செவ்வாய், டிசம்பர் 30, 2003

அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சி
சார்பில் நிற்பதற்கு போட்டா போட்டி. ஒரு ராஜீவ்
காந்தியோ, அத்வானியோ இறந்தால் மட்டுமே இந்தியாவில்
நிகழக் கூடிய அடிதடிகள் இங்கு நடக்கின்றன. முண்ணனியில்
உள்ள ஹோவார்ட் டீன் எல்லா அரசியல்வாதிகள்
போலவே, அமெரிக்காவில் தோன்றும் சகல பிரசினைகளுக்கும்,
வியாதிகளுக்கும், தலைவலிகளுக்கும், கணினி

சண்டித்தனங்களுக்கும் புஷ்ஷின் அரசாங்கமே காரணம்
என்று அறிக்கைப் போர் நடத்துகிறார்.




அது ஒரு நாலெழுத்து கெட்ட வார்த்தை. #%@ என்று எழுதலாம்
·..க் என்று எழுதலாம். வாயில் பெயர்ச்சொல்லாக, வினைச்

சொல்லாக, ஆச்சரியக்குறியாக, கோபக்கணையாக,
நகைச்சுவைக்காக எதுக்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், அச்சில் ஏனோ கோலோச்ச வில்லை. 'வின்னர்'
ஆக ப்ரசாந்த் முயற்சிப்பது போல் சிரம் தசை நடக்கும் ஜான் கெரி இளவட்டப் பத்திரிகையில் நான் ஒண்ணும் கட்டுப்
பெட்டி இல்லையாக்கும் என்று திருவாய் மலர்ந்தருளுகிறார்.




காசு பணம் வாங்காமல் தீக்குளிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தன்னுடைய கோவிலில் இரக்க குணத்திற்காக கும்பிடும் அவலோகித்தா போதிசத்வா முன் வேண்டிக் கொண்டு, இறக்கமற்ற நாடான அமெரிக்காவிடம் மூன்று கோரிக்கைகள் வைக்கிறார். வியட்நாமியர் விடுதலையும், மனித உரிமையும், மத சுதந்திரமும் பெறவேண்டும்.




நம்ம காஷ்மீர் மாதிரிதான் இஸ்ரேலும். ஆனால், முப்து முகமத் சயித் குடும்பத்தார் கடத்தப் பட்டால், உயிருன் முக்கியத்துவம் உணரப்படும். இஸ்ரேலிய படை வீரருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. பாலஸ்தீனுக்கு அநீதி இழைக்கிறோம் என்று மனது குத்த, போர் படையில் இருந்து ஒழுங்காக விலகி, அஹிம்சை முறையில் எதிர்க்கிறார். வழக்கம் போல் சந்தில் யாராவது மனித குண்டு வீசி நூறு பேரைக் கொன்று விடுவார்களோ என்றெண்ணி, எதிர்ப்பவர்களைக் காலில் சுட ஆணையிட்டிருக்கிறார் இஸ்ரேலின் மேஜர். அதுவும் சிவப்புக் கோட்டைத் தாண்டாமல் இருக்க அடி மட்டுமே படுமாறு சுட்டவைதான்.

இஸ்ரேலின் ஊடகங்களும், மனித நல கழகங்களும், மனித உரிமை மன்றங்களும், வெகுண்டெழுந்து விட்டார்கள். எப்படி நம்மில் ஒருவனை சாய்க்கலாம். உயிர் போகா விட்டாலும், துவண்டது இஸ்ரேலியன் அல்லவா?

திங்கள், டிசம்பர் 29, 2003

முதற் பிரசுரம் - ஆர். பொன்னம்மாள் (3)

அம்மாவின் தோழிகளை விரல் விட்டு எண்ண ஆரம்பித்தால் ஒரு கை அதிகம். முக்கியமானவள் ருக்மிணி. பதினாறு வயது; 'எழுது' என்று (நம் மரத்தடி தோழர்களைப் போல்) தூண்டினாள். 'நானா? முடியுமா? அச்சில் வருமா?' என்ற சந்தேகங்களைத் துடைத்தவள் தோழி. எழுதினாள். தோழி சொல்படி ஸ்டாம்பு வைத்து! முக்கால்வாசி திரும்பிக் கூட வரவில்லை.

கன்னடியன் வாய்க்காலில் குளிக்கப் பிடிக்காமல் ஒரு மைல் தூரமிருக்கும் தாமிர பரணிக்கு நீராடச் செல்வார்கள். அதுவும் எப்படி? படித்துறையில் அல்ல! தாண்டித் தாண்டி நடுப் பாறைக்கு. அவள் விரும்பிய தனிமை அங்குதான் கிடைத்தது. தேகம் சிலிர்க்கும் மட்டும் நீரிலேயே அமிழ்ந்து கிடப்பாள். மணிமுத்தாறு நதியிலும் அப்படித்தான். நீச்சலடித்தால் கூட தண்ணீரின் அலப்பல் தன் கற்பனையை பாதிக்கும் என்று தோழியிடம் நீச்சலைக் கற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

கரையிலிருந்த செம்பருத்தி, தங்க அரளி, கொன்றை, நந்தியா வட்டை போன்ற மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி 'லஷ்மீபதி'க்குச் சாற்றுவதே அவளின் இறைத் தொண்டு.

இரண்டரை ஆண்டுகளோடு கிராம வாழ்க்கை முடிந்து மதுரை அருகில் நத்தம் என்கிற ஊருக்குக் குடித்தனம் பெயர்ந்தது.

அங்கேயும் அவளுடைய இலக்கியப் பசிக்கு உணவு கிடைத்தது. 'அருணாசலக் கவிராயரின்' ராம நாடகக் கீர்த்தனைகளை இரண்டே நாட்களில் பாடித் தொண்டை கட்டிக் கொண்டது. அங்கே, ஜகதலப் பிரதாபன், மதன காம ராஜனெல்லாம் கிடைக்கப் பெற்றாள்.

கரு.முத்து. தியாகராஜன் செட்டியார் நடித்தி வந்த 'தமிழ்நாடு' ஞாயிறு மலரில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தது. 'இரட்டைப் பரிசு' என்று ஒரு கதை எழுதி அனுப்பினாள். திடீரென்று ஒரு மாலை... 'போஸ்ட்' என்று அவள் மடியில் விழுந்தது 'தமிழ்நாடி'ன் ஞாயிறு மலர். அதில் 'இரட்டைப் பரிசு' பிரசுத்துக்க்குரிய கதையாக வெளிவந்திருந்தது. அவளுக்கு இறக்கை முளைத்து விட்டதா என்று தெரியவில்லை. பறந்தாள். அதன்பின், மாதமிருமுறை அவளது கதைகள் பிரசுரமாயின. 'அன்பு மனம்', வழிகாட்டி, இன்ப ரகசியம், விதி சிரித்தது, கண் திறந்தது, சந்தேகப் பேய் இவைகள் குறிப்பிடத் தக்கவை. வாசகர்களின் கடிதங்களையும் பெற்றவை.

முதல் கதைக்குக் கிடைத்த சன்மானம் ஐந்து ரூபாய். அப்புறம் ஒவ்வொரு கதைக்கும் பத்து ரூபாய். 'தமிழ்நாடு' நாளிதழின் ஆசிரியரான திரு. எம். எஸ். பி. சண்முகம் பாராட்டி எழுதிய கடிதங்கள் குடும்பத்தில் புயலை எழுப்பியது.

(சிறு குறிப்பு வளரும்)

மின் அரட்டைகளும் மின்னல் வேக கணிப்புகளும்

காசி குறிப்பிடும் ந(ண்)பர் யாராக இருக்குமோ என்று மண்டை குடைய வேண்டாம். நான்தேன்! வக்கணையாக பதில் சொல்ல ஆசைதான். அவரவர் perception-படி விஷயங்கள் அனுமாணிக்கப் படுகிறது.

பாராவின் 'மெல்லினம்' அசை போட கொடுக்கும் சில வரிகள்:

நிர்மலாவுக்குக் குழப்பமாக இருந்தது. ரொம்ப சாமர்த்தியமாக ஒரு புகாரை, புகார் தொனியில் அல்லாமல் நட்புணர்வுடன் செய்தி அறிக்கை போல் வாசித்து விட்டுப் போயிருக்கிறாள் ஒருத்தி. ஆனால், புகார் புகார் தான். எந்தத் தொனியில் சொல்லப்பட்டால் என்ன?

பாராவின் அலகில்லா விளையாட்டு' உபயம்:

* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.

* உணர்ச்சி மிகுந்தால் அழுகை வருகிறது. கோபம் வருகிறது. சிரிப்பு வருகிறது. அறிவு மிகுந்தால் அமைதி வருகிறது. புத்தி விழித்துக்கொண்டு நாலையும் யோசித்துத் தெளிவு பெறுகிறது.

* கூடியவரை நல்லது செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டியது தான். நமக்கே செய்துகொண்டாலும் நல்லது நல்லது தான்.

* ஆனால் லட்சியம் உள்ளவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடிவிடுகிறதா என்ன?

இறந்தவர் திரும்பி வந்தால்?

Navans weblog :: இறந்தவர் சங்கம்: லால் பிஹாரி இறந்திருந்த போது உயிர் பிழைக்க பல வித்தியாசமான போராட்டங்களைச் செய்திருக்கிறார். கைதாகி விட்டு நீதிபதி முன்னால் நான் உயிருடன் இல்லை என்று சொல்லியிருக்கிறார். தன் மனைவிக்கு தன்னுடைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். இறுதியில் தன்னுடைய நிலம் திரும்பக் கிடைத்த பொழுது அதைத் திருடிய தன்னுடைய உறவினரே வெட்கும் படியாக அவருக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். " - நவன்

'டபுள் ஜெபர்டி' என்னும் படத்தை நினைவு படுத்தும் செய்தி. டெலிகிராப், டைம் ஆசியா, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் என்று சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்.

Oh... My Lord! Please Forgive Me...

பாராவின் பத்து வரங்கள் கிண்டலுக்காகவே எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தக் காலத்தில் அசுரர்களுக்கு வரம் கொடுத்து விட்டு, நிவர்த்தி செய்வதற்கு ஏதாவது மாற்று கண்டுபிடிப்பார்கள். ஹிரண்ய கசிபுக்கு நரசிம்மர், இந்திரஜித்துக்கு இலக்குவன் என்று. இதோ என்னுடைய பிராயசித்த பிரார்த்தனைகள்.

1. அம்மா, அன்னை, புனிதத் தாய், ஜெ.ஜெ., அவர்கள் தமிழ்நாட்டின் நாற்பது இடங்களிலும், கேரளா, கர்நாடகா, மிசோராம் என்று நான்கு இடங்களிலும் லோக் சபா தேர்தலில் வெற்றியடையட்டும்.

2. மருத்துவ சீட்டுகள் மூலம் மாரிவானா, கஞ்சா, இன்ன்பிற லாகிரி வஸ்துக்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். (பின்னர், முறைகேடு, சீர்கேடு என்று காரணம் சொல்லி (பின்வரும்) திமுக அரசு மருந்துக் கடைகளை சுவிகரித்துக் கொள்ளும்).

3. அப்துல் கலாம் வெண்பாக்களிலும், சோனியா இத்தாலிய ஹைக்கூக்களிலும் வாழ்த்திக் கொள்ள ஆரம்பிக்கட்டும்.

4. வெகுஜன பிரசுரங்களை சிறு பத்திரிகையாளர்கள் எடுத்து நடத்தட்டும். (தமிழ் படிக்கும் ஓரிரு ஜீவன்களும் விட்டு விட்டு, இணையத்துக்கும், இன்னாததற்கும் பறந்து விடுவர்).

5. கட்சித் தலைவர்களை, உட்கட்சி பினாமிகளே காலை வாராதிருக்க வேண்டும்.

6. (பார்க்க 2-ஆம் கோரிக்கை). நூறு மில்லிகிராம் மேல் கஞ்சா அடிக்காமல் கூட்டங்கள் தொடங்கட்டும்.

7. ரஜினி, கமல், விஜயகாந்த், தனுஷ், நந்தா, கரண் எல்லோரும் காவிரி வருவதற்காகவும், சரத் விளையாடுவதற்காகவும் போராடட்டும்.

8. கனிமொழியை தமிழக முதல்வராக்க முயற்சிக்க வேண்டும்.

9. சங்கராச்சாரியார் சொல்லும் வேட்பாளர்களுக்கு 'சாப்பா' குத்தாதிருக்க புத்தி வரட்டும்.

10. சிம்ரன் 'ஸ்டாண்டப் காமெடி'யாக புதிய படங்களையும், புத்தகங்களையும் அறிமுகம் கொடுத்து பொது மக்களுக்கு எடுத்து செல்லட்டும்.

ஞாயிறு, டிசம்பர் 28, 2003

துள்ளித் திரிந்த காலம்

என் அம்மாவின் பிறந்த நாள் மே 21, 1937. அவரின் பெற்றோர்களான லக்ஷ்மி, இராமசுப்பிரமணியம் பெயரிலும் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். 1944 ஜனவரியில் அம்மாவுக்குத் தங்கை பிறந்தாள். அதே ஆண்டு கந்த சஷ்டியன்று தந்தையை இழந்தார்.

1951-இல் சென்னையை விட்டு கல்லிடைகுறிச்சிக்கு அருகில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு குடி பெயர்ந்தனர். தாத்தாவின் பிரிவை மறக்க தாய் துணையாகத் தேடிக் கொண்டது படிக்கும் பழக்கத்தை. ஆனந்த விகடன் துணுக்குகளைப் படித்த சிறுமி மெதுவாக சிறுகதைகளைப் படித்தாள். தொடர்ந்து 'லஷ்மி'யின் நாவல்களான பெண்மனம், காஞ்சனையின் கனவு, லட்சியவாதி, 'தேவனின்' துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், 'எஸ்.ஏ.பி'யின் காதலெனும் தீவினிலே, இன்றே,இங்கே,இப்பொழுதே, நீ, சூறாவளி போன்ற கதைகளில் லயித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களோடு வாழ்ந்ததாகவே சொல்லி யிருக்கிறார்கள்.

கல்கியின் 'பொன்னியின் செல்வனே' சரித்திரமும் ருசியாயிருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுத்தது. பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி, எல்லார்வி கதைகள் அம்மாவின் உணர்வுகளை அலைக்கழித்தவை. இன்னார் கதைகள் என்று பொறுக்காமல், போரடிக்கும் (நான் எழுதுவது போன்ற :) கதைகளிலும் என்ன இருக்கிறதென்று பார்க்க பொறுமையுடன் படித்தாள்.

பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தோடு சென்னை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சிங்கம்பட்டியில் ஒரு ஓவர்ஸியர் குடும்பத்தில் கல்கி இருப்பதை அறிந்து மீண்டும் வந்தியத்தேவனும், குந்தவையும், நந்தினியும், அருள்மொழி வர்மனும் அவளோடு உறவாடினர். மீண்டும் ஆனந்த விகடன் அவர்களின் நண்பனானான்.

ஒரு சிவராத்திரி இரவில் பெரிய எழுத்து விக்ரமாதித்தனை முடித்தாள். அவர்கள் பெரியப்பா வீட்டிலிருந்த கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் அவளை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அவளைச் சுற்றி எப்போதும் சிறுவர், சிறுமியர் அவளது கற்பனைக் கதைகளைக் கேட்க; பிள்ளைகலைச் சாக்கிட்டு பெற்றோரும் கூடினர்.

அவளுக்கு மிகவும் பிடித்த பத்திரிகை குமுதம். போரடித்த போது படிக்க ஆரம்பித்த சாண்டில்யனின் சரித்திரக் கதைகளால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள். குறிப்பாக சீனாவின் அங்குபங்சர் சிகிச்சையில் காதலே பிறந்தது.

(சிறு குறிப்பு வளரும்)

போன வருடத்தில் கலக்கியவர்களும், கவுந்தவர்களும்

The New York Times: Arts: கலையுலகில் கலங்கடித்தவர்களை நியு யார்க் டைம்ஸ் பட்டியலிடுகிறது. ஓவிய கண்காட்சிகள், நடனம், தியேட்டர் என்று நிறுத்திக் கொள்ளாமல் திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாப் இசை என்று அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த பத்தை பொறுக்கிக் கொடுக்கிறார்கள். நேரம் கிடைத்தால் செவிக்கு உணவு கொடுக்கும் தொகுப்புகளையும் கேட்டு மகிழலாம்.

