்ணில் காணப்படும் நிறங்களில் உண்மை எத்தனைப் பங்கு புனைவு எத்தனைப் பங்கு என்று அலசத் தோன்றுகிறது. மானுட சரித்திரம் முழுக்க இப்படிப்பட்ட புனைவுகளால் உருவான ஒன்றுதானா என்கிற கேள்வி உருவாக்கும் மலைப்பும் கூச்சமும் கொஞ்சநஞ்சமல்ல.

    யு.ஆர்.அனந்தமூர்த்தியின் "சூரியனின் குதிரை" சிறுகதை மிக நல்ல அனுபவத்தைத் தரக்கூடியது. சூரியனின் குதிரை என்னும் தலைப்பு புராணம் அல்லது அறிவியல் சார்ந்த ஒரு கதையை எதிர்பார்க்கத் து£ண்டுகிறது. இறுதியில்தான் அத்தலைப்பு ஒரு சாதாரண புழுவைக் குறிப்பிடக்கூடிய ஒரு கன்னடப்படிமம் என்று கண்டடைகிறோம். கதையில் இடம்பெறும் வெங்கட் ஜோயிஸ் அக்கம்பக்கத்தார், ஊரார், நண்பர்கள், மனைவி, மகன் என எல்லாராலும் சாதாரணமாக, பிழைக்கத் தெரியாதவனாக, சாமர்த்தியமற்றவனாக, ஒரு புழுவைப்போல மதிக்கப்படுபவன். மற்றவர்கள் தலைக்கு எண்ணெய் மஸாஜ் செய்து மகிழ்ச்சியடையக்கூடியஆந்தச் சாதாரணன் இறுதியில் சூரிய ஒளியில் தளரிலைமீது நௌ¤கிற ஒரு புழுவைக்கண்டு ஆனந்தப் புன்னகை கொள்கிறான். ஒரு புழு இன்னொரு புழுவைப் பார்த்துச் சிரிப்பதான சித்திரம் நம் கண்முன் விரிகிறது.

    (நூறு சுற்றுக் கோட்டை - தொகுப்பும் மொழிபெயர்ப்பும் : பாவண்ணன். வெளியீடு: அகரம். விலை. ரூ 110. பக்கங்கள் 216)



    அன்பினால் ஆன உலகம்
    க.நாகராசன் :: பாவண்ணனின் "தீராத பசிகொண்ட விலங்கு" - நூல் அறிமுகம்


    உங்கள் மனத்தில் பிடித்தவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா அல்லது பிடிக்காதவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா என்னும் எளிமையான கேள்வியைக்கொண்ட முன்னுரையோடு பாவண்ணனின் "தீராத பசிகொண்ட விலங்கு" தொடங்குகிறது. வணிகமயமான இன்றைய மானுட வாழ்க்கை அனுபவங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்துபார்க்கும்போது பிடிக்காதவர்களின் நினைவுகள்தாம் அதிகமிருக்குமோ என எண்ணத் து£ண்டுகிறது. இதை விவரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாரதக்கதையான கண்ணன்-சகுனி-மாயக்கண்ணாடி கதை முக்கியமானது. கேள்வியின் அடுத்த பகுதிக்கு விடையாகச் சொல்லப்பட்ட "தொடர்ந்து கொட்டிவரும் தேளை விடாமல் காப்பாற்றும் பெரியவரின் கதை" அன்பினால் ஆன உலகத்துக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் பார்த்துப் பழகிய தனக்குப் பிடித்தமானவர்களின் நினைவுகளை படைப்பாளர் 22 கட்டுரைகளாக இத்தொகுதியில் விவரித்துள்ளார்.

    வெவ்வேறு கடல்களைப்பற்றிய பாவண்ணனின் வர்ணனைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.


    தரங்கம்பாடி கடல் = மிகப்பெரிய முற்றத்தைக்கொண்ட வீடு

    விசாகப்பட்டணம்கடல் = கைவிலங்கை அகற்றச்சொல்லி அலறித் துடிக்கும் பைத்தியம்

    பேகல் கடல்= முஷ்டி உயர்த்தி ஆர்ப்பரிக்கும் இளைஞனின் குரல் ஒலிக்கும் இடம்

    கார்வார் கடல்= கதைபேசி கைகோர்த்து நடப்பதுபோல குது£கலம் கொப்பளித்து நிற்பது

    திருவனந்தபுரம் சங்குமுகக்கடல் = கலகலவென்று சிரித்தபடியும் கைவீசியபடியும் துள்ளித்துள்ளி ஓடுகிற இளம்பெண்களின் கூட்டத்தைப்போன்ற இனிய இரைச்சலைக்கொண்டது.

    (தீராத பசிகொண்ட விலங்கு - பாவண்ணன். புதுமைப்பித்தன் பதிப்பகம். விலை.ரூ50)

    நன்றி: திண்ணை

    ஞாயிறு, மே 15, 2005

    டிவியிலும் துள்ளுகிறது இளமை

    இன்றைய சன் டிவி படம் 'துள்ளுவதோ இளமை'. படம் படு சைவமாக காண்பித்தார்கள். இந்த மாதிரி மெஸேஜ் படத்தையா 'ஏ' குத்தி, மலையாளப் பட ரேஞ்சுக்கு முத்திரை மோசடித்து, ஷெரினுக்கு கவர்ச்சி நடிகை அந்தஸ்தை கொடுத்தார்கள் என்று வினா எழுப்பும் அளவு வெட்டியிருந்தார்கள்.

    அந்தப் படத்தையும் இரண்டாம் பகுதியில் உம்மென்று பார்க்க வைத்த மும்பை எக்ஸ்பிரசும் தலைவர் தமிழில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனையோடு பார்த்த ஸ்வதேஷும் பிறகொரு நாள் போஸ்ட்டின் விஷயங்கள்.

    சன் டிவியின் அசல் 'துள்ளுவதோ இளமை'யாக கோலங்கள் சீரியல் இருந்ததாம். தேவயானியின் சகோதரனாக வருபவரும் அபியுடன் கூட வேலை பார்க்கும் தீபா வெங்கட்டும் சம்பந்தப்பட்ட அஃபிஷியல் ட்ரிப்பின் அந்தரங்கக் காட்சிகள் 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' என்பது போல் நெடுந்தொடர்களின் லஷ்மண் ரேகாவைத் தாண்டி பல மீட்டர்கள் ஓடியதாம்.

    சீரியல்தானே ஓடுது... என்று குழந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், பதறியடித்து ரிமோட்டைத் தேடி சேனலை மாற்றியிருக்கிறார்கள்.

    நான் 'கோலங்கள்' பார்க்காததற்காக நிம்மதிப் பெருமுச்சு விட்டுக் கொண்டாலும், தீபா வெங்கட்டின் குறிப்பிட்ட காட்சிகளைத் தவறவிட்டு விட்டோமோ என்று ஏக்கப் பெருமூச்சு வந்ததாக, இல்லத்தரசி சந்தேகப்பட்டார்.

    விகடன் பத்திரிகைதான் மாறிப் போனது என்றால், விகடன் தயாரிப்பும் தாராளமாயமாக்கலை நன்றாகவே செய்கிறது!? ஒரு வாரம் முன்பே முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள், கபர்தார் எல்லாம் கொடுத்து மிரட்டினால் டி.ஆர்.பி. ரேட்டிங் கூடியிருக்குமே...

    குறிப்பிட்ட கோலங்களை எவராவது பார்த்திருந்தால், மெய்யாலுமாகவே எல்லைகள் வரம்பு மீறியதா அல்லது சாதாரண டாடா உப்பு கூட பெறாத மேட்டரா என்று தெளிவுபடுத்துங்கள்.

    பி.குறிப்பு: பேவரிட் அன்னியன் பாடலை சுழற்சியில் ஓடவிட்டுக் கொண்டேயிருப்பது போல், இப்பொழுதெல்லாம் 'மெட்டி ஒலி' மீண்டும் மீண்டும் அரைத்த மாவை புளிக்க வைப்பதால், முன்னாள் சித்தி, சமீபத்திய அண்ணாமலை, என்றும் ராதிகாவின் புதிய மொந்தை 'செல்வி'யே தேவலை.

    தமிழ்த்திணை

    TamilThinai.com:

    பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகளைக் கொண்ட ஆய்விதழ். தமிழாய்வுகள் பகுதி தமிழ் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும்.
    - சுபாஷினி

    நூல் அறிமுகம் (பகுதியில் இருந்து...)