சனி, டிசம்பர் 27, 2003

நான் செத்துப் பிழைச்சவண்டா

siliconindia: பிதாமகனுக்கு டிமிக்கி: நான் அடித்துப் போட்டது போல் தூங்கும் ஜாதி. ஆறாவதோ, ஏழாவதோ படிக்கும் போது, 'கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூங்கு' என்று சொல்லி சென்றார்கள். வீட்டுக்குள் மீண்டும் நுழைய கொல்லைப் புறம் வழியாக, சொந்த வீட்டிலேயே ஏறி குதித்து, உள் நுழைய வேண்டியிருந்தது. அவர்கள் வந்து ரொம்ப நேரம் கழித்து எழுந்த எனக்கு, 'திருடன் வந்தது கூடத் தெரியாம தூங்குகிறாயே' என்று திட்டு வாங்கினது வேறு விஷயம்.

இந்த ஹிமாசல பிரதேச ஆளும் நம்ம கதை மாதிரிதான். எழுபத்தொரு வயசு. இறந்து விட்டார் என்று ஊர்ஜிதப் படுத்தி, பாடையிலும் ஏற்றியாகி விட்டது. மயானத்துகு செல்வதற்கு முன் எகிறி குதிக்கிறார். நம்ம ஊரு கார்த்திக் போல் சித்ரகுப்தனை பார்த்தேன், சொர்க்கத்தின் வாயிலில் நின்றேன் என்று எல்லாம் பூச்சுற்றாமல், 'க்யோன் இத்னி லோஃக்?' என்று பொக்கை வாயில் ஆச்சரியப் படுகிறார்.

கட்டையில் வைத்து கட்டும்போது கூட எப்படி எழுந்திருக்க வில்லை என்பதும், 'மென் இன் ப்ளாக்'கில் வரும் அதிசய உபகரணத்தாலோ, எமதர்மராஜனின் மந்திரத்தாலோ, எப்படி ஒன்றுமே நினைவில் இல்லை என்பது நம்முடைய ஆச்சரியங்கள்.

ரொம்பக் குழம்பாமல் பாராவின் அலகில்லா விளையாட்டு படித்தாலும் இந்த இறப்பிற்கு பின் தத்துவங்களை விளக்கிக் கொள்ளலாம்.

இலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள

TAMIL ILAKKANAM - DMK "ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். "

இந்தியாவின் வால் பையன்கள்

குறைந்த பந்துகளில் நிறைய ஓட்டங்கள் எடுப்பதில் வல்லவர்
என்றார்கள்; ஆமாம்... ஒரு பந்திலேயே வீழ்ந்து விட்டால்,
கணக்கெடுப்பின் போது சௌகரியமாகத்தான் இருக்கும்.
மீண்டும் ஒரு முதல்பந்து முட்டை.

இன்னொரு முட்டை... சாரி, மட்டை வீரர் படேல் வகுத்த
வழியை பின்பற்றியுள்ளார். பார்த்திவ் குறித்து கூட யாரோ
அடுத்த வால் (சுவர்), வளரும் ட்ராவிட் என அடைமொழிகள்
கொடுத்து அறிமுகபடுத்தினார்கள்.

தான் ஒரு சிறந்த ஓட்டக்காரர் என்று பெயரெடுக்க அகர்கர்
விரும்புகிறார். ஓட்டம் எடுக்கும் வீரர் என்னும் பெயர்
நிலைபெறாமலிருக்க, நாளை ஆடும் அடுத்த இன்னிங்சில்
பிராயசித்தம் செய்ய வேண்டும்.

(ரீடி·பின் படி படேல் ஒரு நல்ல பந்துக்கும்; பிபி-பாலாஜியின் படி, தடவி மட்டுமே தாக்குப் பிடிக்கலாமா என்று எண்ணுவதற்குள்
வீழ்ந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்).

வெள்ளி, டிசம்பர் 26, 2003

மதுரை திட்டம் போல்...

Chennainetwork.com: திருக்குறள், தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, ஔவையார், பாரதியார், பாரதிதாசன் நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு

புறநானூறு, மனோன்மணீயம், கலிங்கத்துப்பரணி, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, பாரதியின் தேசிய கீதங்கள், உள்ளிட்ட பிற நூல்கள்

கம்பராமாயணம்: பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம்.

போடுங்கம்மா வோட்டு!

வாக்களிக்க: http://tamil.sify.com/

2003ன் நெ. 1 படம்
அன்பே சிவம் 219
பிதாமகன் 77
காக்க காக்க 59
திருமலை 39

2003ன் மனங்கவர்ந்த ஹீரோ
கமல் 150
விக்ரம் 103
விஜய் 58
தனுஷ் 24

2003ன் சூப்பர் ஹீரோயின்

ஜோதிகா 119
சிநேகா 100
சிம்ரன் 52
த்ரிஷா 42

2003ன் இயக்குநர்
பாலா (பிதாமகன்) 54
கெüதம் (காக்க காக்க) 53
ஹரி (சாமி) 13
தரணி (தூள்) 2
ஷங்கர் (பாய்ஸ்) 2

புதன், டிசம்பர் 24, 2003

லீனக்சுக்கு ஆபத்து வருமா?

Year in review: Linux under attack | CNET News.com: சிநெட்டின் 2003-க்கான தொகுப்பு திறந்த ஆணைமூலங்களின் அலசலோடு தொடங்கியுள்ளது. ஆரகிள், திருட்டு இசை, கம்பியில்லா இணைப்பு, இயக்குதளங்கள் என வரும் நாட்களில் தொழில் நுட்பங்களின் அனைத்துத் துறையிலும் போன வருடம் என்ன நடந்தது என்று பருந்துப் பார்வையில் தெரிந்து கொள்ளலாம்.

திருவெம்பாவை & திருப்பாவை

திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள்

பொருள் விளக்கும் சுட்டிகள்:
திருவெம்பாவை - மொழிமாற்றம் - G. Vanmikanathan
திருவெம்பாவை - 1 2 3 4 5 6 7 8 9



பின்வரும் திருவெம்பாவை & திருப்பாவைகளுக்கு நன்றி: Dr.N.Ramani

திருப்பாவை - திருவெம்பாவை - திருப்பள்ளியெழுச்சி முன்னுரை


1 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
1 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

2 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
2 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

3 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
3 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்
திருவெம்பாவை - 3 - திருத்தம்

4 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
4 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

5 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
5 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

6 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
6 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

7 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
7 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்
7 - இராம.கி.யின் மறுமொழி

8 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
8 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

9 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
9 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

10 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
10 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

11 - திருவெம்பாவை & திருப்பாவை ஆங்கிலம்
11 - திருவெம்பாவை & திருப்பாவை தமிழ்

திருவெம்பாவை - 12 திருப்பாவை - 12

திருவெம்பாவை - 13 திருப்பாவை - 13

திருவெம்பாவை - 14 திருப்பாவை - 14

திருவெம்பாவை - 15 திருப்பாவை - 15

திருவெம்பாவை - 16 திருப்பாவை - 16

திருப்பாவை - 18 திருப்பாவை - 19 திருப்பாவை - 20
திருப்பாவை - 21 திருப்பாவை - 22 திருப்பாவை - 23
திருப்பாவை - 24 திருப்பாவை - 25 திருப்பாவை - 26
திருப்பாவை - 27 திருப்பாவை - 28 திருப்பாவை - 29
திருப்பாவை - 30

நன்றி:
Tamil.Net - தமிழ் இணையம்
மெய்கண்டார்

கிண்டல் அல்ல! நிஜம் - திரு. எல்லே சுவாமிநாதன்

Yahoo! Groups : tamil-ulagam Messages : Message 26699 வேலைக்கான நேர்முகத் தேர்வில் அவ்ர்களிடம் " கீ போர்டுல டாட்டா என்ட்ரி தெரியுமா? பைல் ஸேவ் பண்ணத்தெரியுமா? மெர்ஜிங் தெரியுமா? ரிப்போர்ட் பிராப்பரா பிரின்ட் போட தெரியுமா?" என்பார்கள்.

[ நீவிர் செய்திகளை உள்ளிட விசைப்பலகையில் தட்டச்சிட அறிவீரோ? கோப்பில் காப்பதெவ்வாறென்று அறிவீரா? கோப்பிணைப்பறிவீரோ? தேவையான அறிக்கைகளை அச்சுப் பொறியில் நச்சென அச்சிடும் திறன் உண்டோ உம்மிடம்? அங்ஙனமாயின் இவ்விடத்து உமக்கு பணி தருவோம்" என்று பேசுவதில்லை].

"கீ போர்டு,மெளசு, எப்படிப் போட்டாலும் டயலாக் பாக்ஸ் வேலை செய்யலே"னு சொல்றது எப்படி, "விசைப்பலகையோ எலியோயறியேன் இசையாமல்போனதெதுவென அசையாதே உள்ளிடும்பெட்டின்னு சொன்னா "நீ வேலை செஞ்சது போறும்"ன்னுடுவான்.

வலைப்பதியா விட்டால் சோம்பேறி அல்ல

கிப்பன் (Gibbon) தன்னுடைய "ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி" என்கிற நூலை எழுத 20 ஆண்டுகள் எடுத்தக்கொண்டாராம்.

பிளாட்டோ தன்னுடைய 'குடியரசு' (Republic) நூலின் முதல் வரியை ஒன்பது விதமாக எழுதி மனநிறைவு அடைந்த பிறகே வடிவமைத்தாராம்.

எட்மன்ட் பர்க் (Edmund Burke) நாடாளுமன்றத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren hastings) குறித்த தீர்மானத்தில் பேச எழுதிய முடிவுரையை 16 முறை எழுதி எழுதி செம்மைப் படுத்தினாராம்.

பட்லர் (Butler) தன்னுடைய பகுத்தாய்வை (Analogy) 20 தடவைகள் எழுதி
னாராம்.

விர்ஜில் தன்னுடைய 'எனீட்' (Aeneid) நூலை எழுத 12 ஆண்டுகள் செலவழி
த்தாராம். இருந்தாலும் அதில் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஆகவே மரணப் படுக்கையிலிருக்கும்போது அதைக் கொளுத்த முயற்சித்தாராம்.

எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) தன்னுடைய 'வயோதிகனும் கடலும்' (old man and the sea) நூலை 202 தடவை திரும்பத் திரும்ப எழுதினாராம்.

விட்மன் (Whitman) தன்னுடைய 'புல்லின் இதழ்களை' திரும்பத் திரும்ப செம்மைப் படுத்தி இறுதியாக இதுவே முடிவான வடிவம் என்று பிரகடனப்படுத்தினாராம்.

டால்ஸ்டாய் தன்னுடைய 'போரும் சமாதானமும்' (War & Peace) நூலை திரும்பத் திரும்ப எழுதினாராம்.

காப்கா தன்னுடைய 'விசாரணை' உட்பட பல நூல்களை பதிப்பிக்க வேண்டாம் என்று எழுதிவிட்டுத்தான் இறந்து போனாராம்.

-பழனி
சிங்கை
தமிழ்-உலகம் மின்குழுமம்

From: http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/20512

எப்பொழுதோ படித்தாலும் இன்றும் பிடிப்பது

'அதுக்கப்புறம் நல்ல வேலை, ஜாஸ்தி சம்பளம் தராங்க-ன்னு சொல்லி இங்க வந்தாச்சு. நல்ல ஊருதான், ஆனா என்னவோ எனக்குப் பிடிக்கலை. காசுக்காக சொந்தஊரை விட்டுட்டு வந்துட்டோமேன்னு எனக்கு ஒரு தவிப்பு',

ரெண்டாவது மொழியாவாவது தமிழைக் கத்துக்கட்டுமே-ன்னேன், அதுக்கும் ஒத்துக்கலை, அதைவெச்சு இவங்க தமிழங்க-ன்னு கண்டுபிடிச்சுடுவாங்களாம், என்ன முட்டாள்தனம்சார் இது?
நாம யாருங்கறதை மறைச்சு வாழறது ஒரு வாழ்க்கையா? சாகறவரைக்கும் அஞ்ஞாதவாசமா?', உணர்ச்சிபொங்கப் பேசினார்.

ஆனா பெண்டாட்டி, பிள்ளையோட பேசாம தாய்பாஷையை வேற யார்கிட்ட பேசிக்கேட்கமுடியும் சொல்லுங்க? முன்னெல்லாம் ஒவ்வொரு புத்தகத்தை வாங்கிச் சேர்க்கும்போதும் எனக்கப்புறம் என் பிள்ளைங்க இதைப் படிக்கும், நான் சிரமப்பட்டமாதிரி ஞானத்தைத் தேடி அதுங்க அலைய
வேண்டியதில்லை-ன்னு தோணும். அந்த நினைப்புக்கெல்லாம் இப்போ அர்த்தமே இல்லாம போச்சு.'

- லாவண்யா
27 11 2001

(கொடை சிறுகதை)

செவ்வாய், டிசம்பர் 23, 2003

எங்கள் bachelor வீட்டு சமையலறையும் என் காதலியும் - மீனாக்ஸ்

Yahoo! Groups : uyirezuththu Messages : Message 3862:

எங்கள் bachelor வீட்டு சமையலறையும் என் காதலியும்
============================================


எங்கள் bachelor வீட்டு சமையலறை
ஒரு ஆண்கள் ரா?¡ங்கம்..
எப்போதும் புயல் புகுந்து புறப்பட்டது போல்
அங்கங்கே சிந்திய சர்க்கரையும்
உலர்ந்த காய்கறிகளுமாய்
அலங்கோலமே அதன் அலங்காரம்..

ஒரு சில நாட்களைத் தவிர..!!

அந்த நாட்களிலெல்லாம்
என்னைக் காதலிக்கும் தேவதை
அங்கு பிரசன்னமாகியிருப்பாள்..

"மதிய உணவு சமைத்துத் தருகிறேன்"
என்று சொல்லி எங்கள் ரா?¡ங்கத்தில்
அல்லி ரா?யம் நடத்த வருவாள்..

அவள் சமைக்கையில் (அவள்) அழகை ரசிக்க நானும்
அவள் சமைக்கும் அழகை ரசிக்க என் அறைத்துணைவர்களும்
அங்கு கூடுவோம்..

"இவனையெல்லாம்
எப்படிக் காதலிச்சீங்க சி?டர்?" என்பதாக
அவர்களின் குறுக்கு விசாரணை ஆரம்பிக்கும்..
புன்னகையை பதிலாக்கி
என்னைக் கண்களால் கேலி செய்வாள்..

"சும்மா இருங்கடா.." என்ற என் சிணுங்கலைப்
பொருட்படுத்தாமல்
"இவனைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்காம
ஏமாந்துட்டீங்க சி?டர்.." என்பார்கள் என் எதிரிகள்..

அதற்கும் சிரித்து விட்டு,
என் தவிப்பைப் பார்த்துப் பரிதாபப்பட்டு,
"பரவாயில்லை..
மனசுக்குப் பிடிச்சுத் தான் ஏமாந்தேன்.." என்பாள்..
மறைக்க முயன்று தோற்று,
லேசாய் வெட்கப்படுவாள்..

போகிற போக்கில்
கரண்டியால் என் தலையில்
செல்லமாய் ஒரு தட்டு..

"சி?டர்.. நீங்க வெங்காயமெல்லாம்
நறுக்க வேண்டாம்.." என்பான் ஒரு நண்பன்..

"ஏன்??"

"நாங்க இருக்கும் போது
உங்க கண்ணில இருந்து
ஆனந்தக் கண்ணீர்ங்கிற பேரில கூட
கண்ணீர் எதுவும் வரக் கூடாது..!!"
என்று சொல்லி செண்ட்டியால் அடிப்பான்..

கேட்டதும் அவள் கண்களில்
ஆனந்தக் கண்ணீர் வரும்..!!
துடைத்தால் தெரிந்து போகுமென
சிரித்து முகம் திருப்பிக் கொள்வாள்..

"டேய்.. சும்மா நிற்காதே..
சி?டருக்கு ஏதாவது உதவி பண்ணு.."
என்று என் நண்பர்கள் வம்புக்கிழுப்பார்கள்..

அவள் மறுத்து,
"கல்யாணத்துக்கு அப்புறம்
அவர் தானே தினமும் சமைக்கப் போறார்..
இப்பவாவது சும்மா இருக்கட்டும்.."
என்று சொல்லி
பொய்க்கோபத்துடன் முறைக்கும் என்னை
ரசித்துச் சிரிப்பாள்..

சமையல் முடிந்ததும்
பரபரப்புடன் பரிமாறி
எங்கள் முகம் பார்த்து நிற்பாள்..