    அறிவியல் தமிழ் - முனைவர் கு. அண்ணாதுரை
    ஒருமை - பன்மை - முனைவர் கி. சேம்பியன்
    வடு - முனைவர் பிரியகுமாரன்
    க் ச் த் ப் மிகுதலும் மிகாமையும் - முனைவர் கி. சேம்பியன்
    இன்றைய தமிழ் நாடகச் சூழல் - முனைவர் கே.ஏ.குணசேகரன்
    இந்துத்துவம் எதிர் அரசியல் - முனைவர் த.சேயராமன்
    எரிவாய் காவேரி - புலவர் க. முருகேசன்
    பாரதி ஓர் இசைக் களஞ்சியம் - முனைவர் இரா. கலைவாணி
    சங்கப் பாக்களில் தொல்குடிக் கூறுகள் - இரா. முருகன்
    இவர்களோடு நான் - இரா. சுப்பராயலு

    சனி, மே 14, 2005

    சில புத்தகங்கள்

    சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்

    1. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்
    2. எப்போதும் வாழும் கோடை - மனுஷ்யபுத்திரன்
    3. பண்பாட்டு அசைவுகள் - தொ பரமசிவன்
    4. தலித்திய விமர்சன கட்டுரைகள் - ராஜ்கௌதமன்
    5. உண்மை சார்ந்த உரையாடல் - காலச்சுவடு பேட்டிகள்
    6. விவாதங்கள் சர்ச்சைகள் - வெ.சா.
    7. இன்றைய நாடக முயற்சிகள் - வெங்கட் சாமிநாதன்
    8. என் பார்வையில் - சில கதைகளும் சில நாவல்களும் :: வெங்கட் சாமிநாதன்
    9. என் பார்வையில் - சில கவிதைகள் :: வெங்கட் சாமிநாதன்
    10. சில இலக்கிய ஆளுமைகள் :: வெங்கட் சாமிநாதன்
    11. அலை புரளும் வாழ்க்கை :: பெ.அய்யனார்
    12. கடக்க முடியாத நிழல் :: ரவிக்குமார்
    13. கறுக்கும் மருதாணி :: கனிமொழி
    14. அடங்க மறு :: தொல். திருமாவளவன்
    15. தமிழில் நாடகப்பதிவுகள் :: அண்ணாமலை
    16. இடிபாடுகளுக்கிடையில் :: வெளி ரங்கராஜன்
    17. வன்முறை வாழ்க்கை :: கண்ணன்
    18. கண்ணில் தெரியுது வானம்
    19. ஆளுமைகள் மதிப்பீடுகள் (1963 முதல் 2003 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு) :: சுந்தர ராமசாமி
    20. ஜெயமோகன் குறுநாவல்கள்
    21. ஜெயமோகன் சிறுகதைகள்
    22. தீராத பசி கொண்ட விலங்கு :: பாவண்ணன்
    23. யாருக்கு யார் எழுதுவது :: இசைஞானி இளையராஜா
    24. இது ராஜபாட்டை அல்ல :: சிவகுமார்
    25. தென்பரை முதல் வெண்மணி வரை :: அப்பணசாமி
    26. லாசரா படைப்புலகம் :: அபி
    27. கிரா படைப்புலகம் :: ரமேஷ் - பிரேம்
    28. உடைந்த மனோரதங்கள் (கு. ப. ரா. படைப்புலகம்) :: பெருமாள்முருகன்
    29. பா.செயப்பிரகாசம் படைப்புலகம் :: களந்தை பீர்முகமது
    30. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு. செல்லப்பா படைப்புலகம்) :: பெருமாள்முருகன்
    31. காகங்கள் :: சுந்தர ராமசாமி
    32. காக்டெயில் :: சுதேசமித்திரன்
    33. கணையாழி களஞ்சியம் - 4
    34. மௌனியின் கதைகள்
    35. சட்டப்பேரவையில் தேவர் பற்றிய வழக்கு
    36. கொதிப்பு உயர்ந்து வரும் :: ரவிக்குமார்
    37. மிகை நாடும் கலை
    38. உள்ளுணர்வின் தடத்தில் :: ஜெயமோகன்
    39. பதிவுகள் :: அ யேசுராசா கட்டுரைகள்
    40. கடலாடி :: நரசய்யா
    41. தெய்வம் தெளிமின் :: கவிதாசரண்
    42. சாதாரணன் :: நரசய்யா
    43. சென்னை கானா :: வை ராமகிருஷ்ணன்
    44. நதிமூலம் :: மணா
    45. மணலின் கதை :: மனுஷ்யபுத்திரன்
    46. எம் தமிழர் செய்த படம் :: தியடோர் பாஸ்கரன்
    47. சொல்லில் நனையும் காலம் :: எஸ் வி ராஜதுரை
    48. கிராமம் நகரம் மாநகரம் :: நா முத்துக்குமார்
    49. இந்துத்துவத்தின் இருள்வெளிகள் :: அ மார்க்ஸ்
    50. சொல்வதால் வழ்கிறேன் :: அ மார்க்ஸ்
    51. ஆ மாதவன் கதைகள்
    52: நெரிக்கட்டு :: அழகியபெரியவன்
    53. ஒளி நிழல் உலகம் :: அ ராமசாமி
    54. வானகமே இளவெயிலே மரச்செறிவே :: சுந்தர ராமசாமி
    55. என் வீட்டின் வரைபடம் :: ஜே பி சாணக்யா
    56. ஒளிவிலகல் :: யுவன் சந்திரசேகர்
    57. மீஸான் கற்கள் :: புனத்தில் குஞ்ஞப்துல்லா (தமிழில்: குளச்சல் மு யூசுப்)
    58. துயரமும் துயர நிமித்தமும் :: பெருமாள் முருகன்
    59. வடக்கந்தரையில் அம்மாவின் பரம்பரை வீடு :: ஷாராஜ்
    60. கோபுரம்தாங்கி :: சுதேசமித்திரன்

    வெள்ளி, மே 13, 2005

    Burnt Out சேப்பல்

    உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக ஆகிக் கொண்டிருக்கிறதா?

    புகழ்பெற்ற காமெடியன் டேவ் சாப்பலுக்கு (Dave Chappelle) ஆகிப் போயிருக்கிறது. நான் தவறவிடாமல் பார்க்க நினைக்கும் நிகழ்ச்சிகளில் காமெடி செண்ட்ரலில் வரும் சேப்பல்ஸ் ஷோ-வும் ஒன்று.

    அமெரிக்காவில் இருக்கும் இனபேதங்கள், கறுப்பர்களை இளக்காரம் செய்யும் மனப்பான்மை, ஏழைகளின் நிலை, போதைக்கு அடிமையாதல் என்று பேச பயப்படும் விஷயங்களை கிண்டலாக முன்வைப்பவர். மூன்று வருடங்களுக்கு முன்பு, ஆர்ப்பாட்டமில்லாமல் சாதாரணமாகத் தொடங்கிய நிகழ்ச்சி. ஆரம்பித்த சில வாரங்களிலேயே பரவலாகப் பேசப்பட்டு, இளசுகளிடையே மவுசு கூடிப் போனது.

    'செயின்ஃபெல்ட்', 'ஃப்ரெண்ட்ஸ்' போல் இல்லாமல் சேப்பலே முழுக்க முழுக்க சொந்தமாக எழுதி, இயக்கி, தயாரித்து வந்தார்.

    தயாரிப்பாளர்களின் வாயில் எச்சிலூறும் ஆசை, பார்வையாளர்களின் அடுத்து எப்படி கலக்கப் போகிறார் என்னும் அதீத ஏற்றிவிடல், எல்லாவற்றையும் சொந்தமாக செய்தால்தான் நிகழ்ச்சியின் தரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் என்னும் கணிப்பு, எல்லாம் சேர்ந்து அவரை மனநலக் காப்பகத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறது.

    'உங்ககிட்டேயிருந்து இதை எதிர்பார்க்கலை', 'நீங்களா இப்படி எழுதினது', 'அவர் படைப்பு என்றால் இப்படி இருக்காது' என்று ஏற்றிவிட்டுப் பார்த்திருக்கிறேன். படைப்பாளியை அதீதமாக, நேரடியாக பாதித்ததை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன்.

    'ஆளவந்தானி'ல் மொட்டை கமலுக்கும் தொடை காட்டும் மனீஷாவும் - அருகில் இருக்கும் போது வரும் வசனம்: 'மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடலமா?!

    அந்த மாதிரி ஒரு காமெண்ட்:

    சுவையான வலைப்பதிவும் சேப்பல்ஸ் ஷோ மாதிரிதான் ;-)

    இதை எழுதாதீங்க... அதைப் போஸ்ட் போடாதீங்க... என்னும் நல்லெண்ண சித்தாந்தங்கள் இலவசமாய் நிறைய கிடைக்கும்.

    செய்தி: நியு யார்க் டைம்ஸ் | CNN.com

    வியாழன், மே 12, 2005

    சின்மயி

    திரைப்பட பிண்ணணி பாடகி சின்மயி வலைப்பதிய ஆரம்பித்திருக்கிறார். அன்னியன் முன்னோட்டத்தை இவரும் வாய் பிளந்து பாராட்டுகிறார். (அன்னியன் Daredevil-இன் உல்டா என்னும் வதந்தியும் இணையத்தில் உலாவுகிறது.)

    'சுகுமாரி'தான் என்னுடைய #1. 'அண்டாங்காக்கா'வும் பிடித்திருக்கிறது. ராக் துர்காவும் சுத்த சாவேரியும் எனக்கு விருப்பமிக்கதாக ஆகிப் போயிருக்கிறது.

    வாங்க... வாங்க! (நன்றி: சாம்பார் மாஃபியா & இட்லி சட்னி)


    சின்மயி பாடிய பாடல்களில் என்னுடைய நினைவில் நிற்பவை:

    ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்
    கிறுக்கா கிறுக்கா - விசில்
    பூந்தேனா - ஈரநிலம்
    என்ன இது - நள தமயந்தி
    ப்ளீஸ் சார் - பாய்ஸ்
    பிரிவெல்லாம் பிரிவல்ல - சூரி
    என்னுயிர் தோழியே - கண்களால் கைது செய்
    ஒப்பணகார வீதியிலே - கிரி
    எங்கு பிறந்தது - விஷ்வதுளசி
    காதலிக்கும் ஆசையில்லை - செல்லமே
    சின்ன சின்ன - கண்ணாடிப் பூக்கள்
    சில் சில் - அறிந்தும் அறியாமலும்

    புதன், மே 11, 2005

    ஞாபகம் வருதே

    தினம் ஒரு திரைப்பாடல் :: thaai sollum uRavai from kanaa kaNdEn

    தாய் சொல்லும் உறவை வைத்தே
    உலகம் சொந்தம்
    தாயுள்ள வரையில்தானே
    கிராமம் சொந்தம்

    பதினேழு வயசு வரைக்கும்
    நீ வாழும் வாழ்க்கைதானே
    பாலூத்தும் காலம் வரைக்கும்
    கூட வரும்

    கடலோர உப்பங்கழியும்
    காதோடும் பேசும் அலையும்
    ஐநூறு மைல் போனாலும்
    தேடி வரும்


    கிராமம் தன் மடியில் கட்டி
    வளர்த்தது உன்னை
    கிராமத்த மடியில கட்டி
    போவது என்ன?

    சாதி தாண்டியே நட்பும் உறவும்
    மலர்ந்தது அங்கே
    சமையாத பெண்கள் பார்த்து
    மயங்கியது அங்கே

    உப்பு மேட்டிலே ஆடி முடித்து
    சாய்ந்ததும் அங்கே
    ஆகாயம் இழுத்துப் போர்த்தி
    தூங்கியது அங்கே


    கையோடு அள்ளிய தண்ணி
    விரலோடு கசிவது போல
    கண்ணோடு நினைவுகள் எல்லாம்
    கசிகிறதே


    நெல்லிக்காய் அடியில் உள்ள
    தித்திப்பாக
    வறுமையின் கீழ் லட்சியம் ஒண்ணு
    வந்தது அங்கே

    தூக்குவாளி தலையில் மாட்டி
    கிரீடம் என்றாய்

    சொந்த செலவில் சூரியன் வாங்க
    ஆசை கொண்டாய்

    சொந்த உறவுகள் இலைகளைப் போலே
    உதிர்ந்திடக் கண்டாய்
    வந்த உறவுகள் வளர்பிறை ஆக
    வளர்ந்திடக் கண்டாய்

    மனங்கொண்ட கனவுகள் எல்லாம்
    மண்பாதைச் சில்லுகளாக
    மறுவாழ்வின் வெற்றியைத் தேடி ஓடுகிறாய்

    இன்னும் இருபது

    சுரேஷ் கொடுத்ததைத் பின் தொடர்ந்து....

    மணி ரத்னம்
    மௌன ராகம் (1)
    அஞ்சலி (2)
    ரோஜா (3)
    இருவர் (4)
    அலைபாயுதே (5)
    கன்னத்தில் முத்தமிட்டால் (6)

    கமல்
    குணா (7)
    நாயகன் (8)
    குருதிப்புனல் (9)
    மகாநதி (10)

    ஆறிலிருந்து அறுபது வரை
    திருவிளையாடல் (11)
    தில்லானா மோகனாம்பாள் (12)

    கே பாலச்சந்தர்
    தண்ணீர் தண்ணீர் (13)
    சிந்து பைரவி (14)
    புதுப்புது அர்த்தங்கள் (15)
    வானமே எல்லை (16)

    பார்த்திபன்
    புதிய பாதை (17)
    ஹவுஸ் புல் (18)

    பாலு மகேந்திரா
    மூன்றாம் பிறை (19)
    வீடு (20)

    பாரதிராஜா
    பதினாறு வயதினிலே (21)
    மண்வாசனை (22)
    வேதம் புதிது (23)
    முதல் மரியாதை (24)
    கருத்தம்மா (25)
    கடல் பூக்கள் (26)

    மகேந்திரன்
    முள்ளும் மலரும் (27)

    பாக்யராஜ்
    மௌன கீதங்கள் (28)

    நவீனர்கள்
    கேளடி கண்மணி (29)
    விடுகதை (30)
    இந்தியன் (31)
    சேது (32)
    குட்டி (33)
    இயற்கை (34)
    காதல் (35)
    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (36)



    எனக்குத் தோன்றியவை

    அந்தக் காலம்
    சபாபதி (37)
    ஔவையார் (38)
    ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி (39)

    இரு துருவங்கள்
    மலைக் கள்ளன் (40)
    தூக்கு தூக்கி (41)
    உத்தமபுத்திரன் (42)
    அம்பிகாபதி (43)
    பராசக்தி (44)
    திரும்பிப் பார் (45)
    அந்த நாள் (46)
    குலேபகாவலி (47)
    அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (48)

    நெஞ்சில் நிறைந்தவை
    கண் சிவந்தால் மண் சிவக்கும் (49)
    உதிரிப்பூக்கள் (50)
    அழியாத கோலங்கள் (51)
    மெட்டி (52)
    வண்ண வண்ணப் பூக்கள் (53)
    பசி (54)
    எச்சில் இரவுகள் (55)
    பணம் பெண் பாசம் (56)
    சுவரில்லாத சித்திரங்கள் (57)
    ரோசாப்பூ ரவிக்கைகாரி (58)
    அவள் அப்படித்தான் (59)
    வறுமையின் நிறம் சிவப்பு (60)
    கன்னிப் பருவத்திலே (61)
    விதி (62)
    சிறை (63)
    கிளிஞ்சல்கள் (64)
    ஆசை (65)

    ரிலாக்ஸ்
    தில்லுமுல்லு (66)
    மைக்கேல் மதன காமராஜன் (67)
    பொய்க்கால் குதிரைகள் (68)
    மழலைப் பட்டாளம் (69)
    ஜெகன்மோகினி (70)
    பட்டணத்தில் பூதம் (71)

    அசத்தறாங்க
    தூள் (72)
    வஞ்சிக்கோட்டை வாலிபன் (73)
    முதல்வன் (74)
    ஜெண்டில்மேன் (75)
    அண்ணாமலை (76)
    விக்ரம் (77)
    கில்லி (78)
    வேலைக்காரன் (79)
    சகலகலா வல்லவன் (80)

    செவ்வாய், மே 10, 2005

    மைக்ரோசாஃப்ட் லீன்க்ஸ்

    A Microsoft-Red Hat warming trend? | CNET News.com: ரெட் ஹாட் நிறுவனத்தின் தலைவர் மாத்யூ ஸுலிக்கும் (Matthew J. Szulik) மைக்ரோசாஃப்டின் நிறுவனர் ஸ்டீவ் பால்மரும் (Steve Ballmer) நியு யார்க்கில் (McCormick & Schmick) ரகசியமாய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

    ஸெனிக்ஸ் போயே போச்சு...
    மைக்ரோசாஃப்ட் லீனக்ஸ் வரப்போகிறதா?
    அல்லது ரெட் ஹாட் ஸ்வாஹா ஆகிறதா?
    குறைந்தபட்சம் ஐரோப்பிய கெடுபிடிகளில் இருந்து தப்பிக்கும் வழியையாவது கேட்ஸ் கண்டுபிடித்து இருப்பார்!?