"சி?டர்..!! ரொம்ப நல்ல இருக்கு..
இவன் ரொம்ப கொடுத்து வச்சவன்.."
என்று சொல்வதைக் கேட்டு,
"ஏன்? என் அண்ணன்மார்
நீங்களெல்லாம் வந்து கேட்டா
நான் சமைச்சுப் போட மாட்டேனா என்ன.??
நீங்களும் கொடுத்து வச்சவங்க தான்.."
என்று பூரிப்புடன் சொல்வாள்..

எங்களைத் தனிமையில் விட்டு
நண்பர்களெல்லாம் மாடிக்குச் சென்றதும்
நான் பரிமாற அவள் சாப்பிடுவாள்..

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு
கடிகாரம் பார்த்து அலறி,
"நான் கிளம்பணும்.. நாளைக்கு பார்க்கலாம்..
நேரமாச்சு.." என்று பதறி
அண்ணன்மார்களிடமும் சொல்லிக் கொண்டு
கிளம்பிப் போவாள்..

அவள் வந்து போன பிறகு
தென்றல் நுழைந்து புறப்பட்டது போல்
அழகும் ஒழுங்கும் குடியேறும்..

எங்கள் வீட்டு சமையலறையில் மட்டுமல்ல,
எங்கள் உள்ளங்களிலும்..!!

-- Meenaks

திங்கள், டிசம்பர் 22, 2003

பெண்களின் திரை சித்தரிப்பு முன்னேறியிருக்கிறதா?

rediff.com: The Year That Was -- A slide show:
Bollywood Year in Review
மாறவில்லை என்றே தோன்றுகிறது. 'சல்தே... சல்தே' போன்ற அச்சு வார்ப்பு, சாக்லேட் ப்ரீதியின் இளம்பெண் நடிப்பு, பண மிதப்பில் தேவதாஸ் என்று நான் பார்த்த பல படங்களில் ஸ்டீரியோடைப்களே கிடைத்தது.

வேலைகளே வெளியேறு

New Economy: Offshore Jobs in Technology: Opportunity or a Threat?: இந்திய நண்பர் ஒருவரின் கூற்றுப்படி, தொலைபேசியில் வழங்கும் தொழிற்நுட்ப சேவைக்கு ஒரு நிமிடத்துக்கு ஆறு டாலர் வசூலிக்கிறார்கள். அநியாயமாகப் பட்டது! சேவையழைப்பு (call-center?) ஒரு மணி நேரத்தில் 360 டாலர் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்காவிலேயே சல்லிசாக மாட்டும் என்று தோன்றியது. அதனால்தான் லேஹ்மான், டெல் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டன போலும்.

கட்டுரையில் இருந்து:
--> இந்தியாவிற்கு செல்வதனால் 20 முதல் 40 சதவிகிதம் வரை மிச்சம் பிடிக்க முடியும்.

--> அமெரிக்காவில் 80,000 டாலர்களுக்கு வேலைக்கு அமர்த்துபவரை, இந்தியாவில் 20,000த்துக்கே வைத்துக் கொள்ளலாம். (ஒரு மாதத்துக்கு 75,000 ரூபாய் :)

--> 2015-க்குள் 3.3 மில்லியன் வேலைகள் வளரும் நாடுகளுக்கு சென்று விடுகிறது.

--> இதில் 462,000 கணினி வல்லுநர் வேலையும் அடக்கம்.

--> அமெரிக்காவில் தற்போது 130 மில்லியன் மக்கள் வேலையில் உள்ளார்கள். ஒரு வருடத்துக்கு கிட்டதட்ட 3.5 மில்லியன் வேலைகளை புதிதாக அமெரிக்கா உருவாக்குகிறது. எனவே, பத்து வருடங்களில் 35 மில்லியன் புதிய வாய்ப்புகள் வரும்போது, 3.3 மில்லியன் வெளியேறுவது எல்லாம், கடல் நீரில் சிறு துளியே.

--> ஒரு டாலருக்கான வேலை வெளியூருக்கு சென்றால், அமெரிக்காவுக்கு 12 முதல் 14 விழுக்காடு அதிக லாபம் ஈட்டித் தருகிறது.

--> இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் உற்பத்தித் துறையில் வேலை இழந்தவர்கள் 25 சதவிகித குறைந்த சம்பளத்துக்கு புதிய உத்யோகம் கிடைத்தது.

--> சொன்னதை செய்பவரின் வேலை பறி போய் விடும். கணினி அறிவுடன் கூட வங்கி, தொழில் துறையின் நுணுக்கங்களும் அறிந்து பிரசினைகளைத் தீர்த்து புதிய கோணங்களில் ஆராய்பவர் மட்டுமே தாக்குப் பிடிப்பார்கள்.

Points to ponder against Capital Punishment

* ஆயுள் தண்டனை சட்டம் இருக்கின்ற அமெரிக்க மாகாணங்கள் - 38

* இந்த 38 இடங்களில் உள்ள மாவட்ட தலைமை வழக்கறிஞர்களின் பகிர்வு:
வெள்ளையர் - 98%
ஆப்பிரிக்க அமெரிக்கர் - 1%

* ·பிலடெல்·பியாவில் நடந்த ஒரு ஆய்வின் படி, ஒரே விதமான குற்றங்களைப்
புரிந்தவர்களுள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 38 விழுக்காடு அதிகமாக மரண
தண்டனை விதிக்கப் பெறுகிறார்கள்.

* இது வட கரோலினா ஆய்வின் முடிவு. வெள்ளையரைக் கொன்றிருந்தால், விஷ
ஊசி பெறுவதற்கான வாய்ப்பு முன்றரை மடங்கு அதிகரிக்கிறது.

* 73 முதல் 93 வரை நூறு பேர் குற்றமற்றவர் என விடுவிக்கப் பட்டுள்ளார்கள்.

* அவர்கள் விடுதலை ஆவதற்கு முன் சிறையில் இருந்த சராசரி ஆண்டுகள்: 9

* மின் அமர்வின் பிடியில் இருந்து கடைசி நிமிடங்களில் நிரபராதி என
நிரூபிக்கப்பட்டவர்கள்:
2001 - 8
2002 - 9
2003 - 10 (இதுவரை)

* கருத்து கணிப்புகெல்லாம் மதிப்பு உண்டா? முன்னாள், இன்னாள் குற்றவியல்
குமுகாயங்களின் தலைவர்களிடையே எடுத்த கருத்தாய்வின்படி: மரண தண்டனை
சட்டம் கொலை செய்பவனை தடுக்கிறது என்பதை நூற்றுக்கு 84 பேர் நம்பவில்லை.

சில பொருளாதார நிஜங்கள்:

* அமெரிக்கர்கள் செலவாளிகள் என்பதை மீண்டும் வட கரோலினா கருத்தய்வு
அறிவுறுத்துகிறது. ஆயுள் தண்டனையை விட தூக்கு கயிறுக்கு 2.16 மில்லியன்
அதிக டாலர் தேவைப்ப்படுகிறது.

ஏன் இவ்வளவு ஜாஸ்தி செலவு: வக்கீலய்யாவுக்குக் கொடுக்கும் ·பீஸ். (இந்த கணக்குப்
போடபட்ட வருடம் பத்தாண்டுகளுக்கு முன்பு; இப்பொழுது இன்னும் அதிகம் இருக்கும்.)

* இந்தியானா ஆராய்ச்சி: இவ்வளவு அதிகம் செலவு செய்து பல சமயங்களில் ஆயுள்
தண்டனையே கிடைப்பதால், 38 சதவிகிதம் மேலதிக பண விரயம்.

* ·ப்ளோரிடா கணக்கு வழக்கு: (1976 முதல்)
நிறைவேற்றபட்ட மரண தண்டனைகள்: 44
ஒவ்வொரு தண்டனைக்கும் ஆன செலவு: $ 24 மில்லியன்

(பரோல் இல்லாத) ஆயுள் தண்டனை வழக்கு போட்டிருந்தால்,
சேமித்திருக்கக் கூடிய பணம்: ஒரு வருடத்திற்கு $51 மில்லியன்

* டெக்சாஸ் பட்ஜெட்:

ஒரு மரண தண்டனை நிறைவேற்ற: $ 2.3 மில்லியன்
நாற்பது வருடம் ஒருவரை தனி செல்லில், ஆயுள் தண்டனையில்
அடைக்க: மேற்கண்ட மில்லியன்களின் மூன்றில் ஒரு பங்கு.

கடைசியாக காவல்துறையிடம் ஒரு கருத்தாய்வு:

துப்பாக்கி கலாசாரம், அதிக காவல் துறை, இரட்டை ஆயுள் தண்டனை,
சட்ட எளிமையாக்கல், பொருளாதார முன்னேற்றம், போதைப் பொருள் நீக்கம்
ஆகியவற்றையே போலீஸ், மரண தண்டனையை விட அதிகம் விரும்புகிறது.

நன்றி: குகிள், http://www.fdp.dk/ , http://www.deathpenaltyinfo.org/

ஞாயிறு, டிசம்பர் 21, 2003

தமிழ்நாட்டில் பிறந்ததுதான் தவறு

சன் தொலைக்காட்சியின் சனி, ஞாயிறு மதியப் படங்கள்
எவ்வளவோ தேவலாம்; இரவுப் படங்களை விட.

சனி - புதிய வானம்; காதலுக்கு மரியாதை
ஞாயிறு - அரிச்சந்திரா; பொட்டு அம்மன்

காதலுக்கு மரியாதையை அமெரிக்காவின் வெள்ளித் திரையில்
தூங்கிக் கொண்டே லயித்தபோது, 'டேய்... டேய்ய்' குரல்கள்
எழுப்பின. வழக்கம் போல் ஒரு ஏமாந்த அமெரிக்க மாப்பிள்ளையை
ஷாலினிக்கு வரன் பார்த்திருப்பார்கள். அப்பொழுது எல்லாம்,
அமெரிக்காவில் வேலை என்றால் மதிப்பிருந்தது.

'புதிய வானத்தில்' உதவி இயக்குனராக இருந்த 'செய்யாறு இரவி',
'அரிச்சந்திரா'வின் நெறியாளகையைத் தனியாக கலக்கி இருக்கிறார்.
வெற்றிப் படம் கொடுத்த பிறகும் காணவில்லையே. மீண்டும்,
துணை இயக்குநராகி விட்டாரோ. ஆனந்த விகடனில் இவருடைய
பெயரை படித்த ஞாபகம். 'ஜெமினி'/'ஜே...ஜே' சரணும் கூட.

'ஸ்டார் ஷோ' என்று ஸ்னேஹா பின்னிரவில் திடீர் தரிசனம்
தந்தார். வழக்கமான கேள்விகள்; புளித்துப் போன பதில்கள்.
'பெப்ஸி' உமாவின் 'பிடித்த ஆண் யார்' என்னும் கேள்விக்கு
பதில் சொல்லவில்லை. ஸ்னேஹாவை விட உமா நிறையப்
பேசினார். சினிமா மக்களை நேர்முகம் காண்பதை ரசிக்கும்படி
செய்து வந்தவர் டிடி மெட்ரோவின் மாலா மணியன். அளவாக
சிரித்து, அறிவோடு கேள்வி கேட்டு, யாரையும் புண்படுத்தாமல்
தொகுத்தவர்.

'பெப்ஸி' உமாவுக்கு நிறைய பிஜேபித்தனம் வந்துவிட்டது.
'மனமத ராசா' விரும்பி கேட்கும் குழந்தையை கண்டிப்பது,
'வீட்டை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டவர்கள் மணம்
புண்படும்படி பேசுவது, என 'பெப்ஸி.. உங்கள் சாய்ஸில்',
தொலைபேசியிலேயே இலவச அறிவுரைகள் வழங்குகிறார்.
அவர் தொகுக்கும் நிகழ்ச்சி என்ன 'வணக்கம் தமிழகமா' அல்லது
'அரட்டை அரங்கமா'. 'கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்
போலாமா'வும், 'மே மாசம் 98-இல் மேஜர் ஆனேனே' போன்ற
பாடலகளை அனைவரின் பேராதரவைப் பெற்ற பாடலாக சொல்லும்
பண்பாடுகளற்ற நிகழ்ச்சிதானே.

தலைப்புக்கு வருவோம். இணையத்தில் ஏற்கனவே படித்த, கமலுக்குக்
கடிவாளம் என்று பேசினார் பாலச்சந்தர். தமிழகத்தில் பிறந்ததனாலேயே
ஆங்கில விருதுகள் தட்டிப் போகிறதாம். பல புதுமுகங்களை பார்ப்பதும்,
முடிந்தவரை சுத்த தமிழிலேயும், ஒரு நல்ல படைப்பு என்ற கர்வமும்,
மதுரையின் கிராமியக் கலைகளை மெட்ராஸ் தமிழனுக்குக் கொடுப்பதும்,
மரண தண்டனையை சிந்திக்க வைப்பதும் என்னை எட்டு டாலர் கொடுக்க
வைக்கும்.

ஆனால், கவிதாலாயவின் 'திருமலை' அளவாவது வெற்றிபெற, இவ்வளவு
எதிர்பார்க்கவைத்தல் கூடவே கூடாது. ஆளவந்தானில் தாணுவுக்குப்
பாடம் புகட்டினார். அன்பே சிவத்தில் பட்டுக் கொண்டார். இன்னும்
திருந்தவில்லை.

ஓரினக் கல்யாணங்கள்

Strong Support Is Found for Ban on Gay Marriage: அவர்களின் விருப்பமும் நியாயம்தானே? எங்கள் ஊரில் கொடுத்த சரித்திரப் புகழ்மிக்க தீர்ப்பை குறித்தும், அமெரிக்க ஜனாதிபதியாகத் துடிக்கும் டீனின் கருத்துக்களை விலாவாரியாக பதிக்கவும் விருப்பம். அதுவரை சில சுட்டிகள்.

Gay Marriage (c) NY Times


சனி, டிசம்பர் 20, 2003

விளம்பரங்களுக்கு ஒரு சென்சார்

BBC NEWS | UK | Magazine | Adland faces up to self-control: சாப்பிடும்போது விஜய் ஆதிராஜ் ஹார்பிக்குடன் நுழைவார். ஜாலியான ஹோலி பண்டிகை ஆட்டங்களில் ஆடாதவரை பார்த்து நமுட்டாக சிரிப்பார்கள். சிங்கம் போல ஸ்ட்ரெங்த் எனக்கு டூப் விடுவார்கள். பரங்கியருகு சென்சார் தேவை. நமக்கும் ஒருவிதமான கட்டுப்பாட்டு கழகம் வேண்டும்?!





Benetton advert
Controversial ads risk offending, but can grab the headlines


இணையக் குழுக்களில் வாதம் நடத்துவது எப்படி?

The Opinion Exchange - Be Opinionated! - Online Opinion Polls / Opinion Articles: அடிதடி சண்டை பார்த்திருப்பீர்கள்; அரட்டை அரங்கத்தில் பேச விரும்பியிருப்பீர்; இல்லை. பேசுபவரை சென்னையில் தண்ணீருக்காக அலையவிட விரும்பியிருப்போம். இடது சாரி, வலது சாரி அரசியல் முதல் அனைத்து விஷயங்களையும் விவாதிக்க, கருத்து கணிப்பு நடத்த, உலக கருத்துகளைப் பார்க்க, பல வித எண்ணங்களைப் படிக்க ஒரு அரட்டை திண்ணை தளம்.

சுயசரிதை? டைரி குறிப்பு? நாவல்? நினைவலை? எது இலக்கியம்

On Writers and Writing: The Life of the Mind in Close-Up: சுவையான அலசல் ஆரம்பம். "எனக்கு புனைகதைகளுக்கும் நனவோடை நாவல்களுக்குமான இலக்கிய சச்சரவு அலுத்துவிட்டது."

அன்னை தெரசாக்களுக்கு பதிலாக சமுதாயத் தொழிலாக்கர்கள்

How to Save the World? Treat It Like a Business: ஒழுங்காக படிப்பதில்லையா? +2வில் நல்ல மதிப்பெண்கள் இல்லையா? சோத்துக்கு கஷ்டமா? கவலை வேண்டாம். தமிழ்ப் படங்களின் ஹீரோ - ஹீரோயின் வித்தியாசத்தை (ஏழை - பணக்கார பொருளாதார பாகுபாடுங்க) நீக்க திரு. ஸ்க்ராம் இவர்களை பயன்படுத்துகிறார்.