    வார பலன்

    வாரபலன் ஜூலை 17, 2003 :: மத்தளராயன்

    காலச்சுவடு ஜூலை - ஆகஸ்ட் 2003 இதழில் அரவிந்தன் எழுதிய 'இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனின் இடம் எது?' படித்தேன்.

    'ஜெயகாந்தன் கதைகளை முன் வைத்து' என்று அவர் தொடங்குவது 'ஜெயகாந்தன் கதைகளை முன்வைத்து அவர் மீது நிகழ்த்தும் தடியடிப் பிரயோகம் ' என்பதன் தலைப்புச் சுருக்கம்.

    'அவருடைய கதைகள் பற்றித் தீவிர இலக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இதழ் ஒன்றில் விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் ஒன்றும் கிடையாது' என்று ஆரம்பிக்கிறார் அரவிந்தன் கெத்தாக.

    சரி சார், அப்புறம் நீங்க உங்க வேலையைப் பார்க்கப் போங்க. நாங்க எங்க வேலையைப் பார்க்கப் போகிறோம். காலச்சுவடு அதன் வேலையைப் பார்க்கட்டும். ஜெயகாந்தன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்.

    அட, ஒரு பேச்சுக்குச் சொன்னாப் போயிடறதா? ஜெயகாந்தனை இன்னிக்கு உண்டு இல்லேன்னு பண்ணிடலாம் வாங்க.

    அரவிந்தன் நம்மை வாசலில் நிறுத்தி விட்டுச் சிடுசிடுத்தபடி பிரம்போடு விமர்சன வகுப்புக்குள் நுழைகிறார்.

    'கதை முழுவதும் இரைச்சல்', 'மிகு உணர்ச்சி', 'ஊதாரித்தனமான வார்த்தைப் பிரயோகம்'

    மனுஷன் மகா கோபமாக இருக்கிறார். ஜெயகாந்தனை பெஞ்சில் எழுந்து நிற்கச் சொல்லி விரட்டுகிறார்.

    முதல் விளாசு - 'ஜெயகாந்தனின் முதல் கதையிலேயே அவர் ஏ தென்றலே என்கிறார். படிக்க எனக்கு மிகவும் கூச்சம் ஏற்படுகிறது'.

    ஜெயகாந்தன், ஏன் இப்படிக் கஷடப் படுத்துகிறீர்கள்? அடிக்கத்தானே விமர்சகர்? அவர் இப்படிக் கூசிக் குறுகி நிற்கலாமா? 'இது என் முதல் நாவல்' என்று 'ஒரு புளியமரத்தின் கதை' முன்னுரையில் எழுதியதுபோல் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்திருந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் வருமா? உமக்கு ஏன் புத்தி கெட்டுப் போனது?

    (வெகுஜனப் பத்திரிகையான கல்கியில் வெகுஜன எழுத்தாளரான குட்டிகிருஷ்ணன் - கி.ராஜேந்திரன் -இருபத்தைந்து வருடம் முன்னால் இதுதான் புளியமரம் என்று அறிமுகப் படுத்தாமல் இருந்தால் எனக்கும் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும், புன்னை மரத்துக்கும் புளிய மரத்துக்கும் வித்தியாசம் தெரிந்திருக்காது. குட்டிகிருஷ்ணனுக்கு நன்றி சொன்னால் அரவிந்தன் என் தலையில் ஓங்கிக் குட்டுவார்).

    ஜெயகாந்தன் கதைகளில் அடிக்கடி ஆவும் ஓவும் போட்டுக் கொண்டிருந்தால் எப்படித் தாங்குவது என்று இன்னொரு முறை பிரம்பை ஓங்கி விட்டு, கை வலிக்கிறதே என்று அலறுகிறார் அரவிந்தன்.

    சுஜாதா ஒரு தடவை தயங்கித் தயங்கிச் சொன்னாரே - 'ஓ'வை ஜெ.கே ஒரு கதையில் கொஞ்சம் போல் பயன்படுத்தியிருக்கிறார் என்று. அது இல்லையா விஷயம்? அவர் போட்ட மீதி 'ஓ'வை எல்லாம் நான் ஏன் பார்க்காமல் போனேன்? ஓ ஜெயகாந்தன், ஓய் ஜெயகாந்தன், அடிக்க வாகாக உள்ளங்கையை இப்படி நீட்டுமய்யா. பெஞ்சில் நின்றால் குனியக் கூடாதா என்ன? இனிமேல் ஓ போடாமல் கதை எழுதுவேன் என்று நூறு முறை இம்போசிஷன் எழுதும்.

    பாக்கியராஜ் படம் மாதிரிக் கதை எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று அடுத்த அடி. பாக்கியராஜ் இங்கே எங்கே வந்தார் என்றெல்லாம் கேட்கக் கூடாது. அப்புறம் அரவிந்தன் கை முருங்கைக் காய் பறிக்கப் போயிருக்குமா என்ன? உங்களுக்கும் ரெண்டு சாத்து. ஆமா.

    'வாசகர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் என்ற ஜெயகாந்தனது துடிப்பு கடைசி வரை ஓய்ந்ததாகத் தெரியவில்லை'

    அரவிந்தனின் இந்தக் 'கடைசி வரை'யை இன்னொரு தடவை அவசரமாகப் படித்து, காலச்சுவடைத் தொப்பென்று போட்டு விட்டு ஓடியே போய் இந்து பத்திரிகையைத் தேடினேன். ஸ்போர்ட்ஸ் பேஜில் ஓபிச்சுவரியை வரி விடாமல் படித்தேன். கர்த்தருக்கு ஸ்தோத்ரம். நலம். நலமே.

    ஜெயகாந்தன் கதைகளை இது வரை விமர்சித்தவர்கள் (அதாவது பாராட்டியவர்கள்) அரவிந்தனின் கண்ணில் அடுத்துப் படுகிறார்கள். ஒரு குறுஞ்சிரிப்போடு அவர்கள் பக்கத்தில் போக, முன்வரிசையில் பாவம், நடுங்கியபடி நவபாரதி. (ஆமா, தோத்தாத்திரி எங்கே? அரவிந்தனின் பிரம்புக்குப் பயந்து ஆப்செண்டா?)

    நவபாரதிக்குதான் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் என்று எத்தனை வித அர்ச்சனை! 'ஆராதகர் நவபாரதி', 'உபாசகர் நவபாரதி', 'ஜெயகாந்தனின் பிரம்மாண்டத்தைக் கண்டு மூர்ச்சை போட்டு விழுந்த நவபாரதி'.

    அது யார் பொன்னீலனா? 'தமிழ் நாட்டுப் பண்பாட்டுத் தளத்தை ஜெயகாந்தன் கதைபோல் ஆரோக்கியமாக உலுக்கிய இன்னொரு சிறுகதையை நான் இன்றுவரை அறியவில்லை' என்கிறாரா அவர்?

    அரவிந்தன் ஒரு வினாடி பொன்னீலனின் கண்களைப் பார்க்கிறார். மனுஷன் சாமி வந்த மாதிரி நிற்கிறார், பார் என்று நம்மிடம் சைகை செய்கிறார். பொன்னீலன் புல்லரிக்கிறதாக அவர் புறங்கையைப் பார்த்து விட்டுத் தீர்மானமாகச் சொல்கிறார்.

    இந்த நவபாரதியின், இந்தப் பொன்னீலனின் மிரட்டலையும் மீறி ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தில் நுழைந்தாராம் அரவிந்தன். கேட்கவே ரத்தம் கொதிக்கிறது. மூர்ச்சை போட்டவரும், புல்லரித்துப் போய் நிற்கிறவரும் அப்படியே படுத்தும், புறங்கையைச் சொரிந்து கொண்டும் கிடக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு இப்படி அரவிந்தனை மிரட்டுகிறார்கள்?