பட்டம் பெற்று வேலையில் அமர்ந்தவர், முன்னூறாயிரம் டாலர்களை வரியாக அரசுக்கு தன்னுடைய வாழ்நாளில் கிஸ்தி கொடுக்கிறார். பணபுழக்கத்தை அதிகரிக்கிறார். ஒரு பெண்ணை படிக்க வைப்பது குடும்பத்துக்கே விளக்கேற்றுவது போல ஒருவரை கல்லூரிக்கு அனுப்புவதால், அந்தக் குடும்பங்களில் தறுதலைகள் தவிர்க்கப் படுகிறார்கள்.

பங்களாதேஷ் கிராமீன் வங்கியின் புகழ்பெற்ற 'மைக்ரோ க்ரெடிட்', அமெரிக்காவின் சிறந்த பல்கலைகளில் இருந்து இளம் பட்டதாரிகளைக் கொண்டு இல்லாதவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பது, உலகளவில் அனைத்து ஏழ்மையானவர்களுக்குமான உடல் நல பாலிசி, பிரேசிலில் வறுமையில் இருக்கும் விவசாயிகளுக்கு சகாய விலையில் மின்சாரம் வழங்கும் செயல் திட்டம் என பல தொண்டு தொழிலதிபர்கள்.

சமுதாயத் தொழிலாக்கர்கள் (entrepreneurs) சேவை மனப்பான்மையோடு பணம் பண்ணும் எண்ணமும் கொண்டவர்கள். நாட்டுக்கும் நாலு காசு வரவிட்டு, தனக்கும் ஒரு காசு பார்த்துக் கொண்டு, அடுத்தவரிடம் கையேந்தாமல், குடிசைகளை முன்னேற்றுகிறார்கள்.

தற்போது மக்களுக்கு சுற்றுப்புற சூழல் மாசுபடுதல், ஏழைகள் இன்னும் நசுக்கப்படுதல், சுகாதார விபத்துகள், மனித உரிமை மீறல், வன்முறை அதிகரிப்பு, கல்வி திட்டங்களின் சீர்கேடு, என்று பரந்த ஞானம் இருக்கிறது. அவற்றை மாற்ற நேரமும், பணமும், உடல்நலமும், வெளி அறிவும், பார்வைகளும், சமூக அமைப்பும், சுதந்திரமும், நம்பிக்கையும் வாய்த்திருக்கிறது.

ஸ்டான்போர்ட், ட்யூக், யேல் என பல நல்ல கல்லூரிகள் புதிய பாடதிட்டமான சமூக தொழிலாக்கத்தை வழங்குகிறார்கள். கொஞ்சம் சரித்திர பிண்ணனி, மில்லியன் என்.ஜி.ஓ. தொண்டு ஆரவலர்கள் நிறைந்த இந்தியா, என விரியும் கட்டுரை, அரசாங்கத்தின் பங்கை சொல்லி முடிக்கிறது.

Urulum Ulagil - ஏற்கப்படாத எழுத்துக்கள்

Urulum Ulagil - ஏற்கப்படாத எழுத்துக்கள்: "வெட்கம், எனது பிள்ளைப்பிராயம், முரட்டுக் காற்று என்ற தலைப்புக்கள் கொண்ட இவரது மூன்று நாவல்களின் விற்பனையை அரசு தடை செய்துள்ளது."

வெள்ளி, டிசம்பர் 19, 2003

லோக்வானி - என்.ஆர்.ஐ புத்தகங்கள் புக்கர் பரிசை கடைசி ரவுண்டில் தவறவிட்ட மோனிகா அலி, தென்னிந்திய கிறித்துவர்களைப் பேசும் டேவிடின் முப்பதிவுகள், வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள், அமெரிக்காவின் சீனா, லத்தீன வந்தேறிகளுடன் இந்தியர்களை ஒப்புமை படுத்தும் படைப்புகள் என அமெரிக்க இந்தியர்களுக்கு(ம்) சுவாரசியாமான புத்தக பட்டியல்.

சினிமாவில் இது எல்லாம் சகஜமப்பா...(MSNBC - Gaffes: Fellowship of the Nitpickers): வெள்ளித்திரையிலும் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு நக்கீரர் வேலை பார்க்கிறார்கள். ஆஸ்கர் படங்களிலேயே தவறுகள் இருக்கும் போது, 'ஜே...ஜே...'க்களில் இருப்பதை பெருசு படித்தாதீர்கள்.

வியாழன், டிசம்பர் 18, 2003

Online Shopper: Reaching for a Last-Minute Lifeline: நத்தார் தினத்துக்குப் பரிசு கொடுக்கப் போறீங்களா (நான் எனக்காகக் கேட்கவில்லை ;;)

பல பயனுள்ள தகவல்கள். காட்டு: அமேசாமன் வாடிக்கையாளர் சேவையின் தொலைபேசி எண் தெரியுமா?

BBC NEWS | Entertainment | Film | Cold Mountain leads Golden Globes அமெரிக்காவில் உங்கள் படம் அவார்டு வாங்க வேண்டுமானால் போர் கொஞ்சம் வேண்டும்; புத்தகத்தைத் தழுவி எடுக்க வேண்டும்; காதல் அவசியம் இருக்க வேண்டும்; அந்தக் காதல் தோல்வியில் முடிந்தால், விருது வாங்க வாய்ப்பு அதிகம்.

நம்ம ஊரு கதையான 'பெண்ட் இட் லைக் பெக்கம்', 'காந்தி' கிங்ஸ்லி, 'எலிசபெத்' கேட், எனக்குப் பிடித்த வில்லியம். எச். மேஸி, எதிர்பார்த்தபடியே டாம் க்ருய்ஸ், ஜானி டெப், ரஸம் க்ரோ, ஜாக் நிகல்ஸன் என பலரை முன்மொழிந்திருக்கிறார்கள். புழுதி நிறைய கிளப்பிய 'ரேகன்' படமும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

முழுமையான பட்டியல்
அதிகாரபூர்வமான இணையத்தளம்



Basics: Setting Out the Welcome Mat at Your Home on the Web: தமிழ் வலைப்பூக்களின் வ.கே.கே.க்குப் பயனுள்ளதாக இருக்கும் தகவல்கள். பலருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். கடைசி இரண்டு வரிகள் உண்மை விளம்பியாக உள்ளது.

சில கதை சொல்லிகளும் புத்தகங்களும்
நன்றி: சிஃபி/காலச்சுவடு


பா. வெங்கடேசனின் நெடுங்கதைகளின் (ராஜன் மகள்)
ஜீ. முருகனின் இரண்டாவது கதைத் தொகுதி கறுப்பு நாய்க்குட்டி.
தமயந்தி. தமயந்தியின் சமீபத்திய நாவல் நிழýரவு
அளம் என்ற ஒரு நாவலைப் எழுதியவர் சு. தமிழ்ச்செல்வி.
யூமா. வாஸ÷கியின் ரத்த உறவு.
சு. வேணு கோபாலனின் கூந்தப்பனை.
செந்தூரம் ஜெகதீஷ். அவருடைய முதல் நாவல் கிடங்குத் தெரு.
ரமேஷ் - பிரேமின் சொல் என்றொரு சொல்
அழகிய பெயவன் எழுதிய தகப்பன் கொடியையும்
பெருமாள் முருகனின் கூளமாதாயையும்
பெருமாள் முருகனின் முதல் நாவலுக்கு (ஏறு வெயில்)
இரண்டாவது நாவலான நிழல் முற்றம்
சூத்ரதாயின் அம்மன் நெசவு
ஜே. பி. சாணக்யாவை என் வீட்டின் வரைபடம் என்ற தொகுதி -: "மிகுமழை" என்ற சிறுகதை
ரா. சீனிவாசன்

சில கவிதை சொல்லிகளும் புத்தகங்களும்
நன்றி: சிஃபி/காலச்சுவடு

வெண்ணிலாவின் இரண்டாம் (ஆதியில் சொற்கள் இருந்தன) மற்றும்
மூன்றாம் தொகுதிகளில் ( நீலலையும் முகம்)

ரா. ஸ்ரீனிவாஸனின் முதல் தொகுதி (ரா. ஸ்ரீனிவாஸன் கவிதைகள்)
இரண்டாம் தொகுப்பான கணத் தோற்றம் (2001)

கண்மணி குணசேகரன் ஒரு புனை கதையாளரும் கூட (கோரை - நாவல்).
சிறுகதைகளும் (ஆதண்டார் கோயில் குதிரை)
கண்மணி குணசேகரனின் காட்டின் பாடல் தொகுதி

சிபிச்செல்வன். அவரது முதல் தொகுதியான ""சாம்பல் காட்டை"" விட
கறுப்பு நாய் தொகுதியில்

ஸ்ரீநேசனின் முதல் கவிதைத் தொகுதியில் (காலத்தின் முன் ஒரு செடி)
சத்யன் (கைப்பிரதியில் சில திருத்தங்கள்),
பொற்கணம் தொகுதியின் மூலம் வேறுபட்ட கவிதையனுபவத்தைத் தந்த அமிர்தராஜ்,
மீனுக்குள் கடல் தொகுதியை அளித்த பாதசா
கே. ஸ்டாýன் 2001இல் வெளியிட்ட பயணவழிக் குறிப்புகள்
பாலை நிலவனின் கவிதைகளைச் (சாம்பல் ஓவியம்)
மனுஷ்ய புத்திரனின் மூன்றாவது தொகுதியை (நீராலானது)
யவனிகா ஸ்ரீராமின் முதல் கவிதைத் தொகுதியைப் (இரவு என்பது உறங்க அல்ல, 1998)
ககாலனின் புலன் வேட்டை (1998)
சே. பிருந்தாவின் முதல்தொகுதியான "மழை பற்றிய பகிர்தல்கள்'
இளம்பிறையின் நான்காவது தொகுதியான முதல் மனுஷிக்கு
குட்டி ரேவதியின் இரண்டாம் தொகுதியான முலைகள்
சுகிர்தராணி முதல் தொகுதியான கைப்பற்றி என் கனவு கேள் (2002)
தவசி என்பவரது மூன்றாம் தொகுதியான இன்னும் இந்த வாழ்வு

சங்கர ராமசுப்பிரமணியன்
சூர்ய நிலாவின் சில்லுகள்,
ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் மெசியாவின் காயங்கள் (2002),
அமிர்தம் சூர்யாவின் உதி சயனத்தை நீல் அலசும்வரை (2000),
ப்யமின் அலைகளின் மீதொரு நிழல் (2001),
கே. சி. செந்தில்குமான் பாழ்வெளி (2003),
எஸ். செந்தில்குமான் குழந்தை கள் இல்லாத வீட்டில் உடையும் ஜாடிகள் (2003)
ராஜ÷ சிவசுப்பிரமணியத்தின் நீர் வண்ணச் சிற்பங்கள்,
ரவி உதயனின் பழகிக்கிடந்த நதியையும் (2002).

தேன்மொழி,
இளம்பிறை,
சே. பிருந்தா,
அ. வெண்ணிலா,
குட்டி ரேவதி,
மாலதி மைத்
பெருந்தேவி,
சல்மா,
கனிமொழி

புதன், டிசம்பர் 17, 2003

நாயுடுவின் டைரி குறிப்புகள்: (Hackers make public IT-savvy Naidu's diary) siliconindia: ஆறு மாதமாக வலைக் கள்ளர் புகுந்து திருடியது தெரியாமல் ஒரு பரிமாறி வைத்திருக்கிறார்கள். ஏன் திருப்பதியில் குண்டு வெடிக்காது!? ஒரு வேளை குண்டு வெடித்து, அனுதாப அலை கிளம்பட்டும் என்று எண்ணியேதான் கணினியில் கன்னம் வைக்க அனுமதித்தார்களோ ;;)

எல்லாம் அந்த ஏழு கொண்ட்லவாடாவுக்கே வெளிச்சம்.

கோலிவுட்டும் இயக்குநர் சினிமாவும் பிதாமகன் இயற்கை மற்றும் மீடியா முன் வைக்கும் சில விஷயங்கள் - க்ருஷ்ணா : "இரண்டு படங்களுமே தீபாவளி ரீலிஸ¤க்கு தயாராய் இருந்தது. ப்ரீவியூஷோ, பத்திரிகையாளர் காட்சி எல்லாமே தீபாவளி நாளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன. ஆனால் ஒரு படம் தீபாவளி அன்று வெளியானது. மற்றொன்று வெளிவர முடியாமல் போனது. அதேசமயம் இரண்டு படத்தின் இயக்குநர்களுமே அந்தந்த அளவில் மீடியாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்கள். படம் வெளியானதும் பாலாவை மீடியா அண்ணாந்து பார்த்து சிலாகித்தது. சற்று தாமதமாக வெளியான மற்றொரு படத்தின் இயக்கம் கவனிக்கத்தக்க ஒன்று என்ற அளவில் பாராட்டப்பட்டது. ஆக இரண்டு படங்களுமே வழக்கமான தமிழ் சினிமா சூழலில் இருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்பட்டிருப்பதை தமிழ் மீடியாக்கள் அடையாளம் கண்டு கொண்டு அதை அடி கோடிட்டு காட்டி உயர்த்திப் பிடிப்பது ஆரோக்யமான விஷயம் தான்.

விக்ரம், சூர்யா, லைலா, சிம்ரன், கருணாஸ், லொக்கேஸன், மேக்கப், ஒளிப்பதிவு என்று எல்லாவற்றையும் தாண்டி பிதாமகன் பாலாவுக்கு மட்டுமே சாத்தியமானதாய் எதன் அடிப்படையில் மீடியா நம்பியது - சில பார்வையாளர்கள், நல்ல சினிமா விரும்பிகள், சினிமா கனவுகளுடன் இருப்பவர்கள் என்று இந்த பட்டியல் நீளும். இதன் ரகசியம் முற்றிலும் முழுக்க பாலாவுக்கு தெரியும். அது வியாபரம் சார்ந்தது, தனி மனித ஆளுமை மற்றும் ஒரு விஷயத்தின் மாற்று பார்வையின் வெற்றி சூட்சுமம் சார்ந்தது.

நல்ல சினிமா விரும்பிகள் சிம்ரனின் தொப்புள் காட்டாததைத்தான் சிலாகித்துக் கொண்டிருப் பார்கள். பாலாவின் படத்துக்கு சிம்ரன் தேவைப்பட்டதை உணரமாட்டார்கள், அல்லது உணர்ந்தாலும் வியாரத்துக்கு என்ன செய்ய முடியும் என்று அடங்கி விடுவார்கள்.

அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதை ஒரு உயிரற்ற சடலம் போல் அப்படியே கிடக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதற்கு, படத்தின் இறுதிக்காட்சியில் சித்தன் வில்லனோடு போடும் சண்டையை பாலா திரைக்கதையோடு போட்டிருக்கிறார்.

சின்னதம்பி பிரபு கேலிக்குள்ளாக்கப்பட்டது போல் சித்தனைப் பார்த்து எந்த மீடியாவாவது கேள்வி எழுப்பியதா என்று தெரியவில்லை.

அடுத்தது இந்த படம் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பாத்திரமாக்கி இருப்பதாக ஒரு தோற்றம் கொடுப்பது. இது இன்னும் சோகம். நந்தாவில் கருணாஸ் செய்த பாத்திரத்தின் நீட்சிதான் பிதாமகனின் சக்தி பாத்திரம்.

சித்தனை வளர்த்தவருக்கு வேண்டுமானால் குடும்பம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் தனி நபராக ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க முடிந்த வாழ்வியல் பக்குவம் கொண்டவர். அப்படி ஒருவர் ஒரு நாயைக் கூட தோழமையோடு தான் வளர்த்திருப் பார். ஒரு மனிதனை நாயாக அல்ல.

இயற்கை படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் வேறு மாதிரி சொல்கிறார். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மாதிரி எனக்கு மகன்களோ மகளோ இருந்தால் அது என்னால் விரும்பப்படக்கூடிய ஒன்று. அவர்களோடு என்னால் ஆரோக்கியமான உறவு கொள்ள முடியும். அப்படிபட்டவர்கள் தான் என்றும் என் கதாபாத்திரமாக இருப்பார்கள்.

கோலிவுட் கணக்கில் ஹீரோவை நம்பி எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும் இந்த படத்தில் ஹீரோக்கள் விரவிக்கிடக்கிறார்கள். பாரில் பீர் பாட்டில் பொறுக்கும் முதியவர், ஒரு பெண் பாலியல் தொழிலாளி என்று பட்டியலிட முடியும். ஹீரோயிஸம் என்பது ஒரு காட்சியில் அல்லது படத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு விஷயமன்றி வேறொன்றுமில்லை.

தியேட்டருக்குள் வரும் முதல் வார கூட்டத்தில் சிக்கிக் கொண்டு அந்த கூட்டத்தோடு கூடவே இயக்குநர் சினிமாவை நெருங்குவதற்கான பிரயத்தனங்களில் இந்த படங்கள் ஒரு படிக்கட்டு தான் என்பதும், முழுமையானதல்ல என்பதும் கூட அவர்களுக்குத் தெரியும். ஆனால் மீடியாவிற்கு, சினிமாவைப் பொறுத்தவரை இந்த வளர்சிதை மாற்றம் எதுவும் கிடையாது. அவை சினிமாவிற்கான விளம்பர நிறுவனங்களைப் போல் செயல்படத் தொடங்கி விட்டன என்பது தான் தற்போதைய உண்மை. "

முழு கட்டுரையும் படிக்க ஆறாம்திணை செல்க.

திரு. அ. இரவியுடன் நேர்காணல்: மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக பட்டாலும், எனக்குத் தோன்றுகிறது. சொல்கிறேன். ஏக்க உணர்ச்சியும், குற்ற உணர்ச்சியுமே, புலம் பெயர்ந்தோரிடம் தூய தமிழ், தனித் தமிழ் என்று மொழி உணர்வு தலை தூக்குவதற்கு காரணம். (என்னையும் சேர்த்துதான் :) சென்னையில் இருப்போருக்கு இது போன்ற போலித்தனங்கள் இல்லை. எனவே, கவலைப் படாமல் தமிழ் பேசுகிறார்கள்.

மரத்தடி விவாதங்களும் பார்த்திருப்பீர்கள் அல்லவா?

siliconindia: அதிக விலை கொடுத்து வசந்த மாளிகைகளை வாங்குவதில் இந்தியர்களை அடிச்சுக்க முடியாது. 2000 ஆண்டின் அமெரிக்காவின் மக்கள் தொகைக்கணக்கின் படி, இந்தியர்களே யானை விலை கொடுத்து, சொந்த வீடு கனவை நனவாக்கி கொள்கிறார்கள்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்: $ 80,600
லத்தீன் அமெரிக்கர்கள்: $ 105,600
சராசரி: $ 119,600
வெள்ளையர்கள்: $ 122,980
ஆசிய அமெரிக்கர்கள்: $ 199,300

'க்ரீன் கார்ட்' என்னும் படத்தில் ஒரு வசனம் வரும்.
'அது ஏன், இவர்களை மட்டும் 'ஜெர்மானிய அமெரிக்கன், இட்டாலிய அமெரிக்கன்', என்று அழைக்க மாட்டேன் என்கிறாய்?'

படம் மறந்து விடக்கூடிய ஒன்று. ஆனால், இது போன்ற நச் வசனங்கள் ஒரு சில மனதில் தங்கிப் போனது.

Outsourcing's offshore myth | CNET News.com: கலாமின் 2020 கனவு பலித்துவிடும் என்கிறார்கள். 2020-இல் இந்திய கணினி வல்லுனர்களும், அமெரிக்கர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிக் கொண்டு (ஆனால், வேலையும்) செய்வார்கள். இவர்களின் வாதத்தில், பல அமெரிக்க நிறுவனங்கள் பராமரிப்புக்கே அதிகம் செலவிடுகிறார்கள் என்பது என்னால் மிகவும் ஒப்புக்கொள்ளக் கூடிய கருத்து. ஆராய்ச்சிக்கும், புது மென்பொருளுக்கும் செலவிட வேண்டிய பணத்தை, ஒட்ட வைப்பதிலும், பழுது பார்ப்பதிலுமே கழிக்கிறார்கள்.

கணினி வேலைகள் அமெரிக்காவிலிருந்து சென்று விடும். தொண்ணூறுகளின் இணையம் மாதிரி, புது போக்கு வேறு ஏதாவது வந்தால் மட்டுமே, இந்த இடைவெளியை நிரப்ப முடியும். 'மாற்றங்கள் மட்டுமே மாற்ற முடியாத உண்மை' என்று முடிக்கிறார்கள்.


செவ்வாய், டிசம்பர் 16, 2003

RAAGA - Pudhukottayilirundhu Saravanan - நாட்டு சரக்கு: அடுத்த 'கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா' கேட்டாச்சா? முனைவர் லாவண்யா பாடியிருக்கும் கானா.

'மலர்களே' என்று ஒரு வசீகரமான பாடலையும் கொடுத்திருக்கிறார் பாம்பே ஜெயஸ்ரீ. ஹஸ்கி குரல் தவிர வேறு விதமான பாடல்களையும், அவரை பாட வைக்க சொல்ல வேண்டும். 'அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே' என்ற கிண்டல் வரிகளுக்கு சொந்தம் யார்?

Movie Review | 'The Return of the King': Triumph Tinged With Regret in Middle Earth: 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' முதல் பகுதியின் திரைவட்டு வீட்டில் தூங்குகிறது. ஒவ்வொரு முறை படத்தை ஓடவிட்ட பிறகும் தூங்கி வழிந்து பாதியில் நிறுத்தி இருக்கிறேன். இந்த முறையும் ஆஸ்கார் கிடைக்கலாம் என்னும் கருத்து உலாவுவதால் மட்டுமல்ல; வெள்ளித்திரையில் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்னும் காரணத்தினாலும், வாரயிறுதியில் மூன்று 'வளையங்களையும்' பார்த்து விடுவதாக உத்தேசம்.

டைம்ஸ் விமர்சகர்களுக்கும் எனக்கும் ஒத்துப் போவதில்லை. சில படங்களை (காட்டாக 'யூ ஹாவ் மெயில்') அவர்கள் 'ஆஹா... ஓஹோ...' எனப் புகழ எனக்கு, 'ஏண்டா வந்தோம்' என்று ஆகி விடும். இன்னும் அப்படித்தானா என்று உறுதிபடுத்துவதற்கே இந்த பலபரீட்சை.

திங்கள், டிசம்பர் 15, 2003

E! Entertainment Special - Entertainer of the Year 2003 - The Winners: "காலின் ஃபாரெலும் இந்த பட்டியலில் உள்ளார் என்னும் ஆவலில் பார்த்த நிகழ்ச்சி. ஜானி டெப் சிறந்த நடிகருக்கான ஆஸ்காரை எடுத்து செல்வாரா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். சின்னப் பசங்களுக்காக பியான்ஸ், ஜஸ்டின் என்று ஜனரஞ்சகமாக்கப்பட்ட விருதுகள்."

BBC NEWS | South Asia | Security stepped up for Musharraf: "முஷாரஃப் உயிருக்கு இரண்டாவது குறி. அரை நிமிடம் தாமதத்திருந்தால், இன்னுமொரு புதிய தலைவருடன், 'அடியைப் பிடிடா...பாரத பட்டா' என்று பேச்சுவார்த்தை கால்ககோள் ஆரம்பித்திருக்க வேண்டும்."

அம்மா...

என்னுடைய அம்மா ஆர். பொன்னம்மாளை குறித்து எழுத வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, நாளை முதல் அவர்களின் வாழ்க்கையை சிறிது சிறிதாக பதிய முயலப் போகிறேன். அதற்கு முன் அவர்களின் தற்போதைய எழுத்துக்களை படிக்க விழைவோருக்கு, சில சுட்டிகள்.

காமகோடியில் எழுதுவதில் எனக்கு மிகவும் பிடித்தது 'பரமாசார்யாளின் பாதையிலே' . எளிய தத்துவங்கள்.

கிராம தேவதைகள், விரத விசேஷ தினங்கள் என மாதா மாதம் எழுதுகிறார். அவ்வப்பொழுது கோலங்கள் பகுதியும் காமகோடியில் வருகிறது.

நவமபர் மாதப் பகுதிகளையும் படித்து விட்டு காத்திருங்கள் :)

கடைசியாக, அவர்களின் சமீபத்திய புத்தகமான 'பக்த விஜயத்துக்கு' ஓர் அறிமுகம்.






பட்டியம் போடுவது எனக்குப் பிடிக்கும்

அமெரிக்கத் திரைப்பட நிலையம் (AFI) ஐம்பது சிறந்த ஹீரோக்களையும்,
ஐம்பது ஒண்ணாம் நம்பர் போக்கிரிகளையும் வரிசை படித்தியுள்ளனர்.

தமிழில் சிறந்த 50 கதாநாயக/வில்லன் வேடங்களை தேர்ந்தெடுத்தால்,
உங்கள் பட்டியலில் எவர் வருவார்கள்?

எனது வரிசை:

கதாநாயகர்

1. 'மனதில் உறுதி வேண்டும்' சுஹாசினி
2. 'மலைக்கள்ளன்' எம்.ஜி.ஆர்.
3. 'அண்ணாமலை' ரஜினி
4. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' சத்யராஜ்
5. 'தூக்கு தூக்கி' சிவாஜி

வில்லன்
1. 'நாயகன்' கமல்
2. 'சத்யா' கிட்டி
3. 'வாலி' அஜீத்
4. 'குட்டி' எம்.என்.ராஜம்
5. 'அவர்கள்' ரஜினி


உங்கள் எண்ணங்கள்?

வெள்ளி, டிசம்பர் 12, 2003

'கூப்பிடு தூரம்'

அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம்.

வீரசோழிய உரையில், 'முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு'
என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம்.

இன்னொன்று 'யோசனை' எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன்
ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.
பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. அப்படியானால்
12000 கஜம் X 4 = 48000 கஜங்கள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல்
என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும்.
நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம்
என்று இப்படி.

நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன்.

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து
வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம்
நீங்கள் கதை சொல்லும்போது, "இப்படியெல்லாம் அளந்து
விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க", என்று அளந்துவிடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)
12 விரக்கடை = 1 சாண் (9 inches)
2 சாண் = 1 முழம் (18 inches)
2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)
4 முழம் = 1 பாகம் ( 6 feet)
6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.
கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள்.

இதனை 'ஏழரை நாழிகை வழி' என்றும் சொல்வார்கள்.
ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும்
தூரமாக இதைக் கருதினார்கள்.
சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே
முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க
பின்னே இருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம்
வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம்போம் காத வழி!

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு
ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர்
கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர்
தள்ளினால்தான் அந்த வேகமும்கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு
பேரேரி இருக்கிறது. ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில்
வெட்டப்பட்டது. அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.
ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.
அதையட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது.

'நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி'.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில்
தெற்கு நோக்கி பறந்துவரும். ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை
கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.
நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது.
அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின்
நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.

நன்றி அகத்தியம் இணைய குழு

காலங்களில் அவள் ???

6-00am - 8-24am - பூர்வான்னம்
8-24am - 10-48am - பாரான்னம்
10-48am - 1-12 pm - மத்தியான்னம் (மத்ய அன்னம்)
1-12pm - 3-36pm - அபரான்னம்
3-36pm - 6-00pm - சாயான்னம்


சாமம் என்பதற்கு இரண்டு மூன்று வகையாக கணக்குகள் இருந்தன.
சாதாரண வழக்கத்தில் ஒரு சாமம் என்பது ஏழரை நாழிகை
கொண்டது. அதாவது மூன்று மணி நேரம். அப்படியானால் ஒரு நாளில்
எட்டு சாமங்கள் இருக்கின்றன.


முழுக்கணக்கு -->

2 கண்ணிமை = 1 நொடி
2 கைந்நொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை
2.5 நாழிகை = 1 ஓரை (1 மணி நேரம்)
3.75 நாழிகை = 1 முகூர்த்தம் (1.5 மணி)
2 முகூர்த்தம் = 1 சாமம் (3 மணி)
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
12 ஆண்டு = 1 மாமாங்கம்
5 மாமாங்கம் = 1 வட்டம்

பெரும்பொழுது

1 இளவேனில் சித்திரை, வைகாசி
2 முதுவேனில் ஆனி, ஆடி
3 கார் ஆவணி, புரட்டாதி
4 குளிர் ஐப்பசி, கார்த்திகை
5 முன்பனி மார்கழி, தை
6 பின்பனி மாசி, பங்குனி


சிறுபொழுது

1 காலை காலை 6 மணி - 10 மணி வரை
2 நண்பகல் காலை 10 மணி - பிற்பகல் 2 மணி வரை
3 எற்பாடு பிற்பகல் 2 மணி - மாலை 6 வரை
4 மாலை மாலை 6 மணி - முன் இரவு 10 மணி வரை
5 யாமம் இரவு 10 மணி - பின் இரவு 2 மணி வரை
6 வைகறை விடியற்காலம் 2 மணி - பின் இரவு

வியாழன், டிசம்பர் 11, 2003

சல்மான் ருஷ்டி
------------------------------------------------------

டெண்டுல்கரைத் தொடர்ந்து மற்றுமொரு சுவையான வரலாறு ஸ்டைல் நாவல்.
அயாதுல்லா கொமேனியே புத்தகத்தை படித்திருந்தால், ·பாத்வா கொடுப்பதற்கு
பதில், விருந்துக்கு வரவழைக்கும் அளவு சல்மான் ருஷ்டி என்னும் படைப்பாளியை
தூக்கி நிறுத்தும் அறிமுகம்.

ருஷ்டி என்றவுடன் என் மனதில் ஓடிய பிம்பம், இஸ்லாமியத்தைப் பழிக்கும் ஒரு
முஸ்லீம்; மேற்கத்திய தாக்கத்தினால் இந்தியாவைத் துறந்த ஒரு முசுடு;
முட்டை உடைப்பதற்காக உலக்கை உபயோகபடுத்தும் எழுத்தாளர்.
புகழ் பெறுவதற்காக சலசலப்பு ஏற்படுத்தும், வார்த்தை ஜால வித்தகர். இந்த
பிம்பங்களையும், அவை ஏன் உண்டாயின, எழுத்தில் எங்கு தெரிகின்றன,
எவ்வாறு இவற்றில் சிலது சரி, எங்கு தவறாக எடை போட்டோம் என்பதை
நிலா இரவில் கதை சொல்லும் அம்மாவாக உணவைக் கொடுக்கிறது, இந்த
புத்தகம்.

என்னைப் போன்ற attentiion deficit syndrome மக்கள் கூட கீழே வைக்க
முடியாத வேகம். (வேகத் தடைகளாய் ஆங்காங்கே சில மொழிபெயர்ப்புகள்
தென்படுகிறது. 'நம்முடைய இப்போதைய இந்த வாழ்க்கை எந்த அளவு
பாதுகாப்பாய், சவுகர்யமாய் இருக்கிறது என்பதைப்பற்றி சிந்திப்பதிலேயே
வாழ்நாள்களைச் செலவிட்டுவிட்டால், நம்மெதிரே இருக்கிற சாலைகளை நாம்
எப்போதும் கடக்கப்போவதில்லை').

ருஷ்டி என்னும் கதாநயாகனுடன் வாசகனை வளர விடுகிறார் நூலாசிரியர்.
அவரோடு பம்பாயின் தெருக்களில் உலாவுகிறோம். அங்கிருந்து லண்டன்
பள்ளியில் நம்மை சேர்த்து, எழுத வைத்து, இருட்டில் தள்ளி, ஊரை விட்டு
ஒதுக்கி வைத்து, விருது வாங்கி குதூகலித்து என்று frame by frame நெருங்கியும்
விலகியும் காட்டும் பாலு மகேந்திராவின் படத்தில், சொக்கனின் மொழி நடை
இளையராஜாவின் பிண்ணனி இசையாக இடையூறு செய்யாமல் ஒன்ற வைக்கிறது.

அலுப்பு தட்டாத விவரங்களுடன் ருஷ்டியின் எழுத்து பாணிகள், கிண்டல், satire,
மண வாழ்க்கை, இலக்கியத் தடங்களை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ருஷ்டியின்
எழுத்துக்களை உள்வாங்கியது போல் அவரின் சலனமற்ற முகத்தை கூட சொக்கர்
படித்து விடுகிறார். இந்தியாவில் நடந்த காமன்வெல்த் பரிசு கிடைக்காத சோகத்தை
மறைத்ததை குறிப்பிடுதல், தாய்நாடு பற்றிய மனோபாவம், வளர்ந்த இடத்தை இழந்த
வருத்தம் என அலசி, ஒரு எழுத்தாளனை பல கோணங்களிலும் முன்னிறுத்துகிற
நிறைவான அறிமுகம்.