    சரி, இந்த மிரட்டலையும் மீறித் துணிவோடு அந்த அடலேறு அக்கினிப் பிரவேசத்துக்குள் போய்ப் பார்த்தால் அம்மா பெண்ணுக்குத் தலையில் தண்ணீரை விட்டுக் கொண்டிருக்கிறாள். அம்புட்டுத்தானா என்று ஏமாற்றம் அரவிந்தனுக்கு. ஜெயகாந்தன் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால், புத்தகம் வாங்கிய காசுக்கு அவருக்குத் திருப்தி கிடைத்திருக்கும் :

    1) ஸ்ரீவேணுகோபாலன் எச்சமாகத் தொடர்ந்து எழுதியது போல் அந்த கங்காவைத் தலையில் நெருப்பு வைத்துக் கொல்லலாம். குறைந்த பட்சம் அவள் தலையில் வென்னீரையாவது ஊற்றியிருக்கலாம். அரவிந்தனுக்கு ஜலதோஷம் பிடித்து அடுக்கடுக்காக இப்படித் தும்மல் வராது.

    2) கங்காவும் அவள் அம்மாவும் காலச்சுவடு பத்திரிகையைப் புரட்டி, அரவிந்தனின் இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் 'விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே விழும் வெளியைச் சாத்தியப்படுத்தும் காரணிகளையும் அவற்றின் ஊற்றுக்கண்களையும் இனம் காண முயலும் பிரக்ஞைக்கு ஒற்றைப் பரிமாண போதனைகளால் எந்தப் பலனும் இருக்காது' என்பதன் அர்த்தம் என்ன என்பதை விவாதித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதாகவோ, சேர்ந்து கையெழுத்துப் போட்டு காலச்சுவடுக்கு வாசகர் கடிதம் எழுதுவதாகவோ முடிக்கலாம்.

    3) சூடாக ஒரு கப் காப்பி சாப்பிட்டுப் படுத்துக் கொள்ளப் போகவைத்திருக்கலாம்.

    'நல்ல' எழுத்தைப் படித்த திருப்தியும் வேண்டும். தீவிர எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் ஆழ்ந்த தொந்தரவிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும் என்று உள்ளூர விரும்புகிறவர்களுக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று 'பல் எனாமல் பாதுகாப்புக்கும், ஈறுகளின் உறுதிக்குமான பற்பசை கோல்கேட்' என வாயசைவுக்கு வார்த்தை ஒட்டாமல் சொல்லும் டி.வி விளம்பர பல் டாக்டர் போல் சொல்கிறார் அரவிந்தன். அரவிந்தன் குரல் அவருடைய சொந்தக்குரல் தானா என்று நான் கேட்கமாட்டேன்.

    கோபால் பல்பொடி ஒண்ணு கொடுப்பா. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றதாமே?

    நன்றி: திண்ணையில் மத்தளராயன் படைப்புகள்

    அயோத்தியாவும் ஷாக்-கும்

    சனிக்கிழமைகளில் சௌகரியமான இரவு பதினோரு மணிக்கு விடுமுறைக் கொண்டாட்டமாக திரைப்படங்களைப் போட்டு வருகிறார்கள் சன் டிவி. இதனால் 'சென்ற வார உலகம்' நின்று போனதும், பூத் / ஷாக் / ராஸ் ஆகியவற்றை விட பயமுறுத்தலான 'காதல் எஃப்.எம்' போன்ற படங்களும் கிடைத்தாலும், மீண்டும் 'சதி லீலாவதி', மீண்டும் 'ஆளவந்தான்', முதன் முறையாக 'அயோத்தியா' போன்றவைகளும் கிடைக்கிறது.

    'சதி லீலாவதி' வாஞ்சையான படம். உள்ளே இருக்கும் அரக்கன் எட்டிப் பார்த்தால் ரமேஷ் அரவிந்த் போலத் தெரியலாம். வாடர் டேங்க் அடியில் நடந்த கசமுசாவை அகஸ்மாத்தாக கிண்டலடித்துக் கொள்ளும் பால்ய காலத் தோழி; தப்பிக்க சான்ஸ் கிடைத்தால் தவறு செய்ய நினைக்கும் ஹீரோ; குடும்பத்துடன் விடுமுறை அடிக்க நினைக்கும் மாமனார். இளையராஜாவின் 'மகராஜனோடு ராணி வந்து சேரும்' பாடலும், பாலு மகேந்திராவின் கனவு போன்ற காட்சிகளும், பாடற்காட்சியென்றால் ரெஸ்ட்ரூம் போக நினைப்பவர்களையும் விமர்சனத்திற்கு குறிப்பு எடுத்துக் கொள்பவர்களையும் ப்ரேக் போடவைக்கும்.

    'ஆளவந்தான்' இலக்கிய செறிவான மிடில் மேகஸின் போல் இருக்கிறது. முதல் புரட்டலில் கொஞ்சம் அயர்ச்சியைத் தந்தது. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தபோது ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தியது. இரண்டு வருடம் கழித்து மீள் பார்த்தபோதும், விறுவிறுப்புடன் சென்றது. நந்து என்பவனை குரங்குக்கு ஒப்பீடாக முன்னிறுத்தி அறிமுகம். ரவீணா டாண்டனுடன் சிட்-காம் போன்ற மெல்லிய புன்னகையை வரவைத்துக் கொண்டேயிருக்கும் நகைச்சுவை. (வசனம்: கமல்) சுவற்றில் மனீஷா போஸ்டரை தேய்த்துவிட்டு விடைபெறுதல். முண்டத்தைப் பேசவைத்துப் பார்க்கும் எள்ளல். கல்யாணமாவதற்கு முன்பே கர்ப்பம் என்பதை லைட்டாக எடுத்துக் கொள்ளும் சிட்டி அப்பா சரத்பாபு. சிறிது நேரமே வந்து போகும் மனீஷா முதல் வித்தியாசமான வியாதியுடன் வரும் மாமா வரை பொருத்தமான கேரக்டரைஸைஷன். சந்திரமுகியில் டாடா இண்டிகாம் போல், கோல்ட் வின்னர் பலூன் க்ளைமாக்ஸில் குதித்தது தவிர, 'சண்டான்ஸ்' விருதுகளுக்கு எற்ற படம்.

    அஜீத்தின் கடந்த மூன்று வருடப் படங்கள் கொடுத்த ஏமாற்றம் மாதிரி இல்லாமல் 'அயோத்தியா' மெலிதான ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. 'நீ எந்த ஊர்' என்று முகவரி இல்லாத நடிகர்களைக் கொண்டு, சமீபத்திய தலைவலியான 'திருப்பாச்சி'களை விட -- திருப்தியும் லாஜிக்கும் மெஸேஜும் மசாலாவும் கலந்த படம்.

    இந்து சி.ஈ.ஓ.வும் முஸ்லீம் சி.ஓ.ஓ.வும் பிஸினஸ் பார்டனர்கள். அவர்களிடம் வேலை பார்த்து தில்லுமுல்லாடும் மணிவண்ணன் இருவருக்குமிடையே பூச்சி மருந்தை விதைத்து, கொசு வலையை நெய்கிறார். பிரிகிறார்கள். இருவரின் மனைவியரிடையே நட்பு தொடர்கிறது. ஒருவரின் பிள்ளைப்பேற்றில் ஆபத்து என்பதை அறிந்து, தமிழ் சினிமா கோட்பாடுகளின்படி, குழந்தைகள் இடம்மாறி வளர்கிறார்கள். இருவரும் வளர்ந்தபிறகு, எதிர் கேம்ப் முறைப் பெண்களை, மதம் விட்டு மதம் மாறாமல் காதலிக்கிறார்கள்.

    மணிவண்ணனின் சத்யராஜ் ஸ்டைல் நக்கல், 'மெட்டி ஒலி'/டும் டும் டும் டெல்லி குமாரின் அமரிக்கையான மதராஸா ஆசிரியர் தோற்றம், வில்லத்தனத்தால் பைத்தியக்காரராகும் இளவரசு ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாலைந்து வருடம் முன்பு எல்லா படங்களிலும் தலையை காட்டிக் கொண்டிருந்த மணிவண்ணன், ஏன் இப்போது வருடத்துக்கு ஓரிரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்!?

    போரடிக்காத திரைக்கதை, நம்பக் கூடிய காட்சியமைப்பு, ஒத்துக் கொள்ளக் கூடிய, ஆனால் எதிர்பார்க்கவைக்கும் முடிவு என்று எல்லாம் பளிச் பளிச். ஸ்டார் வேல்யூ இல்லாவிட்டாலும் இரு (அறிமுக?) நாயக நாயகிகளும் அலட்டாமல் தோன்றியிருந்தார்கள். பாட்டுக்கள் எதுவுமே பெரிதாக ரசிக்கும்படி இல்லாததுதான் ஒரே குறை.