சோகத்தையும், சுய அகப்பாடுகளையும் ருஷ்டியின் எழுத்துக்களில் கண்டுபிடுத்து
சொல்லும் அதே வேகத்தில், அவரின் காதல் லீலைகளையும் துள்ளலாக ஒரு
பகுதியில் எல்லை மீறாமல் வர்ணிக்கிறார். விரவியிருக்கும் புத்தக சுருக்கங்களும்,
குறிப்புகளும் 'ருஷ்டியின் படைப்புகள்' என ஒரு சேர ஒரே அத்தியாயத்தில்
reference ஆக்குவது பயனுள்ளது. மேஜிக்கல் ருஷ்டி-யிசம் பகுதியும் குறிப்பிடப்பட
வேண்டிய பதிவு கட்டுரை.

சுண்டி இழுக்கும் பகுதி தலைப்புகளுக்கும், அவற்றின் உள்ளடக்கங்களுக்கும்
சில சமயம் சம்பந்தம் இல்லை என்பது எல்லாம் படிக்கும் போது தோன்றாது; கருத்து
வழங்கும்போது தோன்றலாம். நிறைய ஆச்சரியகுறிகள், பலர் அறிந்த மும்பையும்
பம்பாயும் ஒன்று போன்ற குறிப்பிடல்கள், ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.

'சாத்தானின் வேர்ஸசை' விவரித்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அவரின்
சிறுகதை/கட்டுரை ஒன்றையாவது எடுத்து அலசியிருக்கலாம். புத்தகக்
குறிப்புகளில் கோடிட்டு காட்டிவிட்டு, வாசகனின் ஆர்வத்துக்கே விட்டு
விடுகிறார். சொக்கனின் அறிமுகத்தைப் படித்த பிறகு, புத்தகத்தில்
குறிப்பிட்ட சில மேட்டர்களைத் தேடி பிடித்து நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை பற்றி, தேர்ந்த எழுத்தாளர் எழுதிய,
எழுத்துலக ஆர்வம் கொண்டவர்கள் அனவரும் படிக்க வேண்டிய அறிமுகம்.

------------------------------------------------------

"சல்மான் ருஷ்டி - என். சொக்கன் - சபரி பதிப்பகம் வெளியீடு -
128 பக்கங்கள் - ரூ 45/-"

------------------------------------------------------

புதன், டிசம்பர் 10, 2003

யாத்ரா மார்க்கம் - புதுமைப்பித்தன்
====================================

சமீபத்தில் 'பம்பாய் கிரானிக்கல்' பத்திரிகையைப் புரட்டிக்
கொண்டிருந்தபொழுது, பிரிட்டிஷ் நாவலாசிரியர்களைப் பற்றி
அமெரிக்க பிரசுரகர்த்தர் சொல்லிய அபிப்பிராயம் என் கவனத்தை
இழுத்தது. அந்த பிரசுரகர்த்தர் பெயர் பெரிஸ் கிரீன்ஸ்லெட்.
அவர் சொல்லுகிறார்:

உங்கள் நாவலாசிரியர்கள் (பிரிட்டிஷ்) திறமைசாலிகள்.
தங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் பேனாவை வளையவைக்கும்
சக்தி பெற்றவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்
அவர்கள் புல் மேயும் ஆசாமிகளாயிருக்கிறார்கள்; அடிப்படையான
விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறதில்லை.

இதற்கு இவர் கூறும் காரணம் விசித்திரமாக இருக்கிறது; ஆனாலும்
அது அவ்வளவும் உண்மை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்
கூறுவதாவது:

பிரிட்டிஷ் விமர்சகர்கள்தான் இந்த நிலைக்குக் காரணம். அவர்கள்
வெகுவிரைவில் திருப்தியடைந்து புகழ ஆரம்பித்து விடுகின்றனர்.
பிரிட்டிஷ் விமர்சகர்கள் உயர்வு நவிர்ச்சிகளையிட்டு அபிப்பிராயம்
கொடுத்த சில நாவல்களைக் கண்ணுற்றேன். அவற்றை என்னால்
வாசிக்க முடியவில்லை.

இதைப் பற்றி படித்தவுடன் நமது புத்தகங்களைப் பற்றி வெளிவரும்
'மதிப்புரைகள்' என் நினைவிற்கு வந்தன. தமிழில் வாசிக்கும் பழக்கம்
மிகவும் குறைவு. அதிலும் மதிப்புரை வாசிக்கும் பழக்கம், அம்மதிப்புரைகளில்
குறிப்பிட்ட புத்தக ஆசிரிய - பிரசுரகர்த்தர்களைத் தவிர வேறு யாரும்
கிடையாது என்றால், உயர்வு நவிற்சியில்லா மதிப்புரையின் தூண்டுதலால்
புத்தகம் வாங்கும் பழக்கம் எவ்வளவு அளவில் இருக்கிறது என்பதை
நான் திட்டமாகக் கூற முடியாது. ஆனால் ஒன்று. அவற்றின் உதவியை
நாடுகிறவர்களை 'நமது' மதிப்புரைகள் தவறான வழியில் செலுத்தும்
'ஓர் மகத்தான' தொண்டு புரிந்து வருகின்றன.

நான் இவ்விஷயத்தைப் பற்றி எனது நண்பர் ஒருவரிடம் குறிப்பிட்டேன்.
'புஸ்தகப் பிரசுரமே சிசுப் பருவத்தில் இருந்து வருகிறது; நாம்
கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கவேண்டும்' என்றார்.
(கட்டுரை வெட்டப்பட்டுள்ளது...)
புதுமைப்பித்தன்
மணிக்கொடி, 15 ஆகஸ்டு 1937

மணிக்கொடியில் கருத்துப் பரிமாற்றத்துக்கான பகுதி 'யாத்ரா மார்க்கம்'.
அதில் புதுமைப்பித்தன் எழுதிய குறிப்புகள் இவை.

நன்றி: அன்னை இட்ட தீ (புதுமைப்பித்தனின் அச்சிடப்படாத/தொகுக்கப்
படாத படைப்புகள்)
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்

பிடித்த பாட்டுக்கள்

டெண்டுல்கர்:
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!" - முள்ளும் மலரும்

சேவாக்:
"என்னம்மா கண்ணு சௌக்கியமா?" - Mr. பாரத்

கங்குலி:
"ஒண்ணுமே புரியலை...உலகத்தில! என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது!"

டிராவிட்:
"ராஜா என்பார்; மந்திரி என்பார்! ஒரு ராஜ்யம் இல்லை ஆள!" - புவனா ஒரு கேள்விக்குறி

யுவ்ராஜ் / கை·ப்:
"நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க"

ஹர்பஜன்:
"சுற்றும் பூமி சுற்றும்" - டும் டும் டும்

ஜஹீர்:
"நீங்க நல்லா இருக்கோணும்; நாடு முன்னேற"

ஸ்ரீநாத்:
"ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!"

பார்திவ்:
"புது மாப்பிள்ளைக்கு ரப்பரே... நல்ல யோகமடா!" - அபூர்வ சகோதரர்கள்

பங்கார்:
"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" - வைதேகி காத்திருந்தாள்

அகர்கர்:
"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." - பதினாறு வயதினிலே

கும்ப்ளே:
"உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம்!" - நினைவே ஒரு சங்கீதம்

மனோஜ் ப்ரபாகர்:
"எல்லாருமே திருடங்கதான்!" - நான் சிகப்பு மனிதன்

கவாஸ்கர்:
"ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவன்தான் மண்ணுக்குள்ளேப்
போன கதை, உனக்குத் தெரியுமா?" - மௌனம் பேசியதே

ரவி சாஸ்திரி:
"கண்டதைச் சொல்கிறேன்; உங்கள் கதையை சொல்லுகிறேன்!" - சில நேரங்களில் சில மனிதர்கள்

வெங்கட்ராகவன்:
"வடிவேலன் மனசுவெச்சான்" - தாய் இல்லாமல் நான் இல்லை

செவ்வாய், டிசம்பர் 09, 2003

பாய்ஸ் இசை - சில மேற்குறிப்புகள்

Secret of Rehman's வேட்ற்றி is Britney Spears, N'Sync and Remix
of பீட் இட் & his own 'ஓட்யா'வின் 'பூக்கும் மலர்கள்'. Not path breaking,
ஆனா certainly youthish and hep, complete with மாரோ kids' lingo!

மன்னிக்க...

ரொம்ப நேரம் 'பாய்ஸ்' எம்.பி3கள் கேட்டதனால், ஆங்கிலமும், தமிழ் போன்ற
இங்கிலீஷ¤ம் மட்டுமே வாயில் வருகிறது. கொஞ்சம் நிலைப்படுத்திக் கொண்டு
தொடர்கிறேன்.

1. அலெ... அலே (எகிறி குதித்தேன்) - கபிலன் - **** / 5

கொஞ்சம் அமைதியாக, தமிழ் தெரிந்தவர்களுக்கும் புரியக்கூடிய
பாடல். யார் இந்த சித்ரா சிவராமன்? ஒழுங்காகப் பாடுகிறார்;
இளசாக சிரிக்கிறார். உதட்டில் அடிபட்டதாலோ என்னவோ
ச்

கவர்ந்த வரி:
வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறி விட்டேன்!

சாதா வரி:
ஒரு விதை இதயத்தில் விழுந்தது;
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே!

2. பூம் (காதல் இதுதான்) - கபிலன் - - * / 5

திருச்சி லோகனாதனும், எஸ். வரலட்சுமியும் ஆங்கிலப் பாடல்
பாடியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். பழகிப்போன உதித்தைத்
துறந்து, அத்னான் சாமியும், கீச் சர்கமும் குரல் உதிர்க்கிறார்கள்.
சத்தியமாய் புரியவில்லை. boysthemovie.com-இல் வரிகள் கண்டால்
புரிந்து கொள்ள ஐந்து சதவீத வாய்ப்பு இருக்கு. (ஆனால், அத்னான்,
கார்த்திக் மொழியை விட எவ்வளவோ தேவலை)!

கவர்ந்த வரி:
தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்!
ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழலாகும்!

சாதா வரி:
குப்பை மேட்டில் ரோஜாச் செடி பூப்பதில்லையா?
(போனஸ்: அழுகிவிட்ட மாம்பழத்தில் இருவண்டுகள் நாம்தான்!)

3. டேட்டிங் (யாரை கேட்டு) - பா.விஜய் - *.5 / 5

தமிழை வித்தியாசபடுத்த இன்னொரு கண்டுபிடிப்பு ப்ளாசி.
பார்பி குரலோடு கர்னாடக வசுந்தரா தாஸ் வாய்ஸ்.
'பேட்டை ராப்' போல இல்லாமல், வித்தியசமான ராப் (முயற்சி).
ஆங்கிலப் பாடல்; தமிழும் இருக்கிறது! (நான் உச்சரிப்பை சொல்லவில்லை).

கவர்ந்த வரி:
ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே...
·ப்ரெண்ட்ன்னு ·புல்ஸ்டாப் வைக்காதே!

சாதா வரி:
கற்க கசடற கற்பவை
கற்றபின் மறக்க செய்வது லவ்வாகும்!

4. கேர்ள்·ப்ரெண்ட் (பால் போல) - பா.விஜய் - **.5 / 5

கார்த்திக், டிம்மி, திப்பு என்று மூவர் பெயர் குறிப்பிட்டிருந்தாலும், என்
காதில் ஒலித்தது ஒரு குரலே! புகழ் பெற்ற வைரமுத்துவின் பெயர்ச்சொல்லும்
அதன் குணாதிசங்களையும், புல்லட் எண் பட்டியலிடும் அடியற்றி கொடுக்கப்
பட்ட பாடல்.

கவர்ந்த வரி:
இணையதளத்தில் கணினி களத்தில்,
மின்னஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே!

சாதா வரி:
பார்பி டால் போல போனி டெய்லோடு தேவை கேர்ள் ·ப்ரெண்டுதான்

5. ப்ரேக் தி ரூல்ஸ் (மாரோ மாரோ) - வாலி - **** / 5

பீச்சில் பார்க்கும் முதல் பார்வையிலேயே மயக்க வைக்கும் பிகினி இளங்கன்னி.
நியு யார்க்கின் தெருக்களில் டப்பாவை வைத்து கலக்கும் ஹிப் ஹாப்; கூட கொஞ்சம்
ஹார்ட் ராக்; பாடல் வரிகளின் போது பாப்; பல genres அனாயசமாகக் கலங்கடிக்கிறது.

கவர்ந்த வரி:
பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு!
பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு!

சாதா வரி:
வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு!

6. சீக்ரெட் ஆ·ப் சக்சஸ் (சகசரிகமே) - வாலி - **.5 / 5

'மாட்டீ ஓஸே' என்று ஒரு ரகசியம் பரிபாஷையில் சொல்கிறார்கள்.
அது என்னது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு இன்றே திருட்டு விசிடி
கிடைக்கும் வழியை சொல்வேன்! கர்னாடிக சங்கீதம் தெரியாத பாக்யராஜ்
'ஓ...' என்று கத்தியே போட்டியை வெல்வது போல் பாட்டும் ஹிட்.

சாதா வரி:
தப்பான ரூட்டில் சென்று ரைட்டான ரூட்டைக் கண்டோம்.

முரண் வரி:
இந்த இசை சொந்த இசை!?

7. ப்ளீஸ் சார் - ??? - * / 5

மெலடி/ப்ளூஸ் என்றும் யாரும் ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்பதால்,
இங்கும் பாப்/ரீ-மிக்ஸ் வேலைகள் உண்டு.

8. தீம் ம்யூசிக் - *** / 5

நிறைய டெக்னோ, கொஞ்சம் ட்ரம்ஸ், தொட்டுக்க ஹெவி மெடல்;
படத்தின் மற்ற பாடல்களோடு ஒத்துப் போகிறது.

பாய்ஸ் - இலக்கியம் இல்லாத படைப்பு போல சுவாரசியமான பாடல்+இசை.

அன்புடன்,
-பாலாஜி

ஞாயிறு, டிசம்பர் 07, 2003

சில பழைய மொழிகள் ---->

புண்ணியத்துக்குப் பழைய புடவை கொடுத்தா,
வீட்டு முன்னாலே போயி, முழம் போட்டு பார்த்தானாம்.

கூரை ஏறி, கோழி பிடிக்கத் தெரியாதவன்,
வானம் ஏறி வைகுண்டம் போறேனான்.

எள்ளுதான் புண்ணாக்குக்காக காயுறதுதான்,
எலிவால் என்னத்துக்குக் காயறது?

எல்லாரும் நெல்லை உலர்த்தினா,
எலி வாலை உலர்த்தியதாம்.

சனி, டிசம்பர் 06, 2003

The buzzword seems to be Manushyaputhiran
பாஸ்டன் பாலாஜி


அம்மா இல்லாத முதல் ரம்ஜான்

அம்மா இல்லாத
முதல் ரம்ஜான்
நன்றாய் நினைவிருக்கிறது
அம்மாவைப்போலவே.

எல்லா வீடுகளுக்கும்
வெள்ளையடித்த சுவர்களையும்
எங்களுக்கு
ஞானத்தையும் கொண்டுவந்த
ரம்ஜான்.

அதிகாலையில்
குளிக்க எழுப்பிவிடும்
அம்மாவை எழுப்பிவிட
அன்று யாருமில்லை.

தூங்காத இரவை
சூரியன் எடுத்துச் சென்றபின்
எழுந்தோம்.

உலகம் முழுவதற்கும் போதுமான
நிராதரவும், ஏழ்மையும்
எங்கள் வீட்டில்
கப்பிக்கிடந்தது.

பிறரது
இரக்கத்தின் கனத்தை
பொறுக்கச் சக்தியில்லாத
தங்கை
கொடுத்தனுப்பப்பட்ட
எல்லாப் பட்சணங்களையும்
திருப்பியனுப்பிவிட்டு
ஐதீகம் மீறி
எண்ணெய் சட்டி
பற்றவைத்தாள்

தந்தை சாப்பிடாமலே
தொழுகைக்குச் சென்றார்.
அவரைப்போன்றோரின்
காதல்பற்றி
கவிதைகளில் குறிப்பிடப்படுவதில்லை.

சின்னத் தம்பியை
கட்டாயப்படுத்தி
புத்தாடை அணிவித்தோம்.

அம்மா இறந்த இரவில்
'இனிமேல்
வரவே வராதா ?'
என்றழுத பிள்ளையை
அப்படியே விட்டுவிட முடியாது.