    ரஜினி நடித்திருந்தால் ஓடியிருக்கும். குறைந்தபட்சம் ரகஸியாவோ மும்தாஜோ ஆட்டம் போட்டிருந்தால் கூட விகடனில் இடம்பிடித்திருக்கும்.

    திங்கள், மே 09, 2005

    தனியார் பொறியியல் கல்லூரிகள்

    அண்ணா பல்கலை. வெளியிட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரப் பட்டியல்



    முப்பத்தொன்று - அறுபது

    அறுபத்து மூன்று - தொண்ணூற்றி நான்கு

    95 - 111


    நன்றி: நெவர் எண்டிங் ட்ரீம்ஸ்

    குறிப்பு கொடுங்க சார்



    இந்தப் படத்துக்கு பொருத்தமான கிண்டல் குறிப்பு கொடுங்கள் பார்க்கலாம்.

    எனக்குத் தோன்றியது:

    'புஷ் கை குலுக்க மறுத்ததால், இந்த ஏற்பாடு - ப்யூடின்'

    'இப்போதைக்கு வட்டிக்கு பதிலாக இந்த வோல்கா காரை வச்சிக்கறேன் - புஷ்'

    வெள்ளி, மே 06, 2005

    இரு தலைக் காதல்

    ஒரு தலை ராகம் ::

    இது குழந்தை பாடும் தாலாட்டு, இது இரவு நேர பூபாளம்
    இது மேற்கில் தோன்றும் உதயம், இது நதியில்லாத ஓடம்.

    நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
    வடமிழந்த தேரது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்
    சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
    உறவுராத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்.

    வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொட்டுக்கிறேன்
    வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்,
    விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனைப்பார்க்கிறேன்
    விருப்பமில்லா பெண்ணை எண்ணி, உலகை நான் வெறுக்கிறேன்.

    உளமறிந்த பின் தானோ, அவளை நான் நினைத்தது
    உறவுருவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
    உயிரிழந்த கருவைக்கொண்டு, கவிதை நான் வடிப்பது
    ஒரு தலையாய் காதலிலே, எத்தனை நாள் வாழ்வது.



    காதல்

    உனக்கென இருப்பேன்.
    உயிரையும் கொடுப்பேன்.

    உன்னை நான் பிரிந்தால்,
    உனக்கு முன் இறப்பேன்.

    கண்மணியே, அழுவதேன்.
    வழித்துணை நானிருக்க???



    கண்ணீர் துளிகளை, கண்கள்
    தாங்கும் கண்மணி, காதலை
    நெஞ்சம் தான் தாங்கிடுமா?

    கல்லறை மீது தான்
    பூத்த பூக்கள் என்று தான்
    வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?

    மின்சாரக்கம்பிகள் மீது,
    மைனாக்கள் கூடு கட்டும்
    நம் காதல் தடைகளைத்தாண்டும்.

    வளையாத நதிகள் இல்லை.
    வலிக்காமல் வாழ்க்கை இல்லை
    வருங்காலம் காயம் ஆற்றும்.

    நிலவொளியை மட்டும் நம்பி
    இலையெல்லாம் வாழ்வதில்லை
    மின்மினியும் ஒளி கொடுக்கும்.



    தந்தையையும் தாயையும் தாண்டி
    வந்தாய் தோழியே, இரண்டுமாய்
    என்றுமே நானிருப்பேன்

    தோளிலே நீயுமே சாயும்போது
    எதிர்வரும் துயரங்கள்
    அனைத்தையும் நானெதிர்ப்பேன்.

    வென்னீரில் நீ குளிக்க,
    விரகாகி தீக்குளிப்பேன்
    உதிரத்தில் உன்னைக்கலப்பேன்.

    விழிமூடும் போதும் முன்னே
    விலகாமல் நானிருப்பேன்

    கனவுக்குள் காவல் இருப்பேன்
    நானென்றால் நானே இல்லை
    நீ தானே நானாய் ஆனேன்
    நீ அழுதால் நான் துடிப்பேன்.

    புக் கிளப்

    விகடன்:

    சொல்லப்படாத சினிமா :: ப.திருநாவுக்கரசு

    'தமிழில் வர்த்தக சினிமாவைத் தவிர்த்து ஒரு திரைக்கலைஞன் இயங்க முடியுமா?' என்கிற கேள்விக்கான விடையாக இருக்கிறது இந்த நூல். யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஆவணப்படங்கள் வளர்ந்த வரலாறும் அது பற்றிய தகவல்களுமாக பயனுள்ள தொகுப்பு. 500 இந்திய & தமிழ் ஆவணப்படங்களின் அறிமுகம் கிடைப்பது நல்ல அனுபவம். கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய 'பாரன்ஹீட் 9/11' திரைப்படம் முதல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அவலம் காட்டும் 'தீக்கொழுந்து' வரை ஒரே நூலில் தெரிந்துகொள்ள முடிகிறது. அரிய புகைப்படங்களையும் தேடிச் சேர்த்திருக் கிறார்கள். சமூக அக்கறையோடு எடுக்கப்படும் ஆவணப்படங்கள், பொதுமக்களின் கவனத்தைப் பெறாமலேயே போய் விடுகிற நேரத்தில், இத்தகைய முயற்சிகள் வரவேற்கத்தகுந்தவை.

    (வெளியீடு: நிழல். விலை ரூ.200/-)



    கோபுரக்கலை மரபு :: குடவாயில் பாலசுப்பிரமணியன்

    'தமிழகக் கோயில்கள் என்பவை வெறும் வழிப்பாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. நாட்டின் பண்பாட்டை, கலை உணர்வை, சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள்' என்கிறது இந்த ஆராய்ச்சி நூல். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் எனப் பல்துறை கலைகள் செழித்து இடம் பெற்றிருக்கும் கோயில்களின் கோபுரங்களை ஆய்வு செய்திருக்கிறார்.

    வரலாறு, கல்வெட்டு, கலையறிவு போன்ற பல துறை ஆர்வமில்லாவிட்டால் இந்த மாதிரி நூலை எழுத முடியாது. 'அண்ணாந்து பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கோயில் கோபுரங்களில் இவ்வளவு விஷயங்களா?' என்று ஆச்சர்யமூட்டுகிற நூல்.

    (வெளியீடு: கோயிற் களஞ்சியம், தஞ்சை-7. விலை. ரூ. 200/-)

    வியாழன், மே 05, 2005

    அன்னியன்

    பிடித்த பாடல்களின் வரிசைப்படி அடுக்கியிருக்கிறேன்.

    1. அண்டங்காக்கா :: ஜஸ்ஸி கிஃப்ட், கேகே, ஷ்ரேயா கோஸல்
    ரண்டக்க டக்கர் டக்கரு டக்கரோ டக்கரு... அய்யங்கார் மாமி சதா-வின் அடல்ட்ஸ் ஒன்லி டூயட். ரொம்பப் பிடிச்சிருக்கு

    அண்டாங்காக்கா கொண்டக்காரி
    அச்சுவெல்ல தொண்டக்காரி



    2. அய்யங்காரு வீட்டு அழகே :: ஹரிஹரன், ஹரிணி - வைரமுத்து
    சந்திரமுகியில் கூட கடைபிடிக்க ஆரம்பித்திருக்கும் 'ஒரு பாட்டு; அட்லீஸ்ட் ரெண்டு ட்யூன்' ஃபார்முலாவில் இதமான ஆரம்பம். ('ஜகதோ தார' என்னும் பாட்டு எங்காவது கிடைத்தால் முழுதாகக் கேட்டுப் பார்க்க வேண்டும்.) அதற்குப் பிறகு நாட்டை/கம்பீர நாட்டை என்று கர்னாடக வாசம் வீசுகிறது போல. (சொல்லிக் கொடுத்தவர்: மன்ற மையம் - Raga of songs -- ஸ்ரீனி)

    காதலன் சமத்து
    காதலில் தொல்லை



    3. காதல் யானை :: நகுல், நெல்வின், ஜீ வி ப்ரகாஷ் - நா முத்துக்குமார்
    வைரமுத்து ஸ்டைலில் நாகஸாகி, ஹிரோஷிமாவை எல்லாம் பெண்ணுக்கு ஒப்பிடுகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் வட கொரியா போல் மிரட்டுகிறாயே, அமெரிக்கா போல் எல்லா இடங்களிலும் குண்டு போடுகிறாயே என்று அரசியல் காதல் செய்வார்கள். 'மாகரீனா' போல் கோரஸ் பிட் வேறு வந்து படுத்துகிறது. இருந்தாலும் பரவாயில்லை!