ஆண்டுக்கொருமுறை
தெருவெல்லைகள் கடந்து
வீடுவீடாய்ச் செல்லும்
உறவுக்காரப் பெண்கள்
எங்கள் வீட்டில்
நுழையாமலே கடந்துசென்றனர்.

அம்மா இறந்த மறுநாள்
சாவு பயத்தில்
மெடிக்கல் செக்-அப்
செய்துகொண்டவர்கள்தான்
அவர்கள்.

(அம்மாவுக்கு சாகிற வயசா ?
சாகிறதுக்கு வயசா ?)

நரம்புகளைத் தூண்டும்
மந்திரங்களின் பேரொலியுடன்
தொழுகை ஊர்வலம்
வீதியில் சென்றது.

பாட்டியின் கைகள்
ஏன் அவ்வளவு பயங்கரமாய்
நடுங்கின ?

மூலைக்கு மூலை
சாவு சிரித்தது.

அம்மாவை
நீலம் பாரித்த முகத்துடன்
மீண்டும் தூக்கிவந்து
கிடத்தியதுபோலிருந்தது.

முந்தைய ரம்ஜானில்
இந்த அளவுக்கு
இல்லாமல் போவோம் என
நினைத்திருப்பாளா ?

பண்டிகைகள் கொண்டாடாத
நாத்திகனான நான்
முகத்தை மூடிக்கொண்டு
அழுதேன்.

பின்னர்
வேறு ரம்ஜான்கள் வந்தன.

அதிகாலைக் குளியல்,
வெள்ளையடித்த சுவர்கள்,
வீட்டில் கூட்டம்,
புத்தாடைகளின் நறுமணம்,
அம்மா இடத்தில் அண்ணி.

எல்லாமே
எப்படியோ
சரிக்கட்டப்பட்டு
திரும்பிவிடுகிறது.

ஆனால்,
நானந்த
முதல் ரம்ஜானை
பத்திரமாய் வைத்திருப்பேன்.

ஏனெனில்,
அல்லாவை எதிர்த்து
எங்கள் அம்மாவுக்காக
கொண்டாடப்பட்ட அது.

- மனுஷ்ய புத்திரன்

'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பிலிருந்து

வெள்ளி, டிசம்பர் 05, 2003

கொஞ்ச நாளைக்கு புதிய ப்ளாஃகில் பழைய வலைப்பூக்கள் மட்டுமே. படிக்காதவர்கள் படித்துத் துன்பமுறுக.

ஹே ராமும் பாபாவும்
------------------------
ஹே ராம்: காதல் இளவரசன் ஆஸ்காருக்காக எடுத்தது.
பாபா: சூப்பர் ஸ்டார் தன் மதிப்பை உயர்த்த எடுத்தது.

ஹே ராம்: கதை ஆரம்பிப்பது 1946.
பாபா: நிஜம் ஆரம்பிப்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.

ஹே ராம்: கதை முடிவது 1999.
பாபா: இனிமேலதான் க்ளைமேக்ஸே.

ஹே ராம்: மொகஞ்சதாரோவுக்கு ஆதாரம் இருக்கிறது.
பாபா: இமயமலைக்கும் உண்டு.

ஹே ராம்: ஆனால், 2000 வருஷம் கழித்து எலும்பு கிடைப்பதெல்லாம் புருடா.
பாபா: சாமி கண்ணைக் குத்திடும்.

ஹே ராம்: முடிவில் பாதாள சாக்கடையில் இறங்குகிறார் சாகேத் ராம்.
பாபா: முடிவில் அரசியலில் இறங்குகிறார் பாபா.

ஹே ராம்: மகாத்மாவை கேவலப் படுத்துவது போல் தோன்றினாலும் முடிவு நெகிழ வைக்கிறது.
பாபா: "பாபாஜி"யை நம்பாதது போல் ஆரம்பித்தாலும்...

ஹே ராம்: தேவையில்லாத கிரா·பிக்ஸ்.
பாபா: (கேரளா சென்றாலும்) அடிதடிக்கு கிரா·பிக்ஸ் தேவைதான்.

ஹே ராம்: கிரீஷ் கர்னாட், சௌகார் ஜானகி, ஓம் பூரி, நாசர் என பலர் வீணடிக்கப்பட்டார்கள்.
பாபா: ரஜினியையும், "ராமகிருஷ்ணணையும்" தவிர மற்றவர்கள்.

ஹே ராம்: பாதியில் வந்த இளையராஜா ஏமாற்றவில்லை.
பாபா: முழுவதுமாக இருந்த ரெஹ்மான் காப்பாற்றவில்லை.

ஹே ராம்: சென்னை, கல்கத்தா, காசி, டில்லி.
பாபா: கோலா வளாகம், பெங்களுர் போதும்.

ஹே ராம்: தோல்விக்குக் காரணம் படம் பாமரனுக்குப் புரியவில்லை.
பாபா: படம் தோல்வியே இல்லை.

ஹே ராம்: ஒழுங்காக மார்க்கெட்டிங் செய்து இருந்தால் ஆஸ்கார் கூட வசப்பட்டிருக்கும் .
பாபா: நிறைய செய்யாமல் இருந்திருந்தால் எதிர்பார்ப்புக்கு
ஏற்றபடி இருந்திருக்கும்.

ஹே ராம்: சரிகாவுக்கு சிறந்த காஸ்ட்யூமர் தேசிய விருது கிடைத்தது.
பாபா: அனுப்பினால் அடுத்த வருஷம் திரைக்கதைக்குக் கிடைக்கும்.

ஹே ராம்: நான் தெரிந்துகொண்டது - அவனவனுக்கு அடி விழும்வரை ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
பாபா: அடி விழுந்து அடுத்தவர்களை கொலை செய்யாமல் இருக்க வேண்டுமானால் காதலிக்காதே; கல்யாணம் செய்யாதே.

ஹே ராம்: நம்பலாம்.
பாபா: நம்புவார்கள்.

வியாழன், டிசம்பர் 04, 2003

மீண்டும் வணக்கம், நமஸ்தே சொல்லி, 'உ', 786 எல்லாம் போட்டு ஆரம்பிக்கிறேன்.


Wednesday, August 13, 2003





அடாவடித்தனமா? 'எதையும் தாங்கும் இதயமா'? நோ நான்சென்ஸ் நிர்வாகமா?

டாக்டர் புரட்சி தலைவியின் அரசு குறித்த கேள்விகள் இருக்கட்டும். சென்னையின் ஹைட் பார்க்
இடித்ததை எதிர்த்தும்
ஆதரித்தும் பல கருத்துகள் எனக்கும் தோன்றியது. ஆற்ற வேண்டியது எவ்வளவோ இருக்க, எதிர்கட்சிகள் எதிர்ப்பதும்,
ஆளுங்கட்சி ஆதரிப்பதும், நாம் மண்டை காய்வதும் ஏனோ இதை எனக்கு
அலசப்பட வேண்டிய விஷயமாக்கவில்லை.

குமரி அனந்தன் இனி திலகர் கட்டம் என அழைக்க வேண்டும் என்று
அறைகூவ மாட்டார். தினகரனும் வேறு இடத்தைத் தேட வேண்டும்.
ஆனால், சி·பி சொல்வது போல் இன்னும்
தமிழக அரசு இணைய தளத்தில் சீரணி அரங்கம் குறிப்பிடப் படுகிறது.

'ரமணா'வில் விஜய்காந்த் பிணத்துக்கு வைத்தியம் பார்க்கவைப்பது போல்,
சீரணி அரங்கத்தை அரசிடம் ஹீரோ முன்பதிவு செய்வது மாதிரி காட்சியமைத்து,
நீதிமன்றத்தின் உதவியுடன் கட்டி தரவும் வைப்பது மாதிரி
சங்கரோ, ரஜினியோ படமெடுத்தால் மெய்மறந்து கைதட்டுவேன்.



Posted by Bala Subra on 04:04 PM







---------------------------------------------


Friday, August 01, 2003





கொஞ்சம் விளம்பரம்... கொஞ்சம் ஆவணப் படுத்தல்...

என்னுடைய முதல் குறுநாவல் தமிழோவியத்தில் வெளிவருகிறது. எப்படி இருக்கு என்று சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

இதுவரை நான்கு பகுதிகள் வந்துள்ளது.


Posted by Bala Subra on 11:04 AM







---------------------------------------------


Thursday, July 31, 2003





சிலோன் தமிழ்

இலங்கையின் தமிழ் பிரசன்னாவுக்கு பிடிக்குமாம்.

எனக்கும் கூட ரொம்ப விருப்பம். மனதைக் கவரும் சொல்லாட்சி நிறைந்தது.

மதியின் இந்த கட்டுரையை படித்தால் நிச்சயம் நீங்களும் சொல்வீர்கள்.

மதி இன்னும் நிறைய இந்த மாதிரி நடையில் எழுத வேண்டும். தமிழ் வலைப்பூக்கள் மாதிரியே, இலங்கைத் தமிழ்
இணையத்தில் தென்படும் இடங்களையும் தொகுக்கலாம்.


Posted by Bala Subra on 03:27 PM







---------------------------------------------


Tuesday, July 29, 2003






இருவர் - ஒரு பார்வை

பாஸ்கரும் சதாவும் தலைப்பில் இருக்கும் இருவர்.

சதா: பண வரவு செலவு கணக்கை பார்த்துக் கொண்டே
எழுத்துலகில் கால் வைக்க முயற்சிப்பவன். அவனுடைய
வங்கி சகி ப்ரியா.

பத்திரிகையில் வேர் ஊன்றிய பாஸ்கர், சினிமாவுக்கு தாவ
முயற்சிக்கிறான். பாஸ்கருக்கு கணினித் தாரகை ப்ரீத்தி
என்றால், சிம்ரனின் ரசிகனாய் சதாவுக்கு அனு இருக்கிறாள்.

இவர்கள் சந்திக்கும் நபர்களின் மூலம் வாழ்க்கையின்
வெற்றி அபத்தங்கள், திரை உலக ரகசியங்கள், சமூக
அவலங்கள் விவாதிக்கப் படுகிறது. வணிக பத்திரிகைகள் எவ்வாறு
இயங்குகிறது, ஒரு வெற்றி இயக்குனரின் படத்தின் முடிவில்
ஆறு பாயிண்ட் சாய்வெழுத்தில் வரும் பெயர்களின் பிண்ணனி
என்ன, குறுகிய காலத்தில் ஒளி ஓவியராவது எப்படி போன்ற
செய்முறை விளக்கங்களை கதை மாந்தர்கள் மேலாண்மை
விளக்கங்கள் அடிப்படையில் அள்ளித் தெளிக்கிறார்கள்.

பல இடங்களில் சினிமா, பத்திரிகை உலகங்கள் தோல்
உரித்துக் காட்டப்படுவது, ஆச்சரியக்குறிகளும், 'நெசமாவா'வும்
சொல்ல வைக்கும்.

சீரியஸ் பிரச்சனைகளை தத்துவ மருந்தாய் ஆராய்ந்து
கொண்டிருந்தாலும், அனுவின் காதல் பகுதிகள் ஜனரஞ்சகமாய்
வந்து செல்கிறது. இன்னொரு தென்றல், 'பார்த்திபன் கனவு'
மாடர்ன் ஸ்னேஹாவாக ப்ரீத்தி வந்து போகும் பகுதிகள்.

வருடத்துக்கு ரெண்டு ஹிட் கொடுக்கும் இசை சைக்ளோன்
ஆகட்டும், படத்துக்குப் படம் உருகி நடித்து கதாபாத்திரமாகவே
மாறும் புது ஸ்டார் ஆகட்டும், நூறு வித்தியாச படங்கள் கொடுத்த
பிறகும் திருப்தி இல்லாமல் தொலைக்காட்சியிலும் புதுமுகங்களை
அறிமுகபடுத்தும் இயக்குனர் அரசர் ஆகட்டும், கதையின் ஒரு
சீனில் வந்து போகும் மீடியா செய்தி நாயகர்கள் நிஜத்தை நினைவு
படுத்துகிறார்கள்.

தலித் இயக்கங்களின் வளர்ச்சி குறித்து பாராட்டும் சதா, பிராமணீய
எதிர்ப்புக் கொள்கைகளையும், திராவிட கட்சிகளின் மூன்று
மாமாங்க லாவண்யங்களையும் தொடாமல் விட்டது தொக்கி
நிற்கிறது. ஆசிரியர் பல வரலாறு நிகழ்வுகளில் வாசகருக்கு சாம்பிள்
மட்டுமே காட்டிவிட்டு, சக்கையை கழற்றி விட்டு விட்டார்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் மூட் அமைக்க மைலாப்பூர் முதல் வேப்பேரி
வரையிலான சென்னை பேட்டைகளை உதவிக்கு அழைத்துக் கொள்கிறார்.
தனியாக ஒரு பகுதியை படித்தால் கூட ஒரு சிறுகதை உணர்வு
கிடைப்பது, நாவலின் பலமா, பலவீனமா என்பதை அறியேன்.

நெடுங்கதைக்காக படிப்பவர்கள் இதை தவிர்ப்பது நலம்.
விகடன் டெலிசீரியலாக அறுபது காரெக்டர், முந்நூறு திருப்பம்
என்று எல்லாம் கொடுத்து குழப்பாமல் செல்லும் நடை. கடைசி
அத்தியாயத்தில் சடக்கென்று ப்ரேக் போட்டு, 'முற்றும்' பலகைதான்
மற்ற வளர்ந்த நாடுகளோடு ஒட்டாத சியரா லியோன.

சில மேல்தட்டு நபர்கள் வந்து சென்றாலும், வெங்கடேஷ் நடுத்தர
வர்க்கம் என்னும் சூழலை விட்டு இன்ச் கூட நகரவில்லை.
நான் பார்த்த, வளர்ந்த மிடில் க்ளாஸ் தெளிவாக விவரிக்கப் படுகிறது.
உளவியல் காரணங்களுடன் அலசப்படுகிறது. தீர்வுகள்
தீர்மானிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி டாகுமெண்ட்
செய்யப்படுகிறது.

உலகம் விரும்பும் படி வாழ்வதா அல்லது மனம் சொல்லும் படி
வாழ்க்கையை அமைத்துக் கொள்வதா என்னும் இரு தலை
எண்ண வெளிப்பாடுகளே பாஸ்கர் சதாவின் இருவர்.

அசை போட வேண்டிய பகுதி: பிள்ளையார் சதுர்த்தி - அத். 20
சினிமா சான்ஸ் கிடைத்தால் படிக்க வேண்டிய பகுதி: அத். 23

ரசித்த பன்ச் வரிகள்:
1. மக்களுக்குத் தேவை ஜில்லென்ற கனவு. எதார்த்தமல்ல.

2. தேவைக்கேற்ப உப்புமா கிளறும் வேலையைத்தான் அவன்
செய்து கொண்டிருந்தான்.

3. "இதத்தான் நான் மிடில் கிளாஸ்னு சொல்றேன்...
தைரியமா எந்த முடிவும் எடுக்க முடியாம, இது தப்பா அது
ரைட்டான்னு மண்டைய ஒடச்சிக்கற பாரு..."

4. எதுவும் பக்கத்தில் இருந்தால் அதன் சிறப்பு புலப்படுவதில்லை.

5. அர்த்தங்கள் உற்பத்தி செய்யப்படுவன. அந்த அர்த்த நம்பிக்கைத்
தூண்களின் மேல் கட்டப்படும் கோபுரங்களே வாழ்க்கை. இந்த
அர்த்தங்களையும் நம்பிக்கைகளையும் கேள்வி கேட்கும் பழக்கம்
உண்டானதே பெருந்தவறோ?
*------------*------------*------------*------------*
இருவர்: ஆர். வெங்கடேஷ்.
மதி நிலையம் - 222 பக்கங்கள் - ரூ. 55/-

*------------*------------*------------*------------*


Posted by Bala Subra on 10:11 PM







---------------------------------------------


Monday, July 28, 2003





நானும் வலைப்பூக்களும்

ஒரு வழக்கமான திங்கள் காலை. பத்து மணிக்கு அலுவலகத்திற்குள்
நுழைந்தவுடன் பார்த்தால், தொலைபேசியின் குரல்மடலுக்கான விளக்கு
மின்னி மின்னி காட்சியளித்தது. செய்தி என்னவென்று போட்டு பார்த்தால்
என்னுடைய பாஸ்; அவசர வேலையன்றை அன்றிரவுக்குள் 'முடிக்க
முடியுமா' என்ற அன்பு கட்டளை. அவரை அழைத்து, அந்த வேலையின்
கஷ்டங்களை விளக்கி, வாரயிறுதி வரை வாய்தா வாங்கிக் கொண்டேன்.