    3. கண்ணும் கண்ணும் நோக்கியா ::ஆண்ட்ரியா, லெஸ்லி லூயிஸ், வசுந்தரா தாஸ்
    ஆப்பிள் லேப்டாப் செய்வதில்லையாமே... அது எல்லாம் எனக்குத் தெரியாது. முக்காபலாவிற்குப் பிறகு அதே ரகத்தில் கிடைத்திருக்கும் உருப்படியான பாட்டு. 'அய்வா' எல்லாம் product positioning-ஆ என்று வெளிவரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களின் நாக்குகளில் வெகுகாலம் அய்வா புரளும்.


    5. ஓ... சுகுமாரி :: ஹரிணி, ஷங்கர் மஹாதேவன் - வைரமுத்து
    தூக்கம் வருது. கட்டாங்கடைசியில் வரும் ஹரிணியை முன்பே பாட்டில் சேர்த்துக் கொண்டிருக்கலாம். சாய்ஸில் விட்டுவிடுவேன்

    என் மனம் ஒரு மலரடி
    மலருக்குள் அடிதடி


    'முதல்வனை' விட கோடி மடங்கு தேவலை. பாடல் வரிகளை அமுக்கிக் காட்டுவதில் 'பாய்ஸ்' ரெஹ்மானை மிஞ்சியிருக்கிறார் ஹாரிஸ். ஆனால், 'சந்திரமுகி'யின் வித்யாசாகரை (அந்நியனில்) ஹாரிஸ் எட்டவே இல்லை.

    மன்ற மையத்தில் பார்த்த ஒரு ஒப்பீடு :: The Hub :: Shanke'rs Anniyan Songs:

  • இளையராஜா = Win98 (Old but stable, not good for networking, doesnt get along with people)
  • ஏ.ஆர். ரெஹ்மான் = Windows 2000 Service Pack 4 (Solid)
  • வித்யாசாகர் = Win XP ( Colorful, lot of bugs)
  • ஹாரிஸ் ஜெயராஜ் = லிண்டோஸ் 2000 (A hybrid cross system cloned from Windows 200 with Linux)
  • யுவன் ஷங்கர் ராஜா = லீனக்ஸ் (Open source, share lot of resources around the world, you know what i mean )

  • தேவா, பரத்வாஜ், கார்த்திக்ராஜா போன்றோரை விட்டுவிட்டார் ;;-)

    புதன், மே 04, 2005

    முடுக்கியதும் முடுக்காததும்

    1. Google Web Accelerator: கூகிளிடம் இருந்து வலையை முடுக்கி விடுவதற்கான நிரலி வெளியாகியிருக்கிறது. தற்போதைக்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் கூட அகலபாட்டை மக்களுக்கு மட்டுமே வேலை செய்யும். தள உரிமையாளர்களுக்கான வ.கே.கே.களையும் படித்து விடவும்.

    2. பேக்பாக் அருமையாக இருக்கிறதாம். யாஹுவின் 360 போலவே பட்டியல் போடலாம்; படங்கள் காட்டலாம்; விக்கி கூட செய்யலாம். jot-ஸ்பாட்டுக்கும் குமுக-எழுத்துக்கும் சரியான போட்டி என்கிறது Micro Persuasion.

    3. டாக் ஸேர்ல்ஸின் (Doc Searls) எது வலைப்பதிவு என்பது குறித்த பட-வில்லைகள், சிந்தையை அல்வா கொடுக்காமல் கிளறுகிறது.

    4. சமையலறையை புரட்சி செய்து நவீனமாக்குகிறது எம்.ஐ.டி.

    5. மசாலா அரைத்து சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்து என்று (லண்டன்) டைம்ஸ் அலறுகிறது. (பக்கத்து அடுக்ககத்தில் இருப்பவரின் பையனுக்கு lead அதிகம் இருப்பதாக சொன்னார். சாயத்தில் ஆரம்பித்து பாத்திரங்களில் ஆராய்ச்சி தொடர்ந்து கடைசியில் சாம்பார் பொடியிலும் ரசப்பொடியிலும் லெட் மிகுந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். மில்லில் அரைக்கும்போது, துருப்பிடிக்காத மெஷினாகப் பார்த்து, அரைச்சு சாப்பிட வேண்டும்.)

    6. புத்தகப்புழுக்களுக்கு ஏற்ற வலைப்பதிவுகளை பாஸ்டன் க்ளோப் குறிப்பிட்டிருக்கிறது. அவ்வப்போது எட்டிப்பார்த்தால் அமேசான்(.காம்) உலகை அறியலாம்.

    7. அன்னையர் தினத்தை முன்னிடாமல் நியு யார்க் டைம்ஸின் கட்டுரை, மாபெரும் சபைகளில் நடக்கும் மகளிரை அலசுகிறது.

    ஷல் வீ டெல் தி ப்ரெஸிடெண்ட்?

    யார் ஜெயிப்பார்கள்?
    யூகே-வின் தமிழ் வலைவாசிகள் ஏன் தேர்தலை கண்டு கொள்ளவேயில்லை??
    டோனி ப்ளெயரின் வெற்றி நிச்சயமா???


  • பிபிசி

  • டைம்ஸ்

  • நியு ஸ்டேட்ஸ்மேன்

  • எகானமிஸ்ட்

  • கார்டியன்

  • என்.பி.ஆர்

  • முன்னுமொரு காலத்தில்

    வலையில் இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பதிவது பெரிய விஷயம். இரண்டாண்டு காலமாக ரமணீதரன் வலைப்பதிந்து வருகிறார். வலைப்பதிவு ஏன், நியு ஜெர்ஸி பெட்னா விழா குறித்த பதிவுகள், திரைப்படங்கள், PBS / NPR-இன் All Things Considered, The Connection, On Point என்று விளாசுகிறார்.

    லிட்டில் பிக் மேன், The Hudsucker Proxy, தி ஸ்டிங், Rio Lobo, பிக் ஜேக், The Comancheros, Rio Grande , Sands of Iwo Jima, Cradle will rock, ரிபல் விதவுட் அ காஸ், ப்ளூ க்ரஷ், தி பேட்ரியாட், தி ரெக்ரூட், தி ஹவர்ஸ், தி வேனிஷிங் ஹாரி, un ami qui vous veut du bien (With a Friend Like Harry), சவுண்ட் அண்ட் ஃப்யூரி, Yadon ilaheyya (Divine Intervention), லீவிங் ஜெருசலம் பை ரயில்வே, தி எண்ட் ஆஃப் தி அஃபேர், எ க்ரையிங் கேம், மிட்நைட் இன் தி கார்டன் ஆஃப் குட் அண்ட் ஈவில், என்று பார்த்த படங்களுக்கு எல்லாம் பார்வையோ விமர்சனமோ (இப்பொழுதாவது) முன்வைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    அப்பொழுது எனக்கு வந்த சந்தேகம். மனிதர் தூங்குவாரா அல்லது கண்ணிமைக்கும் நேரங்கள்தான் உறக்கம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும். பிறகு புள்ளை குட்டிக்காரர் ஆகிப்போனார். பாஸ்டன் வந்தபிறகு சகவாசமும் சரியில்லை. கெட்டுப் போயிருக்கிறார் :-/

    The redistricting plan, வானொலி நாடகங்கள், கதைசொல்லிகள், ஞானக்கூத்தனின் கவிவகுப்பு, தமிழன் அடையாளம், கண்ணில் தெரியுது வானம், அவருக்கு ரொம்பப் பிடித்தமான எழுதுபொருளான கவிதை, அன்றைய நாளிலே அவர் அஞ்சிய இன்னொரு சொல்லான பாரதி, உயர்வு நவிற்சி, சரிகைக்குஞ்சச்சொற்கள்,
    காற்றடைத்தபைக்கூற்றுகள், சில கெட்ட உறுப்புகள் என்று எழுந்தவை, எதிர்ப்பட்டவை, பார்வை, மற்றவை என்று அடுக்கி உங்களை வலைபாஸ் (தமிழில் என்ன?) பாதையில் விடப்போவதில்லை.