ஆசுவாசபடுத்திக் கொள்வதற்காக இணையக் குழுக்கள் பக்கம் தலை
நீட்டினேன். என்னுடைய சனி, ஞாயிற்றின் நிகழ்வுகளை பதிவு செய்து
அனுப்பித்தேன். வேறு சிலரின் குறிப்புகளுக்கு இரண்டு வரி பதில் கொடுத்தேன்.
உள்பேசி குறுகிட்டது. மீண்டும் என்னுடைய மேலாளர்.

'ஒரு நிமிடம் இங்கு வர முடியுமா?'

சென்றவுடன் அவரும் என்னுடைய வலைப்பதிவில் குடி கொண்டிருந்தார்.

'இதனால்தான் அவசர வேலை முடிக்க முடியாது என்றாயா?'

என் வேலைக்கு 'டாட் காம்' வைக்கும் கேள்வியை முன் வைக்க,
அவற்றை 'மேட்ச் ·பிக்ஸிங்'கில் மாட்டின கபில் தேவ்வாய் சமாளித்தேன்.

Web Blog எனப்படும் வலைப்பூக்கள், ஒருவரின் தனிபட்ட வலை பக்கம்.
ஒரு சிலர் அனைவருக்கும் திறந்து விடுகிறார்கள்; சிலர் தங்களின்
படைப்புகளை வெளியிட்டுக் கொள்கிறார்கள். சிலர் தாங்கள் மேயும் இணைய
தளங்கள், கண்ணுற்ற படங்கள், கேட்ட செவிவழி வதந்திகள், படித்ததில் பிடித்த
வரிகள், பார்த்த நிகழ்ச்சிகள், எனத் தொகுத்தளிக்கிறார்கள். பலர் தங்களை
படைப்பாளியாகவும், பத்திரிகையாளனகவும், தேர்ந்த விமர்சகராவுமே எண்ணுகிறார்கள்.
அடுத்தவரின் டைரியை படிக்க விரும்பும் அனைவரும், நேசித்து நுழைகிறார்கள்.

நய்பால் போன்ற பலர் டைரி குறிப்புகளை வைத்து சிறுகதை எழுதியுள்ளார்கள்.
அமெரிக்காவில் 'ரியாலிடி டிவி'யின் மோகம் ஆட்கொண்ட இந்நேரத்தில்,
வலைப்பூக்கள் புகழ் பெறுவது எளிதானது. மற்றவரின் அந்தரங்கங்கள் அறிவது முதல்
குறிப்பிட்ட கருப்பொருட்களில் ஆழ்ந்த அறிவை சீக்கிரம் பெறுவது வரை பல
உபயோகங்கள் உடையது இந்த வலைப்பூ.

வலைப்பூ, தமிழ் இணையக் குழுக்களில் நிறைய காணப்படுகின்றன.
பூக்களாய் இல்லாமல் பல சமயம் அனுப்புபவர்களுக்குக் தோட்டாக்களாக
மாறிய அனுபவங்கள் என் நண்பர்களில் பலருக்கு உண்டு. எங்களுடைய
12டிகூத்தாடிஸ் மடலாடற்குழுவில் பள்ளி தோழி, தனது காதலனின்
குணாதிசயங்களை விவரித்ததை, எங்கள் பக்கங்களுக்குள் தடுக்கி விழுந்த,
fiancee படித்துவிட, நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனது.

இணைய உலகில் கிட்டதட்ட முப்பது லட்சம் வலைப்பூக்கள் உள்ளன. இவற்றுள்
தமிழ் வலைப்பூ ஒரு கை விரல்களை நீட்டுவதற்குள் அடங்கி விடும். ஆங்கில
எழுத்தாளர்கள் மிக்கி கௌஸ், ஆண்ட்ரூ சலைவன் போன்றோரின் வலைப்பூக்களுக்கு
இணையத்தில் பலத்த ஆதரவும் எதிர்பார்ப்பும் உள்ளது. அவ்வாறே தமிழ் இணையக்
குழுக்களில் எழுதும் இரா. முருகன், மாலன், போன்றோருக்கும், அவர்கள் எங்கு
வலைப்பூக்கிறார்கள் என்று அறிந்தவர்களிடத்தில் வரவேற்பு உள்ளது. ஆனால்
ஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் சில ஊடகங்களில் எழுதினாலும், முழுமையாக
பயன்படுத்துவதில்லை.

மற்றவர்களின் கவனத்தைக் கவர்வதாற்காகவே பலர் தங்கள் அபிப்ராயங்களையும்,
சிலர் தங்கள் படுக்கையறை விவரங்களையும் அனைவரும் படிக்க அனுப்புகிறார்கள்.
கலை தாகத்துக்காக படம் எடுக்கும் கமலுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள்
இல்லை.

கடந்த வருடத்தில், ஹார்வார்ட், எம்.ஐ.டி போன்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்
அதிகாரபூர்வமாகவே வலைப்பூக்க விட்டன. அதிவிரைவில் தினபூமி படிப்பதை
நிறுத்திவிட்டு, வலைப்பூவில் நண்பர்கள் சொல்லும் தகவல்களும், பாதிக்கபட்டவர்களின்
நேரடி அனுபவங்களும் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

தனி மனிதனின் குரல், பாரெங்கும் உரத்து ஒலிக்கக் கூடிய வாய்ப்பை பறை
சாற்றுகின்றன வலைப்பூக்கள். கேட்க வைப்போமா?

-பாலாஜி
பாஸ்டன்

வலைப்பூக்கள் பெயர் ஆக்கம் நன்றி: திரு. மணி மு. மணிவண்ணன்


Posted by Bala Subra on 03:56 PM







Tuesday, August 19, 2003





அனு மாலிக்-களும் ப்ரியதர்ஷன்-களும்

'விசில்' படத்தில் ஒரு பாடல் வரும்.

'திருடி திருடி சுட்ட பழம்' 'வருடி வருடி சுடாத பழம்டா'
'தடவி தடவி சுட்ட பழம்' 'தழுவி தழுவி சுடாத பழம்டா'

விசில் படம் 'Urban Legend'-இன் FDA சான்றிதழ்
கிடைக்கக்கூடிய 100 சதவிகித மொழி மாற்றம். ஆங்காங்கே "Scream", "I Know What You Did Last Summer"-உம் சிறிய அளவில் கலந்திருப்பார்கள்.

'கற்றது பெற்றதில்' ப்ரமோசன் கொடுக்கையில்,
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 'ராசநாராயண்' கதை என்று வக்காலத்து வாங்க மட்டும் வசனகர்த்தா தவறவில்லை.

கமல் அளவு வேணாம். வெளிநாட்டு சரக்கை, லோக்கல் நாக்குக்கு கலந்து கொடுக்க
கமலின் ஒரு துளியை அடைவதற்காகவாவது, அவரிடம் க்ளாஸ் கேக்க வேண்டும்.


Posted by Bala Subra on 04:43 PM







---------------------------------------------


Monday, August 04, 2003





பொருளாதார மந்த நிலை கட்டுப்படுத்தப்பட்டு விட்டது?

தேசிய பொருளியல் ஆய்வு மையம் ஒரு சுவாரசியமான ஆனால் பயனில்லாத தகவலை
வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார சரிவு நவம்பர் 2001-இல் முடிந்து
விட்டது என்கிறார்கள். விரிவான செய்தியை ஹ¥வர்ஸில் படிக்கலாம்.

எனக்குத் தெரிந்து கணினி தெரிந்த இந்தியர்களுக்கு இன்னும் எளிதில் மாற்று
வேலை கிடைப்பதில்லை. ஜாவா தெரிந்தவர்களும், கற்கால மெயின்·ப்ரேம்
வித்தகர்களும், பச்சை அட்டை இருந்தாலும் இரு வருட காலமாகத் ததிங்கிணத்தோம்
போட்டுக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். ஹெச்-1 பி மக்கள் நிலையோ இன்னும்
கொடுமை.

நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்குப் பஞ்சப்படி, கசையடி பெறாமல் கம்பெனி மாறுதல்
என சில சௌகரியங்கள் இருக்கிறது. விசா மக்களுக்கோ ஓரிரு வாரங்கள் மட்டுமே,
வேலை போனபிறகு ஊர் சுற்ற அனுமதி. அதற்குள் தங்கள் உடமைகளை பொட்டலம்
கட்டிக்கொண்டு கூடுவாஞ்சேரியோ, கீழக்கரையோ வந்து சேர வேண்டியதுதான்.

ராஜ்ஜியத்தில் மும்மாரி பெய்யாவிட்டாலும், அரசர் சரியில்லை என்று சொல்லும் நம்ம
ஊர் பழக்கம் அமெரிக்காவிலும் நிறைய உண்டு. வீட்டில் உட்கார்ந்து தண்ட சோறு
சாப்பிடுபவர்களின் சதவிகிதம் கடந்த பத்தாண்டுகளிலேயே இல்லாத அளவு மிக
அதிகமாக ஆறரை விழுக்காட்டில் இருப்பதற்கும், அதிபர் ஜார்ஜ் புஷ்தான் காரணம்
என்கிறார்கள் எதிர்கட்சிகள்.

'எனது நீதிபதிகள் மக்களே' என்ற புஷ், புதிய திட்டம் தீட்டுவதில் புத்தியை
செலவழிக்காமல், அவர்களை அடுக்கு மாடி அங்காடிகளுக்கு சென்று செலவழிக்க
சொல்கிறார். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா நானூறு வெள்ளிகளுக்கு
காசோலை அனுப்பி வைக்கப் போகிறார்கள் புஷ்ஷின் அரசாங்கம். ஏதோ அவசரத்துக்கு
கைமாத்துப் பணமாவது கொடுக்கிறானே என்று அடுத்த வருடம் வரை ஞாபகத்தில்
வைத்திருந்து யானை சின்னத்தில் குத்துவார்களா?


Posted by Bala Subra on 03:48 PM









தமிழும் எளிமையும்

"ஹிந்திக்கு எதிராக எனக்கு ஒரு வருத்தம் உண்டு. அது எளிமையாக இருக்க வேண்டும்!
என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கே சில சமயம் விளங்குவதில்லை"
-வாஜ்பாய்

நன்றி: இந்தியா டுடே


Posted by Bala Subra on 02:40 PM







---------------------------------------------


Thursday, July 31, 2003





சொந்தக் கதை சோகக் கதை

என்ன்னுடைய கம்பெனிக்கு நேரம் சரியில்லை. எல்லாம் ஜுபிடர் பெயர்ச்சியினால்தான்
என்று நினைக்கிறேன். மூன்று மடங்கு அதிகம் காசு கேட்பவன் பக்கம்
நியாயம் இருக்கிறதா என்று தீர ஆராயுமாறு நீதிமன்றம் சொல்லி விட்டது!

இந்த ஏலக்குத்தகை குறித்த நிகழ்வுகளைக் காணும் போதெல்லம், ஏனோ Mr. பாரத் படம்
நினைவுக்கு வந்து செல்கிறது. எது எப்படியோ அம்பிகாவுக்கு வேறு வேலையாவது கிடைத்து
இருந்தது. எனக்கும் ஒரு சுபமான தீர்ப்பு, அடுத்த குருப் பெயர்வுக்குள்ளாவது தெரிய வேண்டும்.


Posted by Bala Subra on 03:43 PM







---------------------------------------------


Thursday, July 24, 2003





பொய் சொன்ன வாய்க்கு (மட்டுமே) போஜனம்

தருண் தேஜ்பால் ஒரு உருக்கமான மின்மடல்
அனுப்பி இருந்தார். டெஹல்காவின் சோகக்கதையை
சுருக்கமாக சொல்லி, சந்தாதாரர் ஆகுமாறு இறைஞ்சி
இருந்தார். சீக்கிரமே ஒரு வாரயிறுதி செய்தித்தாள்
ஆரம்பிக்கிறார்கள்.

ஆரம்பித்த ஒரு வருடத்துக்குள் ராணுவ பேர அம்பலம். அங்கு ஆரம்பித்தது
சனிப் பெய்ர்ச்சி. தலித்துகளின் எதிரி; அர்ஜுன் சிங் உறவினர்; காங்கிரஸ்
ஆதரவாளர்; விபச்சாரத்துக்கு துணை போகிறவர்கள் என குற்றம் சாட்டிய
எதிரணி சுறுசுறுப்பான 120 பேரை மூன்றாக குறைத்திருக்கிறார்கள்.

மீரா நாயர், ஷாருக், சோபா டே, என பல பிரபலங்களை ஆதரவு கொடுக்க
வைத்து அக்டோபரில் பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள். ராம் ஜெத்மலானி,
நய்பால், கபில் சிபல், ஷ்யாம் பெனகல் என்று சிந்தனையாளர்களை அடக்கி
ஒரு ஆலோசகர் குழுவையும் அமைத்து இருக்கிறார்கள்.

('நேட்சர் பவர்' விளம்பரத்தின் உதவியுடன்)
'நல்ல விஷயங்கள் அதிகம் இருந்தால் ஆதரிக்கத்தானே வேண்டும்'?

அடி குறிப்பு:
தமிழில் ஒரு பழமொழி உண்டு:
'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது!'

தமிழின் அனைத்து பழமொழிகளையும் பழுது பார்த்து, புது யுகத்திற்கு ஏற்ப
செப்பனிட வேண்டும்.



Posted by Bala Subra on 05:52 PM







---------------------------------------------


Wednesday, July 23, 2003






ஐந்து வயதிலும் ஆசை வரும்


நான் பள்ளியில் பயாலஜி படிக்காதவன். ஆனால், அப்பொழுதே மாணவர்களுக்குக்
கலவிக் கல்வி பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று அறைகூவலிட்டுக்
கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள், ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு,
பாலியல் கல்வி பயிற்றுவிக்கப் பரிந்துரைக்கிறார்கள். முக்கியமாக
பசங்களுக்குக் கற்று கொடுத்தாலே போதும் என்கிறார்கள்.

ஒரு குழந்தை கூச்சப் பட்டுக் கொண்டோ, பயப்பட்டுக் கொண்டோ இருந்தால்
தவறான தகவல்களை கற்றுக் கொள்ளும். அதற்காக, பெரியவங்க விஷயத்தை
புட்டுப் புட்டு வைத்து விட்டால், களங்கமில்லாத இள வயதை இழக்க நேரிடும்.
பெற்றோரே குழந்தைகளோடு நெருக்கமான, சுதந்திரமான உறவை வைத்துக்
கொண்டாலும் இந்த சந்தேகங்களை கேட்டுத் தெளிவார்களா?

ஒரு பெண் 'எந்த கான்டம் எப்படி உபயோகிப்பது' என்று தன்னுடைய தந்தையிடம்
கேட்டால், அவரின் பதில் என்னவாக இருக்கும்? இருக்க வேண்டும்?
வயசுக்கு வருவது, குழந்தை எப்படி பிறக்கிறது என்பதோடு நிறுத்திக் கொள்ள
வேண்டும்!?

நன்றி: பிபிசி




Posted by Bala Subra on 03:59 PM







---------------------------------------------


Tuesday, July 22, 2003






இவ்வாறு சொன்னால்?
longitude - நில நிரைக்கோடு

Posted by Bala Subra on 06:01 PM









பிரான்சில் ஈ-மெயிலுக்குத் தடா

·பிரென்ச் அரசாங்கம் 'E-Mail' என்னும் வார்த்தையை உபயோகிக்கத்
தடை செய்துள்ளது. ஏற்கனவே 'வாக்மேன்' நீக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டிலும் இவ்வாறு பலமுறை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ இருக்கும் பலகைகளைத் தமிழ்படுத்துவது;
ரயில் நிலையங்களில் கரி பூசுவது என்று...

பிரான்ஸ் செய்வதால் தமிழர்கள் செய்தார்களா?
தமிழரைப் பார்த்து ·பிரான்ஸ் செய்கிறதா?

('கொடி அசைந்ததும் மெட்டில் படிக்கலாம்')

நன்றி: சிலிகான்.காம்



Posted by Bala Subra on 05:51 PM











தமிழ் எழுத்துரு வரவழைப்பதற்குள் தாவு தீர்ந்து விட்டது.
உதவி பக்கத்தில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும்?



Posted by Bala Subra on 05:39 PM









வணக்கம்

Posted by Bala Subra on 03:55 PM






புதிய இடுகைகள் முகப்பு