    (தமழ்ச் சொல் என்றவுடன் கண்ணில் படுவது: மறுப்புக்கூற்று (disclaimer), narcissist masks -- தன்னீர்ப்புமுகமூடிகள் போன்ற சொல்லாக்கங்கள்.)

    வானவியற்றுறையையும் விடவில்லை. பெயரிலி ஆகிப் போனதும் இங்கே பதிவது குறைந்து போனது.

    அவருடைய பதிவுகளில் இருந்து:

  • blogger.com தனது அண்மைய அமைப்பு மாற்றுதலோடு நீண்ட உள்ளிடுகைகளை ஏற்றுக்கொள்வதைத் தடை செய்கின்ற நோக்கமேதும் கொண்டதாலேயே, இந்த இரண்டு உள்ளிடுதல்களோடும் BIG POST ERROR என்று சுருக்கமான வரப்புயர விளக்கத்தைப் பெற்றேனோ தெரியாது :-) [அல்லது தமிழிலே நீண்டதாய் எழுதியதை ஆங்கிலத்திலே, "நல்ல கருத்துக்களைச் சொன்னார்; கைதட்டிவிடுங்கள்" என்ற பகிடிபோல மொழிபெயர்ப்பாகச் சொல்லியதோ தெரியாது :-D]

  • இன்னொரு ஆறுதலான விடயம், இணையத்தின் அறியப்பட்ட "I don't care what kind of cake you bake; but, I will top it with my sour cream" அறிஞ்ஞ ஆசாமிக்குஞ்சுமோன்கள் இவரின் திரைப்படவிமர்சனங்களிலே தங்கள் உள்ளீடு என்றளவிலே இதுவரை குப்பை சொட்டாமல், கொட்டாமலிருப்பது.

  • வலைப்பதிதலிலே உள்ள எதையும் விரும்பியவாறு என்ற நாட்குறிப்புச்சுதந்திரத்தைக் கண்டு கொண்டாலும், சொல்லும் பாங்கிலே கொஞ்சம் நிதானமாக, பின்னாலே இரண்டடி வைத்து நின்று நான் சொல்லவருவதை நானே கேட்டு எழுதுவதாகத் தீர்மானம். அன்றாடம் கேட்பதும் காண்பதும் வாசிப்பதுமாக உள்ளே வருவனவற்றிலே எந்தளவு உள்ளே தங்குகிறது என்று தெரியவில்லை. ஒரு மாதம் கழித்துப் பார்த்தால், 'இத்தனையையும் உள்வாங்கிக்கொண்டதால் என்ன பயன்' என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. சில மாதங்களிலே அடையலின்மேலே அடையற்படிவாய்த் தேங்கி, பாறையாகிப் போய்விடுகிறது. கதை, கவிதை, கட்டுரை எழுதுவதே சூழல்-->இருப்பு-->மூட்டம் காரணமாகத் தேய்ந்து போகையிலே, இந்த வலைப்பதிவு குறைந்த பட்சம் அன்றாட அறிதலிலே ஓரிரண்டையாவது பதித்துக்கொள்ள உதவும்; இன்னும், பத்தாண்டுகளிலே திரும்பிப் பார்க்கையிலே வந்த பாதையும் அறிந்த கருத்துக்களும் எந்தளவு குறிகளையும் நிலைகளையும் மாற்றியிருக்கின்றன என்றாவது அறிவதிலே ஒரு திருப்தி ஏற்படக்கூடும்.
  • செவ்வாய், மே 03, 2005

    அரசு பதில்

    Kumudam Weekly ::


    எஸ்.ஜனார்த்தனன், சின்னதாராபுரம்.
    ‘தமிழ்நாடு விளங்காமல் போனதற்கு சினிமா பைத்தியங்களாக தமிழர்கள் இருப்பதுதான் காரணமா?

    அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திரையரங்கங்கள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க வேண்டுமே? தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தது வேண்டுமானால் ஒரு காரணமாக இருக்கலாம்.



    வி.மாரிமுத்து, பரப்பாடி.
    சிறந்த கலைப் படைப்பு என்பதற்கு அளவுகோல் என்ன?

    (1)வாழ்க்கையின் அம்சம் ஒன்றை அந்தப் படைப்பு புதிதாக வெளிப்படுத்துகிறதா? வெளிப்படுத்தப்பட்ட விஷயம் உண்மையானதுதானா?
    (2) அது அழகாகவும், சொல்ல முற்பட்ட பொருளுக்கு ஏற்ற முறையிலும் அமைந்திருக்கிறதா?
    (3) கலைஞனுக்கும் அவன் படைத்த படைப்புக்கும் உள்ள உறவு சத்தியமானதா? மூன்றாவதாகச் சொன்ன இந்த அளவுகோல், மிக முக்கியமானது. படைப்பவனிடம் உதித்த அதே உணர்ச்சிகள், அதைப் படிப்பவனுக்கோ, பார்ப்பவனுக்கோ, கேட்பவனுக்கோ ஏற்படச் செய்வதே அந்தச் சத்தியம்தான்’ (சொன்னது டால்ஸ்டாய்)

    பரிநீதா

    இசை: ஷாந்தனு மொய்த்ரா (Shantanu Moitra)
    பாடலாசிரியர்: ஸ்வனாந்த் கிர்கிரே (Swanand Kirkire)
    சாய்ஃப் அலி கான், வித்யா பாலன், ரேகா, சஞ்சய் தத், தியா மிர்சா


    பியா போலே - சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    அந்தக் கால மனீஷா கொய்ராலா போல் இருக்கிறார் நாயகி வித்யா பாலன். காதலை இயற்கையின் பல வண்ணங்களோடு ஒப்பிடும் வரிகள். 1942- எ லவ் ஸ்டோரி போன்ற மெல்லிய இசை. கொஞ்சும் ஷ்ரேயா கோசாலின் குரல் வெகு பாந்தமாக வருடுகிறது.
    மீண்டும் மீண்டும் கேட்கலாம்


    கஸ்தோ மஸா - சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    குழந்தைகளுடன் பயணிக்கும் ஹீரோ அறிமுகப் பாடல். கனவுக் காதலர்களை வர்ணிக்கிறார்.
    படம் பார்த்த பிறகு மேலும் பிடித்துப் போகலாம்


    சுனா மன் கா ஆகன் - சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    பிரிக்கப்பட்ட இளஞ்ஜோடிகளின் தொக்கி நிற்கும் கேள்விகள். இடைவேளைக்குப் பின் சோகத்தைப் பிழிய உதவும்.
    பரவாயில்லை


    கேஸி பஹேலி ஜிந்தகானி - சுநிதி சௌஹான்
    மும்பையில் மூடப்பட்ட பார்களில் வரும் ஜாஸ் இசை போல் இடுப்பை மெதுவாக வளைத்து ஆடிப்பார்க்க வைக்கிறார்கள். திரையில் ரேகா தோன்றுவார்.


    ராத் ஹமாரி தோ - சித்ரா, ஸ்வனாந்த்
    சுவர்க்கோழி ரீங்காரமிட, இராப்பாடகனின் சோக அழைப்போடு துவங்குகிறது.
    அமைதியான நேரங்களில் கேட்கலாம்


    தினக் தினக் தா - ரீடா கங்குலி
    கல்யாண முன்னோட்டத்தின் குரூப் டான்ஸ். திரைப்படத்தின் துள்ளல் பாடல். ஹிந்திக்குக் கிடைத்திருக்கும் புதிய இலா அருணான, 'ரீடா கங்குலி' வெகு சீக்கிரமே தமிழில் ரகஸியாவுக்குக் குரல் கொடுத்து விடுவார்.
    இது நம்ம பாட்டுங்க


    ஹுயி மேன் பரிநீதா - சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    முதற் பாடலான பியா போலே-வின் சோகப் பதிவு.


    படத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் பாடல்கள். பாடல்கள் கேட்க: RAAGA - Parineeta - Hindi Movie Songs

    திங்கள், மே 02, 2005

    மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை

    தினகரன் :: ராய்ப்பூர், ஏப். 28 - ராய்ப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது தேர்வில் காப்பி அடிப்பவர்களை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட - பறக்கும் படையினர் ஒரு வகுப்பிலிருந்த 35 பெண்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பரிசோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தார்களாம். ஒரு மணிநேரம் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கேடு கெட்ட செயல் சட்டீஸ்கர் மாநிலம் உமாரிய என்ற ஊரில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் ராஜேஷ் முனத் தெரிவித்தார்.

    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு